என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர்- திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு உதவிதொகை வழங்குவதில் கோடிக்கணக்கில் மோசடி நடந்ததையடுத்து வேளாண் ஊழியர்கள் 17 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    வேலூர்:

    பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனும் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது.

    இந்த திட்டத்தை பயன்படுத்தி வேளாண் அதிகாரிகள் சிலர் முறைகேட்டில் ஈடுபடுவதாக புகார்கள் பெறப்பட்டன.

    வேலூர் மாவட்டத்திலும் இதுகுறித்த புகார்கள் பெறப்பட்ட நிலையில், விசாரணை நடத்தப்பட்டது. அதில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவபர்கள் பலரும், வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் போன்று போலி முகவரி கொடுத்து 2 கட்ட தவணைத்தொகையை பெற்றிருப்பது தெரியவந்தது.

    இதன் இறுதி அறிக்கை, சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் ஒவ்வொரு கிராமத்திலும் பிஎம் கிசான் திட்ட பயனாளிகள் குறித்து விசாரித்ததில், 90 சதவீதம் போலியான முகவரிகளே இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    தொடர் விசாரணையில் வேலூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் வரையில் அரசு அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

    அதில் முதல்கட்டமாக 25 லட்சம் திரும்ப பெறப்பட்ட நிலையில், மீதமுள்ள தொகையை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக வேளாண் ஊழியர்கள் உள்பட 17 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    இந்த முறைகேடு திருவண்ணாமலை மாவட்டத்திலும் அதிக அளவில் நடந்து இருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாவட்டம் முழுவதும் சுமார் ரூ.18 கோடி முறைகேடு நடந்து இருக்கலாம் என விவசாய சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 28 ஆயிரம் பேர் போலியான ஆவணங்களை அளித்து முறைகேடாக நிதி உதவியை பெற்றிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள 18 ஒன்றியங்களிலும் இத்திட்டத்தில் பயன்பெற்ற நபர்களின் உண்மை தன்மையை விசாரணை செய்ய கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.

    அதையொட்டி ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை மோசடியாக நிதி உதவியை பெற்றவர்களிடமிருந்து ரூ.2 கோடி வரை திரும்ப வசூலித்திருப்பதாக வேளாண்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக நேற்று இரவு திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுக்கா பெருங்களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மகளிர் குழு தலைவி ஜீவாவை திருவண்ணாமலை சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையில் சப்இன்ஸ்பெக்டர் சத்யநாராயணன் மற்றும் போலீசார் கைது செய்தனர்.விசாரணையில் ஜீவா 100க்கும் மேற்பட்டவர்களுக்கு போலியாகவும், விவசாயி அல்லாதவர்களுக்கும் நிதியை வாங்கிக் கொடுத்துள்ளதாகக் தெரியவந்துள்ளது.

    தண்டராம்பட்டு பகுதியில் கிசான் சம்மான் திட்டத்தில் 2,488 நபர்களின் வங்கிக் கணக்கில் கடந்த 1-ந் தேதி தலா ரூ 2000 செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மண்டல துணை தாசில்தார் சரண் தலைமையில் வேளாண்மை துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

    வாணாபுரம், தண்டராம்பட்டு, பெருங்குளத்தூர், தானிப்பாடி, ரெட்டியார் பாளையம் ஆகிய கிராமங்களில் இயங்கிவரும்வங்கிகளில் மேற்கண்ட 2,488 நபர்களின் வங்கிக் கணக்கை முடக்கி வைக்குமாறு வங்கி அதிகாரியிடம் கோரிக்கை விடுத்தனர்.

    அதன்பேரில் அவர்களது வங்கி கணக்குகள் உடனடியாக முடக்கப்பட்டது. அவர்கள் வேளாண்மைத் துறை அலுவலகத்திற்கு சென்று உரிய ஆவணங்களை காண்பித்து தகுதியானவர்களாக இருந்தால் அவர்களுக்கு பிரதமரின் நிதியுதவி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

    வேலூர் மாவட்டத்தில் புதிதாக 158 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,510 ஆக உயர்ந்துள்ளது.
    வேலூர்:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின்  எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

    இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 11,352 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 158 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,510 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 10,085 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 172 பேர் உயிரிழந்துள்ளனர்.
    வேலூர் மாவட்டத்தில் புதிதாக 171 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,388 ஆக உயர்ந்துள்ளது.
    வேலூர்:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

    இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 11,217 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 171 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,388 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 9,947 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 171 பேர் உயிரிழந்துள்ளனர்.
    அணைக்கட்டு மலைப்பகுதியில் சாராயவேட்டைக்கு சென்ற போலீசார் மீது தாக்குதல் நடத்திய சாராய கும்பலை சேர்ந்த 2 பேர் சரண் அடைந்துள்ளனர்.
    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா அல்லேரி மலைப்பகுதிகளில் சாராய ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அணைக்கட்டு போலீசார் 7 பேர் கொண்ட குழுவினர் அல்லேரி மலைக்கு கடந்த 29-ந் தேதி சென்றனர். அங்கு விழிப்புணர்வு கூட்டத்தை முடித்துவிட்டு கொல்லி மரத்து கொல்லை என்ற பகுதியில் சாராய வேட்டைக்கு சென்றனர்.

    அப்போது சாராய வியாபாரி கணேசன் மற்றும் துரைசாமி அவரது உறவினர்கள் சுமார் 30 பேர் போலீசாரை மடக்கி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ஏட்டு ராக்கேஷ் என்பவர் திடீரென துரைசாமி என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதைபார்த்த அவரது உறவினர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஏட்டு ராக்கேஷ் தலைப்பகுதியில் சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது. இதை தடுக்க சென்ற மற்ற போலீசாரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து சாராய கும்பல் தப்பி ஓடிவிட்டனர்.

    போலீசாரை தாக்கிவிட்டு தலைமறைவான சாராய கும்பலை பிடிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன் மற்றும் துணைபோலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு ஆகியோர் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையில் நக்சலைட் தடுப்பு பிரிவு போலீசார் உள்பட 120-க்கும் மேற்பட்ட போலீசார் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் சாராய கும்பலை இரவு பகலாக தேடிவந்தனர்.

    அவர்கள் மறைந்திருக்கும் இடத்தை செல்போன் டவர்மூலம் கண்டுபிடித்து 31-ந் தேதி அவர்களை பிடிக்க சிவநாதபுரம் என்ற மலைப்பகுதிக்கு சென்றபோது போலீசாரை நோக்கி, சாராயகும்பல் துப்பாக்கியால் சுட்டது. அதைத்தொடர்ந்து சாராய கும்பலை பிடிக்கும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் 4-வது நாளான நேற்று இரவு 7 மணிக்கு சாராய வியாபாரி கணேசன் (வயது 28) மற்றும் அவரது உறவினர் துரைசாமி (52) ஆகிய 2 பேர் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு முன்னிலையில் சரணடைந்தனர். சரணடைந்த 2 பேரையும் அணைக்கட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டுசென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அ.ம.மு.க. பிரமுகரை கூலிப்படை ஏவி கொன்ற மனைவி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது43). அ.ம.மு.க. மாதனூர் ஒன்றிய பிரதிநிதியாக இருந்தார். இவரது மனைவி ஜெயந்தி (35), இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்

    ரமேஷூம், ஜெயந்தியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஜெயந்தி ஆம்பூர் அடுத்த சோலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். ஜெயந்தியின் தாய் சரஸ்வதி (65) ஆம்பூர் அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

    இந்நிலையில் கடந்த 28-ந்தேதி அதே பகுதியில் பாலாற்றிற்கு செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தின் கீழ் ரமேஷ் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    இது தொடர்பாக ஆம்பூர் டி.எஸ்.பி. சச்சிதானந்தம் மற்றும் தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர். ரமேஷ் மனைவி ஜெயந்தி, மாமியார் சரஸ்வதி ஆகிய 2 பேரின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இவர்களது நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்தனர். அதில் மனைவி ஜெயந்தி, மாமியார் சரஸ்வதி மற்றும் உறவினர்கள் சிலருடன் சேர்ந்து கூலிப்படை ஏவி ரமேஷை கொலை செய்தது தெரியவந்தது.

    இது தொடர்பாக ரமேஷின் மனைவி ஜெயந்தி, மாமியார் சரஸ்வதி உறவினர்களான மிட்டாளத்தை சேர்ந்த கவுதம் (20). ரங்காபுரத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி தனுஷ்ராஜ் (23) மேலும் கூலிப்படையான மிட்டாளத்தை சேர்ந்த ராமன் (23), செதுவாலையை சேர்ந்த விக்னேஷ்(26) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த மாதமே கார் விபத்து ஏற்படுத்தி ரமேசை கொலை செய்ய திட்டமிட்டு ரமேஷ் மீது காரை ஏற்றினர். ஆனால் ரமேஷ் அதிலிருந்து தப்பித்து விட்டார்.

