என் மலர்tooltip icon

    வேலூர்

    ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் 50 படுக்கைகள் கொண்ட தனி வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளை கண்காணித்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்களுக்கு பாதிப்பு இல்லை என்றாலும் கட்டாயம் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

    வேலூர் மாவட்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து வந்த நபர்களின் விவரங்களை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. அதில் கடந்த மாதம் 30-ந்தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து 71 பேர் வேலூருக்கு வந்துள்ளனர். அதில் 42 பேர் கண்டறியப்பட்டு டாக்டர்கள் கண்காணிப்பில் உள்ளனர்.

    அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. இதில் 12 பேர் வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 17 பேர் யார் என்பது குறித்து சுகாதாரத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தாங்களாகவே முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா அதிகமாக இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதற்கு காரணம் வெளிமாநிலத்தில் இருந்து சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்தவர்களையும் வேலூர் மாவட்ட கணக்கில் சேர்த்துள்ளனர். அவர்கள் தங்கியுள்ள லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதி முகவரியை கூறியதால் அதிகமானதாக தவறாக கணக்கு காட்டியுள்ளனர்.

    வேலூர் மாநகர பகுதியில் உள்ள லாட்ஜ்களில் தங்கி உள்ளவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். வேலூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வருபவர்களில் ஒரு சிலர் போலி முகவரி கொடுத்து தங்கி சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    எனவே அவர்களின் ஆதார் எண்ணை பெற்று ஏற்கனவே தடுப்பூசி போட்டுக்கொண்டார்களா? இல்லையா. கொரோனா பரிசோதனை செய்துகொண்டார்களா? என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் 50 படுக்கைகள் கொண்ட தனி வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தங்கள் வீடுகளிலேயே 7 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். பெங்களூரில் இருந்து வருபவர்கள் ஓட்டல்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அதிக கூட்டம் சேர்க்க கூடாது என ஓட்டல் உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தனியார் ஆஸ்பத்திரியில் வெளிமாநிலத்தவர்கள் ஆதார் அட்டை முகவரியை வைத்து பதிவு செய்ய வேண்டுமென மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
    குடியாத்தம் அருகே சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் பகுதியில் சாராயம் விற்பதாக வந்த தொடர் புகார்களின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உத்தரவின் பேரில், குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் உள்ளிட்ட போலீசார் நேற்று காலையில் குடியாத்தம் அடுத்த பூங்குளம் சாணாங்குட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சாராயம் விற்றுக்கொண்டிருந்த பேரணாம்பட்டு சாத்கரா பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (வயது 19) என்பவரையும், குடியாத்தம் அடுத்த சேங்குன்றம் பகுதியில் சாராயம் விற்றுக்கொண்டிருந்த நீலகண்டன் (50) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
    அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, அப்துல் கலாம், கிரிக்கெட் உலக கோப்பை மற்றும் அனைத்து மதப் பண்டிகைகளின் சின்னங்களை தங்கத்தால் செதுக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆம்பூர்:

    ஆம்பூர் ‌ஷராப் பஜாரை சேர்ந்தவர் தேவன் (வயது55). தங்க நகை சிற்பியான இவர் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை செய்து வருகிறார்.

    முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 5-வது நினைவு நாளையொட்டி கடந்த 3 நாட்களாக வேலை செய்து 1½ கிராம் தங்கத்தில் ஜெயலலிதா முழு உருவ படத்தை செதுக்கி உள்ளார். இதனுடைய மதிப்பு ரூ.5 ஆயிரம் ஆகும்.

    இவர் ஏற்கனவே அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, அப்துல் கலாம், கிரிக்கெட் உலக கோப்பை மற்றும் அனைத்து மதப் பண்டிகைகளின் சின்னங்களை தங்கத்தால் செதுக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


    இதையும் படியுங்கள்... சென்னையில் கடும் பனிப்பொழிவு- அதிகாலை நேரத்தில் வாகன ஓட்டிகள் திணறல்

    வேலூர் அருகே திடீர் வாந்தி பேதியால் 2 பேர் இறந்துள்ளதும் மேலும் பலர் பாதிக்கப்பட்டு உள்ளதாலும் அந்த பகுதியில் காலரா பீதி ஏற்பட்டுள்ளது.

    வேலூர்:

    வேலூர் அடுத்த பென்னாத்தூர் அருகே உள்ள அல்லிவரம் கிராமத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அப்பாசாமி (வயது70). என்பவருக்கு திடீர் வாந்தி பேதி ஏற்பட்டது.

