என் மலர்
வேலூர்
வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்புள்ள குட்கா பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் பிடிபட்டது. அதை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில், தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு பள்ளிகொண்டா சப்-இன்ஸ்பெக்டர்கள் சி.ரவி, மணிவண்ணன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அதிகாலை 4 மணிக்கு தார்பாய் போட்டு மூடியபடி ஒரு மினி வேன் வேலூரை நோக்கி செல்ல சுங்கச்சாவடியில் நின்றுகொண்டிருந்தது.
அப்போது வாகன தணிக்கையில் இருந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் மினி வேனை மடக்கி டிரைவரிடம் விசாரனை நடத்தினர். விசாரனையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். அதைத்தொடர்ந்து போலீசார் வேனை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று சோதனை செய்தனர். சோதனையில் 40 மூட்டைகளில் சுமார் ரூ.7 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
விசாரணயில் குட்கா கடத்திவந்தது கிருஷ்ணகிரி தாலுகா பெத்ததாளபள்ளியை அடுத்த பாஞ்சாலுார் கிராமத்தை சோந்த பூங்காவனம் மகன் சதீஷ் (வயது 22) மற்றும் ராஜஸ்தான் மாநிலம் பின்மால் தாலுகா பீம்புரா கிராமத்தை சேர்ந்த ஜீதாராம்ஜி மகன் பவீஸ்குமார் (22) என்பதும், ஓசூரை அடுத்த அத்திப்பள்ளியில் இருந்து கடத்திவந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து குட்கா கடத்திவந்த வேன் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுபற்றிய தகவல் கிடைத்தவுடன் வேலூர் துணைபோலீஸ்சூப்பிரண்டு திருநாவுக்கரசு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பறிமுதல் செய்யப்பட்ட குட்காவை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து சதீஷ் மற்றும் பவீஸ்குமார் ஆகியோரை பள்ளிகொண்டா போலீசார் கைது செய்தனர்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த விநாயகர் சதுர்த்தி விழாவை வீட்டிலேயே கொண்டாட வேண்டும் என ஆலோசனைக்கூட்டத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் அறிவுறுத்தினார்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் வேலூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் உதவி கலெக்டர் கணேஷ் வரவேற்றார். இதில், பா.ஜ.க., இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விநாயகர் சதுர்த்தி விழா குழு நிர்வாகிகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பேசியதாவது:-
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், அவற்றை ஊர்வலமாகக் கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தடை விதித்து முதல்-அமைச்சர் எடப்படி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
எனவே அரசின் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு உடல்நலம் பாதித்தால் விழா கொண்டாடாமல் இருப்பதுபோல் இந்தக் கொரோனா தொற்று காலத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடாமல் இருக்க வேண்டும். இதன் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்து முன்னணி வேலூர் கோட்ட பொறுப்பாளர் ராஜேஷ், கோட்ட தலைவர் மகேஷ் ஆகியோர் கூறுகையில், வருகிற 22-ந்தேதி வழக்கம்போல் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய அனுமதி கொடுக்க வேண்டும். அனுமதி கொடுத்தால் சமூக இடைவெளியை கடைப்பிடித்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவோம். பின்னர் மேள, தாளத்துடன் ஊர்வலமாகச் செல்லாமல் சிலைகளை கொண்டு சென்று கரைப்போம். அனுமதி கொடுக்காவிட்டால் தடையை மீறி வழிபாடு செய்வோம். அதற்காக, போலீசார் எங்களை கைது செய்தால் சிறைக்கு செல்லவும் தயாராக உள்ளோம். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 1,000-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய உள்ளோம், என்று தெரிவித்தனர்.
இந்து மக்கள் கட்சி வேலூர் மாவட்ட தலைவர் சக்கரபாணி கூறுகையில், விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து சமூக இடைவெளியை பின்பற்றி வழிபாடு செய்ய அனுமதி அளிக்க வேண்டும். இந்து மக்கள் கட்சி சார்பில் 30-க்கும் மேற்பட்ட சிலைகளை வைத்து வழிபாடு செய்ய உள்ளோம். அனுமதி அளிக்காவிட்டால் தடையை மீறி விழா நடத்துவோம், என்றார்.
பா.ஜ.க. வேலூர் மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஆ.கே.பாஸ்கர், எஸ்.எல்.பாபு, மாவட்ட துணைத் தலைவர் ஜெகன்நாதன் ஆகியோர் கூறுகையில், விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அரசு அனுமதிக்க வேண்டும். விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து வழிபாடு செய்து அன்றைய தினமே நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதேபோல் மேலும் பல அமைப்பினர் தங்கள் கோரிக்கைகள், கருத்துகளை பதிவு செய்தனர்.
அனைவரின் கருத்துகள், கோரிக்கைகளை கேட்டறிந்த பின்னர் கலெக்டர் கூறுகையில், தீபாவளி, பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது போல் வீட்டிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும். உங்கள் கோரிக்கைகளை அரசுக்கு அறிக்கையாக அனுப்பி வைக்கப்படும், என்று தெரிவித்தார்.

