search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலாஜா அரசு மருத்துவமனை"

    வாலாஜா அரசு மருத்துவமனையில் மாணவிக்கு சிகிச்சையளித்த காவலாளி இளங்கோவை சஸ்பெண்டு செய்து அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
    வாலாஜா:

    வாலாஜாவில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு வாலாஜா, ஆற்காடு, ராணிப்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கடந்த 25-ந் தேதி திருவலம் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவி ஆசிரியை திட்டியதால் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அப்போது மருத்துவ மனையில் காவலாளியாக பணிபுரியும் இளங்கோ என்பவர் மாணவிக்கு சிகிச்சை பார்த்துள்ளார். மேலும் அவர் மாணவிக்கு குளுக்கோஸ் ஏற்றியுள்ளார்.

    இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் மருத்துவ அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர்.

    இணை இயக்குனர் யாஸ்மின் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    25ம் தேதி இரவு 7மணியளவில் மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அதே நேரத்தில் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்த 6 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்கள். அந்த நேரத்தில் மாணவியும் ஐ.சி.யுவிற்கு மாற்றப்பட்டார். அப்போது காவலாளி இளங்கோ அங்கு சென்றுள்ளார்.

    அவர் குளுகோஸ் ஏற்றி அங்குள்ள ஊசியின் கேப் டிராவில் போட்டு உள்ளார். ஆனால் அவர் அந்த மாணவிக்கு சிகிச்சை அளிக்கவில்லை.

    இருந்தாலும் சிகிச்சை பெற்ற நேயாளியிடம் காவலாளி சென்றது குற்றம். எனவே காவலாளி இளங்கோவை சஸ்பெண்டு செய்துள்ளோம்.

    மேலும் அப்போது பணியில் இருந்த நர்சுகளுக்கும் மெமோ கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.


    ×