என் மலர்

  செய்திகள்

  முருகன்
  X
  முருகன்

  வேலூர் ஜெயிலில் முருகன் 8-வது நாளாக உண்ணாவிரதம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேலூர் ஜெயிலில் 8-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் முருகனின் உடல் நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.
  வேலூர்:

  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் அவருடைய மனைவி நளினி ஆகியோர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

  15 நாட்களுக்கு ஒருமுறை இருவரும் சந்திக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக இருவரும் சந்திக்க முடியவில்லை. நளினி, முருகன் இருவரும் காணொளி மூலம் பேச அனுமதிக்குமாறு சிறை நிர்வாகத்துக்கு முருகன் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

  ஆனால் சிறை நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது. இதனால் மனவேதனையில் இருந்த முருகன் கடந்த 1-ந்தேதி முதல் ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

  இன்று 8-வது நாளாக முருகன் உண்ணாவிரதம் இருந்தார். அவரது உடல் நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.


  Next Story
  ×