என் மலர்
வேலூர்
வேலூர் புதிய மீன்மார்க்கெட்டில் தடையை மீறி மீன்கள் விற்ற 2 கடைகள் உள்பட அரசின் விதிமுறையை பின்பற்றாத கடைகளுக்கு மாநகராட்சி கமிஷனர் சங்கரன் அபராதம் விதித்தார்.
வேலூர்:
வேலூரில் புதிய மீன் மார்க்கெட்டில் அரசின் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என நேற்று காலை மாநகராட்சி கமிஷனர் சங்கரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தடையை மீறி 2 கடைகளில் சில்லரை விற்பனையில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டது தெரிந்தது. இதையடுத்து கமிஷனர் அந்த 2 கடைகளுக்கும் தலா ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து, அந்தக் கடைகளை உடனடியாக மூடும்படி கூறினார்.
அதைத்தொடர்ந்து அவர் மார்க்கெட் முன்பகுதியில் தள்ளுவண்டி மற்றும் தரையில் வைத்து மீன்கள் விற்பனை செய்த வியாபாரிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தும்படி மாநகராட்சி ஊழியர்களிடம் தெரிவித்தார். அதன்படி மாநகராட்சி ஊழியர்கள் அங்கிருந்து மீன் வியாபாரிகளை அப்புறப்படுத்தினர்.
மேலும் மாங்காய் மண்டி அருகே உள்ள இறைச்சிக்கடைகளில் கமிஷனர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு முகக் கவசம் அணியாமல் இறைச்சி வாங்க வந்தவர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. 4-வது மண்டலத்தில் பல்வேறு பகுதிகளில் கமிஷனர் மேற்கொண்ட ஆய்வில் அரசின் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதித்து மொத்தம் ரூ.11 ஆயிரத்து 500 வசூலிக்கப்பட்டது.
ஆய்வின்போது மாநகராட்சி நகர்நல அலுவலர் சித்ரசேனா, சுகாதார அலுவலர் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
அதேபோல் வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலத்தில் உதவி கமிஷனர் மதிவாணன் தலைமையில் சுகாதார அலுவலர் சிவக்குமார் நடத்திய ஆய்வில், ஊரடங்கு உத்தரவு தடையை மீறி திறந்திருந்த 2 ஓட்டல்கள் உள்பட 13 கடைகளுக்கு அபராதம் விதித்து மொத்தம் ரூ.8 ஆயிரத்து 500 வசூலிக்கப்பட்டது. 3-வது மண்டலத்தில் சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் நடந்த ஆய்வில், இறைச்சிக்கடைகளில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காத, முகக்கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதித்து மொத்தம் ரூ.3 ஆயிரம் வசூலிக்கப்பட்டது

வேலூர் மவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இல்லை என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
வேலூர்:
வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் தான் உள்ளது. பிற மாவட்டங்களில் இருந்து வந்தவர்களால் தான் ஆரம்பத்தில் அதிக தொற்று ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து நேதாஜி மார்க்கெட், லாங்கு பஜார் உள்ளிட்ட பகுதிகளின் கடை வியாபாரிகள், ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதன் காரணமாக அவர்களின் குடும்பத்தினர், உறவினர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.
நேதாஜி மார்க்கெட், மண்டித்தெரு உள்ளிட்ட பகுதி வியாபாரிகள், ஊழியர்கள், சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் என்று 1,500 பேரின் சளி மாதிரி கடந்த சில நாட்களுக்கு முன்பு சேகரிக்கப்பட்டது. அதன் முடிவு அனைத்தும் வந்துவிட்டது. அதில் 115 வியாபாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஏராளமான வியாபாரிகள், ஊழியர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் காணப்பட்டது. ஆனால் குறைந்த நபர்களே கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட எல்லை பகுதிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு இ-பாஸ் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். வேலூர் மாவட்டத்தில் தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இல்லை. தற்போதைய நடைமுறையே தொடரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள 500 போலீசாருக்கு முழு முகக் கவசத்தை போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் வழங்கினார்.
வேலூர்:
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினர், மருத்துவத்துறையினர், காவல்துறையினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
சென்னை மாம்பலம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிய வேலூரை சேர்ந்த பாலமுரளி என்பவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பலியானார். அதைத்தொடர்ந்து போலீசாரை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனக் கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்புப் பணியில் ஈடுபடும் 500 போலீசாருக்கு முழு முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தலைமை தாங்கி, போலீசாருக்கு முழு முகக்கவசம் வழங்கி பேசினார்.
அப்போது அவர், மருத்துவமனைகளில் கொரோனா தொற்று வார்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசார், சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசார், வாகனத் தணிக்கையில் ஈடுபடும் போலீசார் கட்டாயம் முழு முகக் கவசம் அணிய வேண்டும், என்றார். அதைத்தொடர்ந்து 500 போலீசாருக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் போலீசாருக்கும் விரைவில் முழு முகக் கவசங்கள் வழங்கப்பட உள்ளன. இதை, அணியாமல் பணியில் ஈடுபடும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும், எனப் போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்தார். நிகழ்ச்சியில் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் நாகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் மத்திய சிறையில் தொடர்ந்து 27 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்த முருகன் தன் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
வேலூர் :
முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலில் தனிஅறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள மற்ற கைதிகளை போன்று செல்போன் வாட்ஸ்-அப் வீடியோ காலில் குடும்பத்தினர், உறவினர்களிடம் பேச அனுமதிக்கும்படி முருகன் ஜெயில் நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தார். ஆனால் அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
அதனால் மனவேதனை அடைந்த முருகன் கடந்த 1-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். யாருடன் பேசாமல் தியான நிலையில் இருக்கும் அவரின் உடல் சோர்வு அடையும்போது குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வருகிறது. மேலும் முருகனின் உடல்நிலையை ஜெயில் வளாக டாக்டர்கள் தினமும் கண்காணித்து வருகிறார்கள். ஜெயில் அதிகாரிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அவர் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து அவர் 26-வது நாளாக நேற்று முருகன் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.