    இதேபோல கலீத்குமார் (4) என்ற சிறுவனுக்கும் வாந்தி பேதி ஏற்பட்டது. அவர்களை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் வீடு திரும்பிய முதியவர் மற்றும் சிறுவன் இருவரும் நேற்று இறந்தனர். மேலும் அந்த கிராமத்தில் சுமார் 20 பேருக்கு வாந்தி பேதி ஏற்பட்டுள்ளது. அவர்களை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுபற்றி தகவலறிந்த வேலூர் மாவட்ட சுகாதாரத் துறையினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.

    வாந்தி பேதியால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் காலரா பாதிப்பாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக அந்த கிராமத்திற்கு சப்ளை செய்யப்படும் குடிநீரை ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், நந்தகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் இன்று காலையில் அல்லிவரம் கிராமத்திற்கு சென்று பலியான சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.

    மேலும் அல்லிவரம் கிராமத்தில் உள்ள கழிவுநீரை அகற்ற உத்தரவிட்டனர்.

    அங்குள்ள குளத்தின் அருகே மழை வெள்ளம் வெளியே செல்ல முடியாதபடி சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் மழைத்தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார்.

    சுகாதார குழுவினரை 24 மணி நேரமும் கிராமத்தில் இருக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சுகாதார துறையினர் வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    திடீர் வாந்தி பேதியால் 2 பேர் இறந்துள்ளதும் மேலும் பலர் பாதிக்கப்பட்டு உள்ளதாலும் அந்த பகுதியில் காலரா பீதி ஏற்பட்டுள்ளது.

    கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
    வேலூர்:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை முற்றிலும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களுக்கு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மார்க்கெட், தியேட்டர்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், பள்ளி, கல்லூரிகளில் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். இது குறித்து பள்ளி, கல்லூரி, தியேட்டர்கள், மார்க்கெட், விளையாட்டு கூடங்கள், இதர பொழுதுபோக்கு இடங்கள் உள்ளிட்டவற்றின் உரிமையாளர்களுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அதேசமயம், தமிழகத்தில் இதுவரை தடுப்பூசி போடாதவர்கள், தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நடவடிக்கையை மாநில சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், பொது சுகாதாரத் துறையின் உத்தரவை நடைமுறைப்படுத்தும் வகையில், வேலூர் மாநகராட்சியில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத பொதுமக்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வேலூர் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    வேலூர் மாவட்டத்தில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள101 ஏரிகளில் 87 ஏரிகள் நிரம்பி உள்ளன.
    வேலூர்:

    ஆந்திராவில் பெய்த கனமழை காரணமாக பேத்தமங்கலம் ஏரி நிரம்பியது. அங்கிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பாலாற்றில் ஆந்திராவில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி தமிழகத்திற்கு தண்ணீர் வந்தது.

    மேலும் பாலாற்றில் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக வட தமிழகத்திலும் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக பாலாற்றின் கிளை ஆறுகளான கவுண்டன்யா நதி, அகரம் ஆறு, மலட்டாறு, பேயாறு உள்ளிட்டவற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    தெற்கு ஆந்திராவில் பெய்த கனமழை காரணமாக பொன்னையாற்றில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளம் பெருக்கெடுத்தது.

    பொன்னையாற்று வெள்ளம் ராணிப்பேட்டை அருகே பாலாற்றில் கலக்கிறது. இதனால் பாலாற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீர்வரத்து மேலும் அதிகரித்து காணப்பட்டது.

    இதனால் வாலாஜா தடுப்பணையில் இருந்து 1 லட்சத்து 5000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளம் சென்றது.

    பாலைவனமாக வறண்டு கிடந்த பாலாற்றில் கடந்த 2 மாதங்களாக வெள்ளம் ஆர்ப்பரித்து சென்றுகொண்டிருக்கிறது. கடந்த வாரம் பாலாற்றில் வந்த தண்ணீரின் அளவை பொதுப்பணித்துறையினர் கணக்கீடு செய்தனர். இதில் 50 டிஎம்சி தண்ணீர் வீணாக சென்றது தெரிய வந்தது. இந்த வாரம் மேலும் சுமார் 20 டிஎம்சி தண்ணீர் பாலாற்றில் இருந்து வெளியேறி உள்ளது.

    இன்று காலையில் பாலாற்றில் 8 ஆயிரம் கன அடி தண்ணீரும், பொன்னை ஆற்றில் 3,814 கன அடி தண்ணீர் என மொத்தம் 11 ஆயிரத்து 814 கன அடி தண்ணீர் சென்றுகொண்டிருக்கிறது.

    பாலாற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்லும் இடங்களிலெல்லாம் பொதுமக்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர். ஆற்றுப்பாலங்களில் நின்று செல்பி எடுத்து மகிழ்கின்றனர். குடும்பத்தோடு வந்து பார்த்து செல்கின்றனர்.