காட்பாடி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காட்பாடி:
காட்பாடி தாராபடவேடு பகுதியை சேர்ந்தவர் 58 வயது நபர். இவர் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார். இவருக்கு காய்ச்சல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. காந்திநகரில் 84 வயது மூதாட்டி உள்பட 6 பேரும், காட்பாடியில் 3 பேரும் ,சேனூர், செங்குட்டை, ஆரிமுத்து மோட்டூர், திருநகர் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளானார்கள்.
மேலும் கரிகிரி, கரசமங்கலம், பிரம்மபுரம், தாராபடவேடு, குகையநல்லூர், பாலாஜிநகர், முத்தமிழ்நகர், பாரதிநகர், விருதம்பட்டு, சின்னபள்ளிகுப்பம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் என மொத்தம் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதில் 15 பேர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், 13 பேர் வேலூரில் உள்ள தனியார் மருத்துமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். தொற்றால் பாதித்தவர்களின் வீடுகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் இன்று மேலும் 155 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,664 ஆக அதிகரித்துள்ளது.
வேலூர்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று புதிதாக 5 ஆயிரத்து 950 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 38 ஆயிரத்து 55 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 6 ஆயிரத்து 19 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 78 ஆயிரத்து 270 ஆக அதிகரித்துள்ளது.
மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று அதிகமாக உள்ளது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் இன்று மேலும் 155 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,664 ஆக அதிகரித்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 200 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,436 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 8,236 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 200 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,436 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 7,010 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 110 பேர் உயிரிழந்துள்ளனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வருகிற 20-ந் தேதி வேலூர் வருகிறார். அப்போது வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களின் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்கிறார்.
வேலூர்:
முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று அந்த மாவட்டங்களில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்து, முடிக்கப்பட்ட பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும் வருகிறார்.
அதேபோன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுசெய்து ஆலோசனை வழங்கி வருகிறார்.
அதன் ஒருபகுதியாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் வருகிற 20-ந் தேதி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.
இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு வளர்ச்சி பணிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்கிறார். அப்போது பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
மேலும் 3 மாவட்டங்களிலும் முடிக்கப்பட்ட பணிகளை திறந்துவைத்து, புதிய திட்டங்களை தொடங்கிவைக்கிறார். இந்த ஆய்வு கூட்டத்தில் கலெக்டர்கள் சண்முகசுந்தரம் (வேலூர்), சிவன்அருள் (திருப்பத்தூர்), பிரியதர்ஷினி (ராணிப்பேட்டை) மற்றும் 3 மாவட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

கூட்டுறவுத் துறையில் அதிகாரியோ அல்லது ஊழியரோ யார் முறைகேடு செய்தாலும், அதிலிருந்து தப்பிக்க முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

வேலூரில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டார்.
அப்போது, அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதிலளிக்காமல் அந்த கேள்வியை அவர் தவிர்த்தார்.

