என் மலர்
செய்திகள்

வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை
வேலூரில் வியாபாரிகள், தொழிலாளர்கள் 950 பேருக்கு சளி மாதிரி சேகரிப்பு
வேலூரில் வியாபாரிகள், தொழிலாளர்கள் 950 பேருக்கு ஒரே நாளில் சளி மாதிரி சேகரிப்பட்டன.
வேலூர்:
வேலூர் மண்டி தெரு, லாங்கு பஜார், நேதாஜி மார்க்கெட்டில் பணிபுரிந்த அரிசி வியாபாரி உள்பட 10-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
அதைதொடர்ந்து நேற்று நேதாஜி மார்க்கெட்டில் கடை வைத்துள்ள வியாபாரிகள் மற்றும் காய்கறி சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆகியோருக்கு வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கிலும், அரிசி மண்டி, வெல்ல மண்டி, நவதானிய மண்டி வியாபாரிகள் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு வேலூர் மண்டித் தெருவிலும் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் 10 மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு வரிசையாக அனைவருக்கும் பரிசோதனை செய்தனர்.
ஒரே நாளில் 950 பேருக்கு முகாமில் சளி மாதிரி சேகரிப்பட்டன. இந்த சிறப்பு முகாமை வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன், நகர் நல அலுவலர் சித்ரசேனா உதவி கமிஷனர்கள், சுகாதார அலுவலர்கள் ஆகியோர் மேற்பார்வையிட்டனர். சளி மாதிரி பரிசோதனை முடிவுகள் வரும் வரை வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும், அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

Next Story