    பாலாற்றின் கரையோரங்களில் ஊற்று தண்ணீரில் துணி துவைத்து வந்த சலவைத் தொழிலாளர்கள் தற்போது வரும் தண்ணீரில் துணி துவைக்கின்றனர். தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் துணி துவைப்பது எளிதாக உள்ளது என சலவைத் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

    இது ஒரு புறமிருக்க பாலாற்றில் தற்போது வெள்ள அளவு தொடர்ந்து சரிந்து கொண்டே இருக்கிறது. கடந்த வாரம் சென்ற வெள்ளத்தை விட தற்போது பாதிக்குமேல் தண்ணீர் குறைந்துள்ளது. இதனால் பாலாற்றில் உள்ள மணல் மேடுகள் தீவுபோல் காட்சி அளிக்கிறது.

    வேலூர் மாவட்டத்தில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள101 ஏரிகளில் 87 ஏரிகள் நிரம்பி உள்ளன. மற்ற ஏரிககள் நிரம்பும் தருவாயில் உள்ளது.

    ஊரக அமைப்பு கட்டுப்பாட்டிலுள்ள 825 குளம் குட்டைகளில் 530 குளங்கள் நிரம்பி உள்ளன. மேலும் குளம் குட்டைகளுக்கு தண்ணீர் வந்த வண்ணம் உள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 369 ஏரிகளில் 311 ஏரிகள் நிரம்பி விட்டன. மேலும் 13 ஏரி நிரம்பும் தருவாயில் உள்ளது.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 49 ஏரிகளில் 33 ஏரிகள் நிரம்பி உள்ளன.

    5 ஆண்டுக்கு பிறகு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மழை அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏரி குளங்கள் நிரம்பி உள்ளன. நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளன.

    வேலூரின் 7 பழமொழிகளில் ஒன்றான தண்ணீரில்லாத ஆறு என்பதை இந்த ஆண்டு பாலாறு பொய்யாக்கி உள்ளது.



    ரூ.2 கோடி சொத்து குவித்த பொதுப்பணித்துறை பெண் என்ஜினீயர் திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
    வேலூர்:

    வேலூர் மண்டல பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (தொழில்நுட்பகல்வி) அலுவலகம் வேலூர் தொரப்பாடி தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ளது. இந்த அலுவலக கட்டுப்பாட்டில் வேலூர், ராணிப்பேட்டை திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்பட 9 மாவட்டங்கள் உள்ளன. இதன் செயற்பொறியாளராக ஷோபனா (வயது 57) என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். இவர் அரசு கல்லூரிகளில் கட்டிடம் கட்ட நிதி ஒதுக்குதல் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்வார்.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி கட்டிட ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த மாதம் 2-ந் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவரின் காரில் இருந்து ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து ஷோபனா தங்கியிருந்த குடியிருப்பு மற்றும் அவரின் சொந்த ஊரான ஓசூரிலும் சோதனை செய்யப்பட்டது.

    அதில் ரூ.2 கோடிக்கு மேல் பணம், நகைகள், வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. மேலும், பல வங்கிக் கணக்குப் புத்தகங்கள், வங்கி லாக்கர் சாவி ஆகியவற்றையும் பறிமுதல் செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இதையடுத்து ஷோபனா திருச்சி வட்ட பொதுப்பணித்துறையில், கட்டுமானம் மற்றும் பராமரிப்புத் துணைக் கண்காணிப்புப் பொறியாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அவர் பணியில் சேராமல் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று வேலூரில் ஷோபனாவிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை திடீரென கைது செய்தனர். தொடர்ந்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இன்று காலையில் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உற்சவர் சாமி மற்றும் அம்மன் ராஜகோபுரத்திற்கு வெளியே வைக்கப்பட்டு இருந்தது.
    வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்குள் அகழி தண்ணீர் கடந்த 12-ந்தேதி புகுந்தது. கோவில் வளாகத்தில் உள்ளே இருக்கக்கூடிய குளம் பகுதி முழுவதுமாக தண்ணீர் தேங்கியது. இதையடுத்து படிப்படியாக நீர்மட்டம் உயர்ந்தது.

    முட்டி அளவு தண்ணீரில் பக்தர்கள் நடந்து சென்று சாமி தரிசனம் செய்தனர். அகழி நீர்மட்டம் உயர்ந்ததால் கோவிலுக்குள்ளும் நீர்மட்டம் உயர தொடங்கியது.

    கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலில் ஆய்வு செய்தார். அப்போது அபிஷேக நீர் செல்லும் வழியாக கோவிலுக்குள் தண்ணீர் வந்ததால் அதை மூடி விட்டுஉள்ளே இருக்கக்கூடிய தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்ற உத்தரவிட்டார். ஆனால் தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை.

