என் மலர்
வேலூர்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் சிறையில் 22-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெயில் கைதிகளை போன்று செல்போன் வாட்ஸ் அப் வீடியோ காலில் மனைவி நளினி மற்றும் உறவினர்களிடம் பேச அனுமதிக்கும்படி முருகன் ஜெயில் நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தார். ஆனால் இதற்கு ஜெயில் அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை.
அதனால் மனமுடைந்த முருகன் ஜீவசமாதி அடைய வேண்டி கடந்த 1-ந் தேதி முதல் ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஜெயிலில் வழங்கப்படும் உணவை ஏற்காமல் யாருடனும் பேசாமல் இருக்கும் அவரை டாக்டர்கள் தினமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஜெயில் அதிகாரிகள் அவரிடம் உண்ணாவிரதத்தை கைவிட கூறியும் முருகன் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். இந்த நிலையில் அவர் நேற்று 22-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.

வேலூரில் வியாபாரிகள், தொழிலாளர்கள் 950 பேருக்கு ஒரே நாளில் சளி மாதிரி சேகரிப்பட்டன.
வேலூர்:
வேலூர் மண்டி தெரு, லாங்கு பஜார், நேதாஜி மார்க்கெட்டில் பணிபுரிந்த அரிசி வியாபாரி உள்பட 10-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
அதைதொடர்ந்து நேற்று நேதாஜி மார்க்கெட்டில் கடை வைத்துள்ள வியாபாரிகள் மற்றும் காய்கறி சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆகியோருக்கு வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கிலும், அரிசி மண்டி, வெல்ல மண்டி, நவதானிய மண்டி வியாபாரிகள் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு வேலூர் மண்டித் தெருவிலும் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் 10 மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு வரிசையாக அனைவருக்கும் பரிசோதனை செய்தனர்.
ஒரே நாளில் 950 பேருக்கு முகாமில் சளி மாதிரி சேகரிப்பட்டன. இந்த சிறப்பு முகாமை வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன், நகர் நல அலுவலர் சித்ரசேனா உதவி கமிஷனர்கள், சுகாதார அலுவலர்கள் ஆகியோர் மேற்பார்வையிட்டனர். சளி மாதிரி பரிசோதனை முடிவுகள் வரும் வரை வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும், அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

வேலூர் சிறையில் விசாரணை கைதி ஜன்னல் கம்பியை வயிற்றில் குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பல்லக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மகன் சாந்தகுமார் (வயது 24), தொழிலாளி. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண்ணும் காதலித்தனர். அப்போது சாந்தகுமார் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி, அந்தப் பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அதில் அந்தப் பெண் கர்ப்பமானார்.
இதையடுத்து அவர், சாந்தகுமாரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தினார். ஆனால் அதை ஏற்க மறுத்த அவர், அந்த இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். அதிர்ச்சி அடைந்த இளம்பெண் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசில் காதலன் மீது புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே, 7 மாத கர்ப்பிணியான இளம்பெண்ணுக்கு கடந்த மே மாதம் திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டது. அவர், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு குறை பிரசவத்தில் ஆண் குழந்தைப் பிறந்தது. சாந்தகுமார் அதன்பிறகும் தனது காதலியை மனைவியாக ஏற்க மறுத்தார். 3-ந்தேதி சாந்தகுமார் வேறொரு பெண்ணை அவசரமாக ரகசிய திருமணம் செய்தார்.
இதையறிந்த போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சாந்தகுமாரை கைது செய்தனர். அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர். விசாரணை கைதியான சாந்தகுமார் நேற்று காலை சிறையில் தங்கியிருந்த அறை ஜன்னல் கம்பியை வளைத்து வயிற்றில் குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த சக கைதிகள் சிறை அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.
சிறை அலுவலர்கள் விரைந்து வந்து சாந்தகுமாரை மீட்டு சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு, அவருக்கு முதலுதவி அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் சிறையில் கைதி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் செல்லியம்மன் கோவிலில் வருகிற 24-ந் தேதி பள்ளி மாணவிக்கு நடைபெற இருந்த திருமணத்தை சமூகநல அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர்.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரியில் 18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு புகார் வந்தது அதன்பேரில், வேலூர் பெண்கள் ஒருங்கிணைப்பு சேவைமைய நிர்வாகி பிரியங்கா, சமூகநல அலுவலர்கள் ரம்யா, சங்கரி மற்றும் சத்துவாச்சாரி போலீசார் அங்கு சென்று விசாரித்தனர்.