    அதன்பின்னர் கடந்த 28-ந்தேதி ரமேசை மது குடிக்க அழைத்து சென்று போதை தலைக்கேறியதும் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து பாலத்தின் கீழ் பிணத்தை வீசி சென்றனர்.

    கொலையான ரமேஷின் மனைவி ஜெயந்தி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது கணவர் ரமேஷ் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். சரிவர வேலைக்கு செல்வதில்லை. குடித்து விட்டு என்னை அடித்து கொடுமைப்படுத்துவார்.

    எனது சம்பள பணத்தையும் எடுத்து கொள்வார். செல்போன் அழைப்பு வந்தாலும் சந்தேகப்பட்டு ஆபாச வார்த்தையில் பேசுவார்.

    குடிபோதையில் தினமும் அடித்து கொடுமைப்படுத்துவார். இதனால் அவரை கொலை செய்தோம் என்று கூறியுள்ளார்.

    இந்த சம்பவம் ஆம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் புதிதாக 144 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,225 ஆக உயர்ந்துள்ளது.
    வேலூர்:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

    இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 11,081 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 144 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,225 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 9,837 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 171 பேர் உயிரிழந்துள்ளனர்.
    வேலூர் மாவட்டத்தில் காய்கறி வியாபாரிகள் உள்பட 142 பேருக்கு ஒரேநாளில் கொரோனா உறுதியானது.
    வேலூர்:

    வேலூர் மாங்காய் மண்டியில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட் வியாபாரிகள், ஊழியர்கள் மற்றும் வேலூர் லாங்குபஜாரில் சாலையோர காய்கறி வியாபாரிகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சிலரின் பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தன. அதில், 3 காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா இருப்பது உறுதியனாது. அதையடுத்து அவர்கள் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். வியாபாரிகள் கடையில் பணிபுரிந்தவர்கள், அவர்களின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

    மண்டித்தெருவில் உள்ள கடை வியாபாரிக்கு சளி, இருமல் அறிகுறி காணப்படடன. அவரின் பரிசோதனையில் அவருக்கும் தொற்று இருப்பது தெரிய வந்தது. அதையடுத்து கடை ஊழியர்கள், குடும்பத்தினர் வீடுகளில் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். மாவட்டம் முழுவதும் 142 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த நர்சுகள், ஊழியர்கள் என்று 4 பேருக்கு தொற்று உறுதியானது. அதையடுத்து அவர்கள் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆம்பூரில் உள்ள தோல்தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றும் வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்தவர், குடியாத்தத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நபர், வேலூர் நகரில் பெட்டிக்கடை வைத்திருக்கும் நபர் ஆகியோரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர்.

    அதைத்தவிர வேலூர் காந்திரோட்டை சேர்ந்த 3 வயது ஆண்குழந்தை, சத்துவாச்சாரியில் 5 வயது ஆண்குழந்தை, விருபாட்சிபுரத்தில் 90 வயது முதியவர், தொற்று பாதித்த நபர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் 10 பேர் உள்பட மாநகராட்சி பகுதியில் 28 பேர் என்று மாவட்டம் முழுவதும் 142 பேர் ஒரேநாளில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதுவரை 10,965 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூர் அருகே திருமணமான ஒருவாரத்தில் தீக்குளித்து புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் அவவரை தற்கொலைக்கு தூண்டியதாக கணவரை போலீசார் கைது செய்தனர்.
    வேலூர்:

    வேலூரை அடுத்த ஜி.ஆர்.பாளையத்தை சேர்ந்தவர் மகாதேவமந்திரி. இவருடைய மகள் சந்திரலேகாவிற்கும் (வயது 24) காட்பாடியை அடுத்த பிரம்மபுரத்தை சேர்ந்த பாலாஜி (34) என்பவருக்கும் கடந்த மாதம் 23-ந் தேதி திருமணம் நடந்தது. இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இருவரும் விருந்து அழைப்பிற்காக (மறுவீடு) ஜி.ஆர்.பாளையத்துக்கு சென்றுள்ளனர். கடந்த 30-ந் தேதி வீட்டு மாடியில் உள்ள குளியலறையில் சந்திரலேகா உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    அவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்ற உறவினர்கள் உடனடியாக சந்திரலேகாவை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. வேலூர் மாஜிஸ்திரேட்டு அரசு மருத்துவமனைக்கு சென்று சந்திரலேகாவிடம் மரண வாக்குமூலம் பெற்றார். இந்த நிலையில் அன்று இரவே சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரலேகாவின் கணவர் மற்றும் பெற்றோர், குடும்பத்தினரிடம் விசாரித்தனர். மேலும் புதுப்பெண் தற்கொலை குறித்து வேலூர் உதவிகலெக்டர் கணேஷ் விசாரணை நடத்தினார். அப்போது சந்திரலேகா தீக்குளிப்பதற்கு முன்பாக எழுதி வைத்த கடிதம் ஒன்றை அவருடைய பெற்றோர் உதவி கலெக்டரிடம் அளித்தனர்.