இந்நிலையில் ராஜூவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் ஜெயிலில் தொடர்ந்து 27 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்த முருகன், சிறை கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்திய பின் இளநீர் குடித்து தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொண்டார்.
வேலூர் பெண்கள் ஜெயிலில் 8 கைதிகளின் சளி மாதிரி சேகரிக்கப்பட்டன.
வேலூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் மாகரல் பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டி சாராயம் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 22-ந்தேதி வேலூர் மத்திய பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதியானது. அதைத்தொடர்ந்து மூதாட்டி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் அறையில் தங்கியிருந்த 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று பெண்கள் ஜெயில் வளாகத்தில் வைத்து சிறப்பு பரிசோதனை முகாம் நடந்தது. இதில், கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட மூதாட்டி அறையில் இருந்த 8 பேருக்கும் அரசு டாக்டர்கள் கொரோனா அறிகுறி உள்ளதா? என்று பரிசோதனை செய்தனர். பின்னர் அவர்களின் சளி மாதிரி சேகரிக்கப்பட்டன.

வேலூர் ஜெயிலில் தொடர்ந்து 26-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் முருகனின் உடல்நிலையை மருத்துவர்கள் தினமும் கண்காணித்து வருகிறார்கள்.
வேலூர் :
முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலில் தனிஅறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள மற்ற கைதிகளை போன்று செல்போன் வாட்ஸ்-அப் வீடியோ காலில் குடும்பத்தினர், உறவினர்களிடம் பேச அனுமதிக்கும்படி முருகன் ஜெயில் நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தார். ஆனால் அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
அதனால் மனவேதனை அடைந்த முருகன் கடந்த 1-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். யாருடன் பேசாமல் தியான நிலையில் இருக்கும் அவரின் உடல் சோர்வு அடையும்போது குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வருகிறது. மேலும் முருகனின் உடல்நிலையை ஜெயில் வளாக டாக்டர்கள் தினமும் கண்காணித்து வருகிறார்கள். ஜெயில் அதிகாரிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அவர் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில் 26-வது நாளாக நேற்று முருகன் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 147 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 897 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 750 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 147 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 897 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 168 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

முருகன் 25-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். மேலும் அவருக்கு உடல் சோர்வு ஏற்படும் போது குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது.
வேலூர் :
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலில் தனி அறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜெயில் கைதிகளை அவரது குடும்பத்தினர், உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்று ஏற்பாடாக அவர்கள் செல்போன் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேசி வருகிறார்கள். முருகன் வீடியோ காலில் மனைவி நளினி மற்றும் உறவினர்களிடம் பேச ஜெயில் அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை.
அதனால் முருகன் ஜீவசமாதி அடைய வேண்டி கடந்த 1-ந் தேதி முதல் ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். யாருடன் பேசாமல் தியான நிலையில் இருக்கும் அவரின் உடல்நிலையை டாக்டர்கள் தினமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் அவருக்கு உடல் சோர்வு ஏற்படும் போது குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது.
இந்த நிலையில் முருகன் நேற்று 25-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.

வேலூர் சிறையில் 24 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் முருகனுக்கு உடல் சோர்வடைந்த காரணத்தால் ஒரு பாட்டில் குளுகோஸ் ஏற்றப்பட்டது.
வேலூர் :
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலில் தனி அறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாகக் கைதிகளை அவரது குடும்பத்தினர், உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்று ஏற்பாடாக அவர்கள் செல்போன் வாட்ஸ் அப் வீடியோ காலில் பேச அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
அதன்படி முருகன் செல்போன் வாட்ஸ் அப் வீடியோ காலில் மனைவி நளினி மற்றும் உறவினர்களிடம் பேச அனுமதிக்கும்படி ஜெயில் நிர்வாகத்துக்குக் கோரிக்கை வைத்தார். ஆனால் இதற்கு ஜெயில் அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. இதனால் மனமுடைந்த முருகன் ஜீவசமாதி அடைய வேண்டி கடந்த 1-ந்தேதி முதல் ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
ஜெயில் அதிகாரிகள் பலமுறை உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி கோரிக்கை விடுத்தும் அதை ஏற்க மறுத்து விட்டார். யாருடன் பேசாமல் தியான நிலையில் இருந்து வரும் முருகனின் உடல்நிலையை டாக்டர்கள் தினமும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு முருகனின் உடல்நிலை திடீரெனச் சோர்வடைந்தது. அதையடுத்து அவருக்கு ஒரு பாட்டில் குளுகோஸ் ஏற்றப்பட்டது. இந்த நிலையில் முருகன் நேற்று 24-வது நாளாக உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார்.