அதில், சத்துவாச்சாரி முருகன் தியேட்டர் தெருவில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியிருக்கும் 14 வயது சிறுமிக்கும், போளூரை சேர்ந்த 24 வயது வாலிபருக்கும் வருகிற 24-ந் தேதி வேலூர் செல்லியம்மன் கோவிலில் திருமணம் செய்ய ஏற்பாடு நடந்து வருவது தெரிய வந்தது.
மேலும் விசாரணையில், பெங்களூருவில் தாயுடன் வசித்து வரும் சிறுமி 9-ம் வகுப்பு படித்து முடித்துள்ளதும், தந்தை இல்லாத காரணத்தால் மாணவிக்கு உடனடியாக உறவினரின் மகனுக்கு திருமணம் செய்து வைக்க தாயார் முடிவு செய்துள்ளார். அதனால் அவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மகளை அழைத்து சத்துவாச்சாரியில் உள்ள அவருடைய தாய் வீட்டிற்கு வந்துள்ளார். கடந்த மாதம் போளூரில் சிறுமிக்கு திருமணம் நடத்த முயன்றுள்ளார். இதனை அறிந்த சமூக நலத்துறை அதிகாரிகள் அதனை தடுத்து நிறுத்தினர். மேலும் மணமகன், மணமகள் குடும்பத்தினரை எச்சரித்து அனுப்பி உள்ளனர். கொரோனா தொற்று காரணமாக மாணவி அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்படவில்லை.
இந்த நிலையில் வருகிற 24-ந் தேதி வேலூர் செல்லியம்மன் கோவிலில் திருமணம் நடத்த இருவீட்டாரும் ஏற்பாடு செய்து வந்தனர். மாப்பிள்ளை உள்பட மணமகன் வீட்டாரை வேலூருக்கு பஸ் மூலம் வரவழைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் இந்த திருமணத்தில் மாணவிக்கு சிறிதும் விருப்பம் இல்லை. அவர் தொடர்ந்து படிக்கவே விரும்பி உள்ளார். அதனால் மாணவி தனது உறவினர் மூலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததும் தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து சமூகநல அலுவலர்கள், போலீசார் அந்த மாணவியின் தாயாரை அழைத்து 18 வயது நிரம்பாத பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். ஆனாலும் மாணவியின் தாயார் தனது மகளுக்கு திருமணம் செய்து வைப்பதில் உறுதியாக இருந்தார்.
அதையடுத்து சமூகநல அலுவலர்கள், சிறுமி திருமணத்தை தடுத்து நிறுத்தும் விதமாக மாணவியை மீட்டு கொரோனா பரிசோதனை செய்து அரியூர் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 26 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 503 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 477 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 503 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 106 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று நடவடிக்கையாக வேலூர் மாநகராட்சி மீன் மார்க்கெட்டுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
வேலூர்:
வேலூர் மக்கான் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான மீன் மற்றும் இறைச்சி மார்க்கெட் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வந்தன. இந்த மார்க்கெட்டிற்கு வெளிமாநிலங்கள், பிறமாவட்டங்களில் இருந்து மீன்கள் வந்தன. அவை இங்கு மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை செய்யப்பட்டது. ஞாயிறு மற்றும் பண்டிகை நாட்களில் மார்க்கெட்டில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். தற்போது கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து மீன்கள் விற்பனை செய்ய வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காமல் ஏராளமானோர் குவிந்தனர். அதனால் கொரோனா தொற்று பரவும் அபாயநிலை காணப்பட்டது. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.
