search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வேலூர் நேதாஜி மார்க்கெட் நாளை மறுநாள் முதல் மூடல்

    வேலூர் நேதாஜி காய்கறி மார்க்கெட் நாளை மறுநாள் முதல் 30-ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணம் அடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

    கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வேலூர் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று அறிவித்திருந்தார்.

    இந்நிலையில் வேலூரில் நேதாஜி காய்கறி மார்க்கெட் நாளை மறுநாள் முதல் 30-ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா அதிகம் பரவி வருவதால் தாமாக முன்வந்து கடைகளை மூட காய்கறி வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். அனைத்து தொழிலாளர்களுக்கும் பரிசோதனை செய்து அதன் முடிவு வந்த பிறகே மார்க்கெட் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக 3 இடங்களிலும், 3 வாரச்சந்தைகளையும் காய்கறி விற்க பயன்படுத்த வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். 
    Next Story
    ×