    அந்த கடிதத்தில் சந்திரலேகா அவருடைய அப்பாவுக்கு எழுதியிருந்ததாவது:- அப்பா என்னை மன்னிச்சிடுங்க. நான் ஆசைப்பட்டு திருமணம் செய்து கொள்ளவில்லை. எனது கணவர் திருமணமான நாள் முதல் என்னை சந்தேகத்துடன் தான் பார்க்கிறார். நீ ரொம்ப அழகா இருக்க. இதுவரை யாரையும் நீ காதலித்தது கிடையாதா? என்றும், என்னை விட்டு விட்டு உன் காதலனுடன் நீ சென்று விடுவாயோ என்று டார்ச்சர் செய்கிறான். இவன் கூட என்னால் ஒருநாள் கூட வாழமுடியாது. இதுபற்றி உங்களிடமும், அம்மாவிடம் சொன்னால் என்னை சமாதானப்படுத்தி அவனுடன் வாழ சொல்வீர்கள்.

    என் உணர்வுகளை யாரும் புரிந்து கொள்ள மாட்டீர்கள். உங்களுக்கு கவுரவம் தான் முக்கியம். அவன் கூட வாழ்வதற்கு சாகலாம் என்று தோணுது. அப்பா, அம்மா என்னை மன்னித்து விடுங்கள். 2 தங்கைகளுக்கும் நல்ல மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து கொடுங்கள். இவனை மாதிரி மாப்பிள்ளை பார்த்து விடாதீர்கள். அடுத்த ஜென்மம் இருந்தா உங்களுக்கு தான் மகளாக பிறக்க வேண்டும். அப்போது இவனை மாதிரி ஒருத்தரை பார்க்க கூடாது என்று கடவுளை வேண்டிக்கிறேன். எல்லாரும் என்னை மன்னித்து விடுங்கள் என்று உருக்கமாக எழுதியுள்ளார்.

    கடிதம் மற்றும் உதவிகலெக்டர் விசாரணை ஆகியவற்றின் அடிப்படையில் சந்திரலேகாவிற்கு மனஉளைச்சல் ஏற்படுத்தியது, தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட பிரிவுகளில் இன்ஸ்பெக்டர் சுபா வழக்குப்பதிவு செய்து பாலாஜியை கைது செய்தார்.
    வேலூர் மாவட்டத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதையொட்டி வணிக வளாகங்கள், கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், விளையாட்டு அரங்கம், தியேட்டர்கள், மால்கள், சுற்றுலா தலங்கள், பூங்காக்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன. பஸ், ரெயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப தளர்வுகள் அளிக்கப்பட்டது. முதல் கட்டமாக கிராமப்புற பகுதிகளில் உள்ள கோவில்கள் திறக்க அனுமதியும், அதன்பின்னர் சில நாட்களில் நகராட்சி பகுதியில் ரூ.10 ஆயிரத்துக்கு குறைவான வருமானம் உடைய வழிபாட்டுத் தலங்களை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்பட அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறந்து வழிபாடு செய்து கொள்ளலாம் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    அதைத்தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் மூடப்பட்டிருந்த அனைத்துக் கோவில்களிலும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பக்தர்கள் அனைவரும் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தவற்காக குறிப்பிட்ட இடைவெளியில் வட்டம் போடப்பட்டுள்ளது.

    ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வேலூர் கோட்டை சுமார் 5 மாதங்களுக்கு பின்னர் திறக்கப்படுகிறது. பொதுமக்கள் காலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை கோவிலுக்கு செல்ல கோட்டை திறக்கப்பட்டிருக்கும் என்றும், பிற பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி கிடையாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தேவாலயங்கள், மசூதிகளிலும் இன்று முதல் வழிபாடு நடைபெற உள்ளது.
    ராணிப்பேட்டை அருகே வாலிபர் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் கைதான நண்பர், மனைவியுடனான கள்ளத்தொடர்பால் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
    வாலாஜா:

    ராணிப்பேட்டை அடுத்த வானாபாடி பகுதியை சேர்ந்தவர் சசி என்கிற சசிகுமார் (வயது 36). விண்ணம்பள்ளி கொடுக்கந்தாங்கல் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபு லாரன்ஸ் (35) இருவரும் நண்பர்கள்.

