என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    வேலூர் பெண்கள் ஜெயிலில் 8 கைதிகளின் சளி மாதிரி சேகரிப்பு

    வேலூர் பெண்கள் ஜெயிலில் 8 கைதிகளின் சளி மாதிரி சேகரிக்கப்பட்டன.
    வேலூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் மாகரல் பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டி சாராயம் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 22-ந்தேதி வேலூர் மத்திய பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதியானது. அதைத்தொடர்ந்து மூதாட்டி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் அறையில் தங்கியிருந்த 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

    இந்த நிலையில் நேற்று பெண்கள் ஜெயில் வளாகத்தில் வைத்து சிறப்பு பரிசோதனை முகாம் நடந்தது. இதில், கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட மூதாட்டி அறையில் இருந்த 8 பேருக்கும் அரசு டாக்டர்கள் கொரோனா அறிகுறி உள்ளதா? என்று பரிசோதனை செய்தனர். பின்னர் அவர்களின் சளி மாதிரி சேகரிக்கப்பட்டன.
    Next Story
    ×