அதன்பேரில் மீன்மார்க்கெட்டில் மொத்த விற்பனை செய்யவும், வேலூர் பழைய பெங்களூரு சாலையோரம் உள்ள லாரி ஷெட்டில் சில்லரை விற்பனை செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீன்மார்க்கெட்டில் பொதுமக்கள் அதிகமாக கூடுவார்கள் என்பதால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மீன்மார்க்கெட் திடீரென மூடப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டது. சில்லரை விற்பனை கடைகளை லாரி ஷெட்டிற்கு மாற்றம் செய்யப்பட்ட பின்னர் மீன்மார்க்கெட் திறக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுக்கம்பாறை மருத்துவமனையில் ஒருவாரமாக கொரோனா அறிகுறி இல்லாத 25 பேர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
வேலூர்:
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்த நபர்களுக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு 150-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் தினமும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
அதனால் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களில் ஒருவாரத்துக்கு மேல் கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் வேலூர் இ.எஸ்.ஐ., பென்ட்லேன்ட் மருத்துவமனைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறனர். அங்கு அவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். இந்த நிலையில் அடுக்கம்பாறை மருத்துவமனையில் ஒருவாரமாக கொரோனா அறிகுறி இல்லாத 25 பேர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

வேலூர் நேதாஜி காய்கறி மார்க்கெட் நாளை மறுநாள் முதல் 30-ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணம் அடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வேலூர் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில் வேலூரில் நேதாஜி காய்கறி மார்க்கெட் நாளை மறுநாள் முதல் 30-ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அதிகம் பரவி வருவதால் தாமாக முன்வந்து கடைகளை மூட காய்கறி வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். அனைத்து தொழிலாளர்களுக்கும் பரிசோதனை செய்து அதன் முடிவு வந்த பிறகே மார்க்கெட் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக 3 இடங்களிலும், 3 வாரச்சந்தைகளையும் காய்கறி விற்க பயன்படுத்த வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:
* வேலூரில் துணிக்கடைகள், நகைக்கடைகள், ஞாயிறு, செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் மட்டுமே இயங்கும்.
* காய்கறி, மளிகைக்கடைகள், திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே செயல்படும்.
* இறைச்சிக்கடைகள் ஞாயிறு மற்றும் புதன் கிழமைகளில் காலை 6 முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இயங்கும்.
* மொத்த வியாபாரம் செய்யும் மளிகை, அரிசி கடை, திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் இரவு 10 முதல் காலை 6 வரை இயங்கும்.
* ஓட்டல், பேக்கரிகள் திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் காலை 6 முதல் மாலை 6 மணி வரை பார்சல் மட்டுமே வழங்கலாம்.
* மருந்துக்கடைகள், பெட்ரோல், பங்க்குகள், உழவர் சந்தை ஆகியவை தினசரி இயங்கும்.
* மேலும் வேலூரில் உள்ள அழகு நிலையம், முடிதிருத்தும் நிலையம், ஸ்பா ஆகியவற்றை ஜூன் 30 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் உள்பட 63 பேருக்கு ஒரேநாளில் கொரோனா உறுதியானது. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தென்னைமர தெருவில் தனியார் ஸ்கேன் சென்டர் மூடப்பட்டது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. ஆனாலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட பிறமாவட்டங்களில் இருந்து வேலூருக்கு வருபவர்களால் மற்ற நபர்களும் கொரோனாவினால் பாதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நேற்று முன்தினம் மாவட்டத்தில் 59 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று ஒரேநாளில் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 383 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர் மண்டித்தெருவில் உள்ள அரிசி கடையில் பணியாற்றிய 29 வயது வாலிபருக்கு கடந்த 14-ந் தேதி கொரோனா தொற்று உறுதியானது. அவருக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் அவர்களின் சளிமாதிரி சேகரிக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வந்தன. அதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 வயது சிறுவன் உள்பட 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாது.
இதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திராவில் இருந்து அதே பகுதிக்கு திரும்பிய தொழிலாளிக்கு கொரோனா சில நாட்களுக்கு முன்பு உறுதியானது. அவரின் குடும்பத்தை சேர்ந்த 9 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டது நேற்று உறுதியானது. 2 குடும்பத்தை சேர்ந்த 20 பேரும் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டது. மேலும் அந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
வேலூர் தென்னைமர தெருவில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் பணிபுரிந்து வந்த ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதையடுத்து அங்கு பணிபுரிந்தவர்களுக்கு சளிமாதிரி சேகரிக்கப்பட்டன. மேலும் அங்கு கிருமிநாசினி தெளித்து, அந்த சென்டரை மாநகராட்சி அதிகாரிகள் மூடினார்கள். சைதாப்பேட்டையில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 15, 17 வயது சிறுமிகள் உள்பட 3 பேர், வேலூர் ரெட்டியப்பபா தெருவை சேர்ந்த தம்பதியினர், ஓல்டு காட்பாடி புருசோத்தமன்நகரை சேர்ந்த தாய், மகள் உள்பட மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 63 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் வசித்த தெருக்கள் சீல் வைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சில பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 63 பேரின் குடும்பத்தினர், உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜெயிலில் 18-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்த முருகனின் உடல்நிலை திடீரென சோர்வடைந்தது. அதையடுத்து டாக்டர்கள் உடனடியாக அவருக்கு குளுக்கோஸ் ஏற்றினர்.