    இவர்கள் வழிப்பறி செயின் பறிப்பு கொள்ளை உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் பிரபு லாரன்சை கொன்று புதைத்ததாக கூறி வானாபாடி கிராம நிர்வாக அலுவலரிடம் சசிகுமார் சரணடைந்தார். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து சசிகுமாரை கைது செய்தனர்.

    நானும் பிரபு லாரன்சும் நண்பர்கள். இருவரும் சேர்ந்து செயின் பறிப்பு வழிப்பறி போன்றவற்றில் ஈடுபட்டு அதில் வரும் பணத்தை இருவரும் சமமாக பிரித்துக் கொள்வோம்.

    அவர் என்னுடைய வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வார். அப்போது எனது மனைவியுடன் அவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது எனக்கு தெரியவந்தது.

    கடந்த மே மாதம் 25 ந்தேதி அம்மூர் லாலாபேட்டை சாலையில் வானாபாடி அருகே உள்ள தனியார் நிலத்தில் மது அருந்தினோம். அப்போது பிரபுலாரன்ஸிடம் என் மனைவியுடனான கள்ளத்தொடர்பு குறித்து கேட்டேன்.

    இதில் எங்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது ஆத்திரம் அடைந்த நான் பிரபு லாரன்சின் தலையில் பீர் பாட்டிலால் பலமாகத் தாக்கினேன். மேலும் அவரது கழுத்தில் குத்தி கொலை செய்தேன்.

    யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக அந்த பகுதியில் உடலை புதைத்து விட்டேன் என்றார்.

    இதையடுத்து நேற்று மாலை பிரபு லாரன்ஸ் புதைக்கப்பட்ட இடத்தை சசிகுமார் அடையாளம் காட்டினார்.

    ராணிப்பேட்டை டி.எஸ்.பி பூரணி, இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, வாலாஜா தாசில்தார் பாக்கியநாதன் ஆகியோர் முன்னிலையில் பிரபு லாரன்ஸின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

    பின்னர் பிரேத பரிசோதனைக்காக சென்னை கிண்டியில் உள்ள ஆய்வகத்துக்கு உடற்கூறுகள் அனுப்பி வைக்கப்பட்டன.

    இது தொடர்பாக சசிகுமாரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து நகை, பணம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஆம்பூர்:

    ஆம்பூர் பெரியாங்குப்பம் காந்திநகர் எம்சி ரோடு பகுதியை சேர்ந்தவர் வேலு. இவருடைய மனைவி அம்சவேணி (வயது 60). வேலு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அம்சவேணி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று ஊரடங்கு என்பதால் கடையை திறக்காமல் வீட்டுக்குள்ளேயே இருந்தார்.

    நள்ளிரவில் வீட்டு ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள் மற்றும் ரூ.60 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு வீடு முழுவதும் கடையில் இருந்த மூக்குப்பொடியை தூவி விட்டு சென்றுள்ளனர்.

    இன்று காலை எழுந்த அம்சவேணி பீரோ உடைக்கப்பட்டு திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

    இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசில் அம்சவேணி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்து சென்றனர். தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து நகை, பணம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கொரோனா தொற்று காரணமாக காட்பாடியில் சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் உள்பட 110 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
    காட்பாடி:

    காட்பாடி உள் சரகத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனால் காட்பாடி, விருதம்பட்டு, திருவலம் ஆகிய போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசாருக்கு சளி பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து நேற்று காட்பாடி டான்போஸ்கோ மெட்ரிக் பள்ளியில் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது. முகாமுக்கு காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். வேலூர் மாநகராட்சி 1-வது மண்டல சுகாதார ஊழியர்கள் போலீசாருக்கு சளி பரிசோதனை செய்தனர். இதில், சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் உள்பட 110 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    கொரோனா தொற்று காரணமாக விருதம்பட்டு போலீஸ் நிலையம் மூடப்பட்டுள்ளது. இருந்தாலும் போலீஸ் நிலைய வளாகத்தில் பந்தல் அமைத்து போலீசார் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று வருகின்றனர்.
    ×