    ஊற்று மற்றும் தொடர் மழையால் மீண்டும் கோவில் வளாகத்தில் தண்ணீர் தேங்கிக் கொண்டே இருந்தது.

    நேற்று அம்மன் சன்னதி கருவறைக்குள் தண்ணீர் புகுந்தது. தண்ணீரில் நின்று கொண்டு அர்ச்சகர்கள் அம்மனுக்கு பூஜை செய்தனர். தொடர்ந்து நீர் மட்டம் உயர்ந்ததால் இன்று காலையில் மூலவர் ஜலகண்டேஸ்வரர் சன்னதி பகுதிகளையும் தண்ணீர் சூழ்ந்தது.

    கோவிலுக்குள் பல்வேறு வழிகளில் தண்ணீர் வருகிறது. சுரங்கப்பாதை அமைந்துள்ள இடம், தண்ணீர் வெளியேறும் குழாய் ஊற்று போன்றவற்றிலிருந்து தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது.

    இதனால் இன்று காலையில் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இடுப்பு அளவுக்கு தண்ணீர் தேங்கியது. மேலும் பல இடங்களில் பாசி பிடித்து வழுக்கி விழ கூடிய சூழ்நிலை உள்ளது. தண்ணீரும் அசுத்தம் அடைந்து வருகிறது.

    இதனால் இன்று காலையில் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

    உற்சவர் சாமி மற்றும் அம்மன் ராஜகோபுரத்திற்கு வெளியே சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டு இருந்தது. அதில் பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.

    கோவில் கருவறைக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மேலும் சுற்றுப்பிரகாரத்தில் இடுப்பு அளவிற்கு தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தண்ணீரும் மாசடைந்து வருகிறது.

    உள்ளே சென்றால் பகதர்களுக்கு அவதி ஏற்படும். தண்ணீர் வடியும் வரை கோவில் பூட்டப்பட்டிருக்கும். கோவிலுக்கு வெளியே பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
    ஒரேநாள் இரவில் 7 தடவை நில அதிர்வு ஏற்பட்டதால் இரவு நேரம் என்றாலே பயம் ஏற்படும் சூழ்நிலை உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், பள்ளிகொண்டா, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி வரையில் இன்று அதிகாலை 4.17 மணி முதல் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.

    வேலூரில் இருந்து 59 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.6-ஆக பதிவாகியுள்ளது.

    ஏற்கனவே பலமுறை வேலூர் மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் துவங்கி திருப்பத்தூர் வரையில் பூமத்திய ரேகை நேர்கோடு என்பதால் இப்பகுதியில் அடிக்கடி நில அதிர்வு ஏற்படுவதாக கூறுகின்றனர்.

    நில அதிர்வு ஏற்பட்ட கிராமத்தில் வீடுகளில் விரிசல் ஏற்பட்ட காட்சி

    குடியாத்தம், தட்டப்பாறை மீனூர் கொல்லைமேடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இரவில் 7 முறை நில அதிர்வு ஏற்பட்டது.

    அப்போது வீட்டின் பரண் மீது இருந்த பாத்திரங்கள் உருண்டு கீழே விழுந்தது. பீரோக்கள் சில அடி தூரம் நகர்ந்துள்ளது. கட்டில்கள் சில அங்குலங்கள் நகர்ந்துள்ளது.

    கால்நடைகள் தொடர்ந்து கத்தியபடி இருந்தன. மின்விசிறிகள் தாறுமாறாக சுழன்றது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர்.

    சில நிமிடங்களுக்கு பின் நில அதிர்வு நின்றது சில வினாடிகளுக்குப் பின் மீண்டும் மீண்டும் என 7 முறை நில அதிர்வு ஏற்பட்டது.

    இதில் 2 முறை சுமார் 3 வினாடிகள் வரை நில அதிர்வு நீடித்தது. அப்போது பயங்கர சத்தம் ஏற்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    40 நாட்களில் 3-வது முறையாக நில அதிர்வு கண்டதால் கிராம மக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில்:-

    குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை ஊராட்சி மீனூர் கொல்லைமேடு கிராம பகுதியில் கடந்த மாதம் 19-ந்தேதி 25-ந்தேதி ஆகிய 2 நாட்களில் இரவில் திடீர் என சில வினாடிகள் நில அதிர்வு ஏற்பட்டது. இன்று 7 முறை அதிர்வு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து வருவாய்த் துறையினரும், அதிகாரிகளும் உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். வருங்காலங்களில் மிகப்பெரிய அளவில் இப்பகுதியில் நில அதிர்வு பூகம்பம் ஏற்படும் அபாயம் உள்ளதா என ஆய்வு செய்து பொதுமக்களுக்கு அதிகாரிகள் அச்சத்தை போக்க வேண்டும்.

