என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம்
    X
    வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம்

    முழு ஊரடங்குக்கு வாய்ப்பு இல்லை- கலெக்டர் சண்முகசுந்தரம்

    வேலூர் மவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இல்லை என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் கூறியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் தான் உள்ளது. பிற மாவட்டங்களில் இருந்து வந்தவர்களால் தான் ஆரம்பத்தில் அதிக தொற்று ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து நேதாஜி மார்க்கெட், லாங்கு பஜார் உள்ளிட்ட பகுதிகளின் கடை வியாபாரிகள், ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதன் காரணமாக அவர்களின் குடும்பத்தினர், உறவினர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.

    நேதாஜி மார்க்கெட், மண்டித்தெரு உள்ளிட்ட பகுதி வியாபாரிகள், ஊழியர்கள், சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் என்று 1,500 பேரின் சளி மாதிரி கடந்த சில நாட்களுக்கு முன்பு சேகரிக்கப்பட்டது. அதன் முடிவு அனைத்தும் வந்துவிட்டது. அதில் 115 வியாபாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    ஏராளமான வியாபாரிகள், ஊழியர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் காணப்பட்டது. ஆனால் குறைந்த நபர்களே கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட எல்லை பகுதிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு இ-பாஸ் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். வேலூர் மாவட்டத்தில் தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இல்லை. தற்போதைய நடைமுறையே தொடரும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×