வேலூர் :
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலில் தனி அறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வேலூர் ஆண்கள், பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் தங்களின் குடும்பத்தினர், உறவினர்களிடம் செல்போனில் வாட்ஸ்-அப் வீடியோ கால் மூலம் பேசி வருகிறார்கள். முருகன் தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் வீடியோ கால் மூலம் பேச சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை.
அதனால் மனவேதனை அடைந்த முருகன் ஜீவசமாதி அடைய வேண்டி கடந்த 1-ந் தேதி முதல் ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். யாருடனும் பேசாமல் தியான நிலையில் இருக்கும் முருகனின் உடல்நிலையை ஜெயில் டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். நேற்று 18-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்த முருகனின் உடல்நிலை திடீரென சோர்வடைந்தது. அதையடுத்து டாக்டர்கள் உடனடியாக அவருக்கு குளுக்கோஸ் ஏற்றினர். இதுவரை முருகனுக்கு 5 முறை குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளது. உண்ணாவிரதத்தை கைவிடும்படி பலமுறை கோரிக்கை விடுத்தும் அவர் அதனை ஏற்கவில்லை என்று ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர் பாகாயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், சத்துவாச்சாரி போக்குவரத்து தலைமை ஏட்டு உள்பட 59 பேருக்கு ஒநோளில் கொரோனா உறுதியானது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் 55 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 320 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர் அரியூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய பெண் போலீஸ் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் முதல் பணியாற்றி வந்தார். அவருக்கு கொரோனா தொற்று கடந்த சில நாட்களுக்கு முன்பு உறுதியானது. அந்த பெண் போலீஸ் பாகாயம் போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். அதைத்தொடர்ந்து போலீஸ் குடியிருப்பில் உள்ள அவரது குடும்பத்தினர் மற்றும் பக்கத்து வீடுகளை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சளிமாதிரி சேகரிக்கப்பட்டன.
இந்த நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வந்தன. அதில், பெண் போலீசின் தாயார், பக்கத்து வீட்டில் வசிக்கும் போலீஸ்காரரின் 2 குழந்தைகள், மற்றும் அதே குடியிருப்பில் வசிக்கும் வேலூர் பாகாயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், சத்துவாச்சாரி போக்குவரத்து தலைமை ஏட்டு உள்பட 4 பேருக்கும் கொரோனா உறுதியானது.
அதைத்தொடர்ந்து போலீஸ் குடியிருப்பு முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் சப்-இன்ஸ்பெக்டர் பணியாற்றிய பாகாயம் போலீஸ் நிலையத்திலும், தலைமை ஏட்டு பணியாற்றிய சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்திலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அங்குள்ள போலீஸ்காரர்கள் மற்றும் அவருடன் பழகிய நபர்களுக்கும் சளிமாதிரி சேகரிக்கப்பட்டன.
இதற்கிடையே பாகாயம் சப்-இன்ஸ்பெக்டர் நேற்று முன்தினம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்து சென்றுள்ளார். அதனால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களுக்கும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு பாகாயம் போலீஸ் நிலையம் மூடப்பட்டது.
பழைய காட்பாடி புருசோத்தமன்நகரை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒரு வயது பெண் குழந்தை உள்பட 4 பேருக்கும், அதே பகுதி வி.கே.டி. தெருவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கும், பேரணாம்பட்டு வி.கோட்டாவை சேர்ந்த தம்பதியினருக்கும், கஸ்பா போலீஸ் குடியிருப்பை வசிக்கும் 29 வயது பெண்ணுக்கும், நேதாஜி மார்க்கெட்டில் பணிபுரிந்த நேதாஜி விளையாட்டு மைதானம் அருகே வசிக்கும் 22 வயது வாலிபர் உள்பட 2 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 59 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் வசித்த தெருக்கள் சீல் வைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அப்பகுதியில் காய்ச்சல் அறிகுறி காணப்படும் நபர்களின் சளிமாதிரி சேகரிக்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.