    ஒரே வாரத்தில் 2 முறை அதிலும் ஒரேநாள் இரவில் 7 தடவை நில அதிர்வு ஏற்பட்டதால் இரவு நேரம் என்றாலே பயம் ஏற்படும் சூழ்நிலை உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே பெத்த திப்பபள்ளி அடுத்த சானுமா குலப்பள்ளி, பட்ட வான்ல பள்ளி ஆகிய கிராமங்களில் தொடர்ந்து 2 நாட்கள் நிலநடுக்கமும், பூமியில் இருந்து அதிக அளவு சத்தமும் ஏற்பட்டது.

    இதேபோல் தமிழக-ஆந்திர எல்லையான வேலூர் மாவட்டத்திலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    இதையும் படியுங்கள்...அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும், பதில் அளிக்கவும் அரசு தயாராக உள்ளது: பிரதமர் மோடி
    விரத காலத்தில் அசைவ உணவு அருந்துவது மாபெரும் தவறாகும். மாலை தரித்த ஐயப்பன்மார் வீட்டைத் தவிர மற்றவர்கள் வீட்டில் எக்காரணத்தினாலும் உணவு அருந்தக்கூடாது.
    1. ஐயப்ப பக்தர்கள் இயன்றவரை கார்த்திகைத் திங்கள் முதல் நாள் மாலை அணிந்து கொள்வது சாலச்சிறந்தது. அன்று நாள், கிழமை பார்க்க வேண்டியதில்லை. அதற்குப் பின் மாலை அணி பவர்கள் கார்த்திகை 19 தேதிக்குள் ஏதாவதொரு நல்ல நாளில் மாலை அணியலாம். எப்படியும் சன்னி தானத்திற்குச் செல்லும் தினத்திற்கு முன்னதாக குறைந்தது ஒரு மண்டலம் (41 நாட்கள்) விரதம் இருக்கும் படி பார்த்து அதற்குள் மாலை அணிந்து கொள்ளவேண்டும்.

    2. துளசிமணி அல்லது உருத்திராட்சமாலை 108 அல்லது 54 மணிகள் உள்ளதாகப் பார்த்து வாங்கி அத்துடன் ஐயப்பன் திருவுருவப்பதக்கம் ஒன்றையும் இணைத்து அணிய வேண்டும். அத்துடன் துணை மாலை ஒன்றும் அணிந்து கொள்வது நல்லது.

    3. பலமுறை விரதமிருந்து சபரிமலை சென்று வந்து பக்குவமடைந்த பழமலை ஐயப்பன்மார் ஒருவரைக் குருவாக ஏற்று திருவிளக்கு முன்பாகவோ, திருக்கோவில்களிலோ குருநாதரை வணங்கி அவர் திருக்கரங்களால் மாலை அணிந்து கொள்ள வேண்டும், அல்லது தாய், தந்தையர் மூலமாகவோ, இறைவன் திருவடிகளில் வைத்து எடுக்கப்பெற்ற மாலையினையோ அணிந்து கொள்ளலாம். மாலை அணிந்து கொண்டவுடன், குருநாதருக்குத் தங்களால் இயன்ற தட்சிணையைக் கொடுத்து அடி வணங்கி ஆசிபெற வேண்டும். ஐயப்பனாக மாலை தரித்த நிமிடத்திலிருந்து குருசாமியை முழுமனதுடன் ஏற்று அவர்தம் மொழிகளை தேவ வாக்காக மதித்து மனக்கட்டுப்பாட்டுடன் பணிந்து நடந்துக்கொண்டு பயணத்தை இனிதாக்க ஒத்துழைக்க வேண்டியது அவசியம்.

    4. நீலம், கருப்பு, காவி, பச்சை, மஞ்சள் இவற்றுள் ஏதாவது ஒரு நிறத்தில் உடைகள் அணிய வேண்டும். தங்கள் கடமைகளை ஆற்றுகின்ற சமயங்களில் இயலாவிட்டாலும் பஜனைகளில் கலந்து கொள்ளும்போதும், யாத்திரையின்போது முழுவதும் கண்டிப்பாக வர்ண உடை அணிய வேண்டியது அவசியம்.

    5. மலைக்குச் செல்லக் கருதி, மாலை அணிய விரும்பும் பக்தரை, தாய், தந்தை, மனைவி, மக்கள் முதலியோர் தடுத்தல் கூடாது. எவ்வித அச்சமுமில்லாமல் தர்மசாஸ்தாவிடம் முழுப் பொறுப்பினையும் வைத்து, முகமலர்ச்சியுடன் அனுப்பி வைக்க வேண்டும்.

