என் மலர்tooltip icon

    செய்திகள்

    முருகன்
    X
    முருகன்

    வேலூர் ஜெயிலில் முருகன் 23-வது நாளாக உண்ணாவிரதம்

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஜெயிலில் 23-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலில் தனி அறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் செல்போன் வாட்ஸ் அப் வீடியோ காலில் மனைவி நளினி மற்றும் உறவினர்களிடம் பேச அனுமதிக்கும்படி ஜெயில் நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தார்.

    ஆனால் இதற்கு ஜெயில் அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. அதனால் மனமுடைந்த முருகன் ஜீவசமாதி அடைய வேண்டி கடந்த 1-ந் தேதி முதல் ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரின் உடல்நிலையை டாக்டர்கள் தினமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர் நேற்று 23-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.
    Next Story
    ×