என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனைக்கு 25 பேர் இடமாற்றம்

    அடுக்கம்பாறை மருத்துவமனையில் ஒருவாரமாக கொரோனா அறிகுறி இல்லாத 25 பேர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
    வேலூர்:

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்த நபர்களுக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு 150-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் தினமும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

    அதனால் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களில் ஒருவாரத்துக்கு மேல் கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் வேலூர் இ.எஸ்.ஐ., பென்ட்லேன்ட் மருத்துவமனைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறனர். அங்கு அவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். இந்த நிலையில் அடுக்கம்பாறை மருத்துவமனையில் ஒருவாரமாக கொரோனா அறிகுறி இல்லாத 25 பேர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
    Next Story
    ×