    6. மேற்கொள்ள வேண்டிய விரதங்களில் மிகவும் ஒழுங்குடன் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியது பிரம்மச்சரிய விரதமாகும். மனம், வாக்கு, செயல் என்ற மூவகைகளிலும் காம இச்சையை அறவே நீக்கவேண்டும்.

    7. காலை, மாலை இருவேளைகளிலும் குளிர்ந்த நீரில் தவறாமல் நீராடி ஐயப்பன் திருவுருவப் படத்தை வைத்து வணங்குதல் வேண்டும். தினமும் ஆலய வழிபாடும், பஜனை களில் கலந்து கொண்டு வாய்விட்டுக்கூவி சரணம் விளித்து ஐயப்பன் புகழ்பாடி மகிழ்தலும் பேரின்பம் பயக்கும்.

    8. படுக்கை, தலையணைகளை நீக்கி, தன் சிறு துண்டை மட்டும் தரையில் விரித்து படுக்கவேண்டும். பகல் நேரத்தில் தூங்குவதைத் தவிர்க்கவேண்டும்.

    9. களவு, சூதாடுதல், பொய், திரைப்படங்கள், விளையாட்டு, வேடிக்கைகள், உல்லாசப்பயணங்கள், போதையூட்டும் பொருட்கள், புகைப்பிடித்தல் முதலியவற்றை தவிர்க்க வேண்டும்.

    10. எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, சவரம் செய்து கொள்வது, காலணிகள், குடை உபயோகிப்பது முதலியவற்றைக் தவிர்க்கவேண்டும்.

    11. மற்றவர்களிடம் பேசும் பொழுது, சாமி சரணம் எனத் தொடங்கி, பின் விடை பெறும்பொழுதும் சாமிசரணம் எனச் சொல்ல வேண்டும்.

    12. விரத காலத்தில் அசைவ உணவு அருந்துவது மாபெரும் தவறாகும். எனவே இயன்றவரை வீட்டிலேயே தூய்மையாகத் தயாரித்து சைவ உணவே உண்ண வேண்டும். மாலை தரித்த ஐயப்பன்மார் வீட்டைத் தவிர மற்றவர்கள் வீட்டில் எக்காரணத்தினாலும் உணவு அருந்தக்கூடாது.

    13. பக்தர்கள் மாலை தரித்த பிறகு சந்திக்கின்ற ஆண்களை ஐயப்பா என்றும், பெண்களை மாளிகைப்புறம் என்றும், சிறுவர்களை மணிகண்டன், சிறுமிகளை கொச்சி என்றும் குறிப்பிட்டு அழைக்கவேண்டும்.

    14. சபரிமலை செல்லும் பக்தர்கள் புதிதாக பயணம் வர விரும்புகிறவர்களிடம் நான் பத்திரமாக கூட்டிக் கொண்டு போய் வருகிறேன். என்னோடு தைரியமாக வரலாம் என்று சொல்லக்கூடாது. பயணம் புறப்படும் பொழுது போய் வருகிறேன் என்று யாரிடமும் சொல்லிக் கொள்ளக்கூடாது. எல்லாப் பொறுப்பினையும் ஐயப்பனிடம் ஒப்படைத்து அவன் திருவடிகளே சரணம் என்ற பத்தியுணர்வுடன் சரணம் விளித்துப் புறப்பட வேண்டும்.

    15. மாலையணிந்த ஐயப்பமார்கள் தங்களது கடமைக்கு இடையூறு இல்லாமல் சுறு சுறுப்புடன் தங்கள் பணிகளைச் செவ்வனே செய்யவேண்டும்.

    16. மாலையணிந்தது முதல் பக்தர்கள் நாள்தோறும் 108 சரணங்கள் சொல்லி காலை, மாலை வழிபட்டு, துளசி, கற்கண்டு, நாட்டு சர்க்கரை, பால் இவற்றுள் ஏதாவது ஒன்றை சிறிதளவு வைத்து நைவேத்தியம் செய்து வணங்கவேண்டும்.

    17. யாத்திரை புறப்படுவதற்கு சில நாட்கள் முன்னதாக கன்னி பூஜை நடத்த வேண்டும். எல்லா ஐயப்ப பக்தர்களும் தங்கள் வீட்டிலோ அல்லது குருசாமி மற்றும் ஐயப்பன் பக்தர்கள் வீட்டிலோ, பொது இடங்களிலோ சற்று விரிவான முறையில் கூட்டு வழிபாடு (பஜனை) நடத்தி எல்லோருக்கும் பிரசாதம் வழங்கி அருள் பெறுவது சாலச் சிறந்தது. ஐயப்பமார் ஒருவருக் காவது அன்னமிடுதல் மிக்க அருள்பாலிக்கும்.