வேலூர் அருகே சாராய விற்பனையை தடுத்த கிராம மக்கள் மீது மலைக் கிராமத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அத்துடன் அரிவாளால் வெட்டியதில் விவசாயி ஒருவர் படுகாயம் அடைந்தார்.
அடுக்கம்பாறை:
வேலூர் அடுக்கம்பாறை அருகே சோழவரம் கிராமம் மேற்கு கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 53), விவசாயி. இவர், வீட்டுக்கு அருகில் குருமலை, வெல்லைக்கல் மலை, நச்சிமேடு மலை ஆகிய கிராமங்களுக்குச் செல்ல மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த மண் சாலை வழியாகத்தான் மலைக் கிராம மக்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று வருவது வழக்கம்.
மலைக் கிராமத்தைச் சேர்ந்த சிலர் சாராயத்தை காய்ச்சி, மண் சாலை வழியாக வாகனங்களில் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். மலைக் கிராமத்தினர் சாராய விற்பனை செய்வதால் மேற்கு கொல்லைமேடு பகுதியில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக தங்கராஜ், மலைக் கிராமத்தில் செல்லும் மண் சாலையில் கம்புகளால் தடுப்பு வேலி அமைத்துள்ளார்.
இதையறிந்த மலைக் கிராமத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட கும்பல் நேற்று நாட்டுத்துப்பாக்கி, கத்தி, அரிவாள் மற்றும் உருட்டுக்கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்து தங்கராஜ் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த விநாயகம் ஆகியோருடன் தகராறில் ஈடுபட்டனர். அப்போது மலைக் கிராம கும்பல், சாராயம் குடிக்க வருவோருக்கு வழி விடாமல் ஏன் தடுக்கிறீர்கள்? உங்களால் தான் எங்களுக்கு சாராய விற்பனையே இல்லை, எனக் கூறி தங்கராஜை தலை, முதுகு, கால்கள் ஆகிய இடங்களில் அரிவாளால் வெட்டினர்.
மேலும் தங்கராஜ் மற்றும் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளை மலைக் கிராம கும்பல் அடித்து நொறுக்கி சூறையாடினர். அவர்களை, தடுக்க முயன்றவர்கள், எதிர்த்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். கிராம மக்கள் பலரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றனர். மலைக் கிராம கும்பல் நடத்திய தாக்குதல் சம்பவத்தால், கிராமமே களேபரமாகக் காட்சி அளித்தது.
மலைக் கிராமத்தினர் அரிவாளால் வெட்டியதில் தங்கராஜ் படுகாயம் அடைந்தார். அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாராய விற்பனையை தடுத்த கிராம மக்கள் மீது மலைக் கிராமத்தைச் சேர்ந்த கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஜெயிலில் 23-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலில் தனி அறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் செல்போன் வாட்ஸ் அப் வீடியோ காலில் மனைவி நளினி மற்றும் உறவினர்களிடம் பேச அனுமதிக்கும்படி ஜெயில் நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தார்.
ஆனால் இதற்கு ஜெயில் அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. அதனால் மனமுடைந்த முருகன் ஜீவசமாதி அடைய வேண்டி கடந்த 1-ந் தேதி முதல் ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரின் உடல்நிலையை டாக்டர்கள் தினமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர் நேற்று 23-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.

வேலூர் அடுக்கம்பாறை அருகே உள்ள பென்னாத்தூரில் பெண் போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
அடுக்கம்பாறை:
வேலூர் அடுக்கம்பாறை அருகே உள்ள பென்னாத்தூர் கிராமத்தில் தொரப்பாடி பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா (வயது 38) என்பவர் பொது மருத்துவர் என அறிவித்து, கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் மருத்துவ ஆய்வகம் சம்பந்தமான படிப்பு படித்துவிட்டு, டாக்டர் என கூறிக்கொண்டு பொது மருத்துவத்திற்கு சிகிச்சை அளிப்பதாக சுகாதாரத்துறைக்கு புகார் சென்றது. அதன்படி கணியம்பாடி வட்டார மருத்துவ அலுவலர் உமாசங்கர் தலைமையிலான சுகாதாரத் துறையினர், நேற்று பென்னாத்தூரில் உள்ள மஞ்சுளா கிளினிக்கை திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் மஞ்சுளா போலி டாக்டர் என தெரியவந்ததை தொடர்ந்து மஞ்சுளாவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் நடத்தி வந்த கிளினிக் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. இதுகுறித்து புகாரின் பேரில் வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.