வயது முதிர்ந்த பெற்றொரை பராமரிக்காததால் மகன் பெயரில் எழுதி வைத்த சொத்துக்களின் பதிவை உதவி கலெக்டர் ரத்து செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு டவுன் கெங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜாகண்ணு (வயது 80). இவருடைய மனைவி வசந்தா (75). இவர்களுக்கு முரளி, சங்கர், பிரபு என்ற 3 மகன்களும் தமிழ்ச்செல்வி, பத்மா என்ற 2 மகள்களும் உண்டு. 20 ஆண்டுகளுக்கு முன்பு மூத்த மகன் முரளி இறந்து விட்டார். 2-வது மகனிடம் ராஜாக்கண்ணும், வசந்தாவும் வசித்து வந்தனர். 3-வது மகன் பிரபு பெங்களூருவில் கார் டிரைவராக இருந்தார்.
2-வது மகன் சங்கர் 2017-ம் ஆண்டு இறந்து விட்டார். இதையடுத்து ராஜாக்கண்ணு பெங்களூருவில் உள்ள இளைய மகன் பிரபுவை பேரணாம்பட்டுக்கு வந்து விடுமாறும், வயது முதிர்ந்த எங்களை பராமரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். அதைத்தொடர்ந்து பேரணாம்பட்டு கெங்கையம்மன் தெருவில் ரூ.25 லட்சம் மதிப்பிலான 2 வீடுகளை இளைய மகன் பிரபுவின் பெயரில் பெற்றோர் எழுதி வைத்தனர்.
சில மாதங்கள் பெற்றோரை நன்றாக கவனித்து வந்த பிரபு அதன்பிறகு சரியாக பராமரிக்காமல் கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. வசந்தாவும் நோயால் அவதிப்பட்டு வந்தார். வயது முதிர்ந்த தம்பதியர் கடும் சிரமப்பட்டு வந்தனர்.
வயது முதிர்ந்த தம்பதியர் தங்களுக்கு ஏற்பட்ட நிலைமைப் பற்றி வெளியூரில் உள்ள தங்களின் மகள்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களும் வந்து பிரபுவுக்கு அறிவுரை வழங்கினர். ஆனால் சகோதரிகளின் பேச்சை அவர் கேட்கவில்லை, பெற்றோரையும் அவர் சரியாக பராமரிக்காமல் இருந்துள்ளார். இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி ராஜாக்கண்ணு, வசந்தா தம்பதியர் வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரத்திடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் எங்களை மகன் பிரபு கவனிக்கவில்லை, கொடுமைப்படுத்துகிறார், பிரபு மீது எழுதி வைத்த சொத்துக்களின் பதிவை ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தனர்.
முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு சட்டம் 2007-ன் படி விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு குடியாத்தம் உதவி கலெக்டர் ஷேக் மன்சூருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி உதவி கலெக்டர் ஷேக்மன்சூர் விசாரணை நடத்தினார். அதில் வயது முதிர்ந்த பெற்றோரை பிரபு பராமரிக்காமல் துன்புறுத்தி வந்தது தெரிந்தது.
உடல்நலப் பாதிப்போடு ஒரு ஆட்டோவில் குடியாத்தம் உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த ராஜாக்கண்ணு, வசந்தா தம்பதியரிடம் உதவி கலெக்டர் ஷேக்மன்சூர், பிரபு பெயரில் எழுதி வைத்த சொத்துக்களின் பதிவை ரத்து செய்ததற்கான உத்தரவை அளித்தார். அந்த உத்தரவை வயது முதிர்ந்த தம்பதியர் கண்ணீர் மல்க பெற்றுக் கொண்டனர்.

அரக்கோணம் தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.வேலு உடல் நலக்குறைவால் காலமானார்.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரைச் சேர்ந்த அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக ஏ.எம்.வேலு உடல் நலக்குறைவால் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.
இவர் கடந்த 1980ல் காங்கிரஸ் சார்பிலும், 1996ல் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பிலும் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் குழந்தை திருமணம் செய்த தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வேலூர்:
அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் பெரிய ஏரியூரை சேர்ந்தவர் மோகன் (வயது 26), டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.
இந்த நிலையில் கர்ப்பமான சிறுமி கடந்த 8-ந் தேதி பிரசவத்திற்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமிக்கு 18 வயது பூர்த்தியாகும் முன்பாக திருமணம் நடைபெற்று கர்ப்பமானதை அறிந்த டாக்டர்கள் இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து போலீசார் மருத்துவமனைக்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர். மேலும் குழந்தை திருமணம் நடைபெற்றது குறித்து சிறுமியிடம் புகார் எழுதி வாங்கினர். பின்னர் மோகன் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை அறிந்த மோகன் தலைமறைவானார். அவரை போலீசார் பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் 16 வயது சிறுமிக்கு அரசு மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் ஆண்குழந்தை பிறந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

வேலூர் மாவட்டத்தில் இன்று மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,864 ஆக அதிகரித்துள்ளது.
வேலூர்:
தமிழகத்தில் நேற்று புதிதாக 5 ஆயிரத்து 834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 6 ஆயிரத்து 5 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்து 680 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று அதிகமாக உள்ளது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் இன்று மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,864 ஆக அதிகரித்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் இன்று மேலும் 87 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,778 ஆக அதிகரித்துள்ளது.
வேலூர்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் வேலூரில் இன்று மேலும் 87 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,778 ஆக அதிகரித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் சுமார் ஒரு மாதத்துக்கு பிறகு கொரோனா பாதிப்பு 100க்கு கீழ் பதிவாகி உள்ளது.