    18. மரணம் போன்ற துக்க காரியங்கள் எதிலும் ஐயப்பமார்களும் அவர்கள் குடும்பத்தினரும் கலந்துக் கொள்ளக் கூடாது. தவிர்க்க முடியாத நெருங்கிய உறவில், மரணம் நேரிட்டு கலந்து கொள்ள வேண்டிய திருந்தால் தான் அணிந்த மாலையைக் கழற்றி ஐயப்பன் படத்தில் மாட்டிய பிறகு தான் கலந்துகொள்ள வேண்டும். மாலையைக் கழற்ற நேர்ந்தால் மீண்டும் உடனே அணிந்து கொண்டு யாத்திரை செல்ல முற்படக்கூடாது. ஐயப்பன் திருவருளை வேண்டி மறுவருடம் சென்று வரவேண்டும்.

    19. எல்லா விரதங்களிலும், பிரம்மச்சாரிய விரதம் முக்கியமான தாகும். எனவே எந்தப்பெண்களைக் கண்டாலும் தாயென்றே கருத வேண்டும். மாதவிலக்கான பெண்களை காணக்கூடாது. தவறுதலாகக் காண நேர்ந்தால் உடனே நீராடி ஐயப்பனை வழிபட வேண்டும். பெண்கள் ருதுமங்கள சடங்கு விழாவிற்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ சென்று கலந்து கொள்ளக் கூடாது.

    20. இருமுடிக்கட்டு பூஜையை தன் வீட்டிலோ, இயன்ற தட்சிணை கொடுத்து, குருவின் கரங்களால் இருமுடியைத் தலையில் ஏற்று, வீதிக்கு வந்ததும் வாசற்படியில் விடலைத் தேங்காய் உடைத்து ஐயப்பன் சரண கோஷத்துடன் பின்னால் திரும்பிப் பார்க்காமல் ஒரே நோக்கத்துடன் பயணம் தொடர வேண்டும். யாரிடமும் போய் வருகிறேன் என்று சொல்லக் கூடாது.

    22. கன்னி ஐயப்பமார்கள் யாத்திரை புறப்பட்ட நேரத்திலிருந்து ஐயப்பன் சன்னிதானம் செல்லும் வரை அவர்களாக இருமுடியை தலையிலிருந்து இறக்கி வைக்கவோ, ஏற்றிக் கொள்ளவோ கூடாது. குருநாதர் அல்லது மற்ற பழமலை ஐயப்பன்மாரைக் கொண்டு ஏற்றவோ, இறக்கவோ வேண்டும்.

    23. 12 வயதுக்கு கீழ்பட்ட சிறுமிகளும் ருதுகாலம் நின்ற வயதான பெண்களும் மட்டுமே சபரி யாத்திரையில் கலந்து கொள்ளலாம்.

    24. யாத்திரை வழியில் அடர்ந்த வனங்களில் காட்டு யானை, புலி, கரடி முதலான விலங்குகள் இருக்கும். எனவே பக்தர்கள் கூட்டமாக சரணம் சொல்லிக்கொண்டே செல்ல வேண்டும். இரவு நேரங்களில் காட்டிற்குள் மலஜலத்திற்காக தனியே அதிக தூரம் செல்லக்கூடாது. சரணம் விளித்தல், சங்கு ஒலித்தல், வெடி வைத்தல் பாதுகாப்புக்கு சிறந்த வழிகளாகும்.

    25. பம்பை நதியில் நீராடும்பொழுது மறைந்த நம் முன்னோர்களுக்கு ஈமக்கடன்கள் செய்து முன்னோர்களின் ஆத்மா சாந்தி பெற வழிவகுக்க வேண்டும்.

    26. பம்பையில் சக்தி பூஜையின்போது ஐயப்பமார்கள் சமைக்கும் அடுப்பிலிருந்து சிறிதளவு சாம்பல் சேகரித்து சன்னதி ஆழியில் இருந்து எடுக்கப்பெற்ற சாம்பலை அத்துடன் கலந்து தயாரிக்கப்பெறுவதுதான் சபரிமலை பஸ்பம், இது மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.

    27. இருமுடியில் ஐயப்பனுக்காகக் கொண்டு செல்லும் நெய்த்தேங்காயை சன்னிதானத்தில் உடைத்து, அபிஷேகம் செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும் இந்த நெய்யையும், விபூதி பிரசாதங்களையும் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்.

    28. ஐயப்பனுக்கு காணிக்கையாக சுற்றத்தார்களும், மற்றவர்களும் கொடுத்தனுப்பும் காணிக்கையை சன்னிதானத்தில் செலுத்தி, அவர்களுக்கு ஐயப்பன் திருவருள் கிடைக்க வேண்டிக் கொள்ள வேண்டும்.

