என் மலர்
செய்திகள்

குடியாத்தத்தில் கொரோனா பாதிப்பு எதிரொலி- 3 டாஸ்மாக் கடைகளுக்கு சீல்
குடியாத்தம்:
குடியாத்தம் டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குள் குடியாத்தம் பழைய பஸ் நிலையம், சுண்ணாம்பு பேட்டை ஆற்றோரம், மேல் ஆலத்தூர் ரோடு, பொன்னம்பட்டி, கொண்டசமுத்திரம் ஊராட்சி சாமியார் மலை அருகே என 5 இடங்களில் டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளது.
தற்போது குடியாத்தத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் டாக்டர், மருந்தாளுனர், நர்ஸ் என 17 பேர் பாதிக்கப்பட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறிப்பாக சுண்ணாம்பு பேட்டை, வைதீஸ்வரன் நகர் பகுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதால் இப்பகுதியில் அருகே உள்ள பழைய பஸ் நிலையம், சுண்ணாம்புபேட்டை ஆற்றோரம், பொன்னம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
இதனையடுத்து வேலூர் டாஸ்மாக் மேலாளர் சத்யன் மேற்பார்வையில் பொன்னம்பட்டி, குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே, சுண்ணாம்பு பேட்டை ஆற்றோரம் ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை சீல் வைத்தனர்.
மேலும் வெல்டிங் எந்திரம் மூலம் கடைகள் திறக்காமல் இருக்க வெல்டிங் செய்யப்பட்டது. இந்த கடைகள் சீல் வைக்கப்பட்டதால் மது வாங்க வந்த மது பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். மற்ற டாஸ்மாக் கடைகளுக்கு சென்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.