    29. குருசாமிக்கு தட்சணை கொடுக்க வேண்டிய சமயங்களிலெல்லாம் ஐயப்பமார்கள் தாங்கள் விரும்பிய வசதிக்கேற்றவாறு கொடுத்து குருவின் அருளைப் பெறலாம். இதில் எந்தவித நிபந்தனையும் கிடையாது. ஐயப்பமார்கள் கொடுக்கும் காணிக்கை எவ்வளவாக இருந்தாலும் அதை மன மகிழ்வுடன் பெரும்பொருளாக ஏற்று குருவின் குருவான ஐயப்பனுக்கே செலுத்தி பேரருள் பெற்றுய்வது குருமார்களுக்குச் சாலச் சிறந்ததாகும்.

    30. ஐயப்பன்மார்கள் எல்லோரும், குறிப்பாக கன்னி ஐயப்பன் மார்கள் பெரிய பாதையில் (அழுதை வழி) சென்று வருவது மிகுந்த பயன் விளைக்கும். ஆனால் சிலர் தங்கள் தொழில், கடமை சூழ்நிலை கருதி எரிமேலியிலிருந்து சாலைக்காயம் வழியாகவும், சிலர் வண்டிப்பெரியாறு வழியாகவும் சபரிமலை செய்கிறார்கள். என்றாலும் பெரிய பாதையில் செல்லும் பொழுது மலைகளில் விளையும் பல மூலிகைகளின் சக்தி கலந்த காற்றினை பெறுவதாலும், பல மூலிகைகளை கலந்த ஆற்று நீரில் குளிப்பதால் உடல்நலம் ஏற்படுவதாலும் எழில்மிக்க இயற்கைக்காட்சிகளைக் கண்டு களிப்பதால் உள்ளம் பூரிப்பதாலும், பேரின்பமும் பெருநலமும் அடைகிறோம். நீண்டவழிப்பயணத்தில் ஐயப்பன் சரணமொழி அதிகம் சொல்வதால் பகவானின் திருநாம உச்சரிப்பு மிகுந்து சொல்வதால் பகவானின் திருநாம உச்சரிப்பு மிகுந்து பக்தி உணர்ச்சி வளர்கிறது.

    31. யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும் ஐயப்பனின் திருவருள் பிரசாதக் கட்டினை தலையில் ஏந்தியபடி, வாயிற்படியில் விடலைத் தேங்காய் அடித்து வீட்டிற்குள் நுழைய வேண்டும். வழிபாட்டு அறையில் கற்பூர ஆர்த்தியோடு கட்டினை அவிழ்த்து பூஜை செய்து பிரசாதங்களை எல்லோருக்கும் வழங்க வேண்டும்.

    32. யாத்திரை இனிதே நிறைவேறியதும் குருநாதர் மூலம் மாலையைக் கழற்றி ஐயப்பன் திருவுருவப் படத்திற்கு அணிவித்து விட்டு விரதம் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
    வேலூர் மாவட்டத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் இருந்து 59 கிமீ தொலைவில் இன்று அதிகாலை 4.17 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 என்று பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நில அதிர்வு வரைபடங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான மக்களால் உணரப்படவில்லை. தற்போது இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.


    ஜூலி அன்னே ஜெண்டர் கடந்த 2018-ம் ஆண்டு மோட்டார் சைக்கிளில் ஆஸ்பத்திரிக்கு சென்று தனது முதல் குழந்தையை பெற்றெடுத்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.
    வெலிங்டன் :

    நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூலி அன்னே ஜெண்டர். 41 வயதான இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை ஜூலிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவரது வீட்டில் இருந்து சிறிது தொலைவிலேயே ஆஸ்பத்திரி இருப்பதால் அவர் தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டார்.

    பிரசவ வலியுடனேயே அவர் சைக்கிளை ஓட்டி ஆஸ்பத்திரி போய் சேர்ந்தார். அங்கு சென்ற 10 நிமிடத்திலேயே அவருக்கு ஆழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் தற்போதும் நலமாக உள்ளனர்.

    இதனிடையே பிரசவ வலியோடு சைக்கிளில் ஆஸ்பத்திரிக்கு சென்று குழந்தை பெற்றெடுத்தது குறித்து ஜூலி, பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

    அதில் அவர் “முக்கியமான செய்தி! இன்று அதிகாலை 3.04 மணியளவில் எங்கள் குடும்பத்தின் புதிய உறுப்பினரை நாங்கள் வரவேற்றுள்ளோம். பிரசவத்தின்போது சைக்கிளை ஓட்ட உண்மையிலேயே நான் திட்டமிடவில்லை. ஆனால், அப்படி நடந்து முடிந்துவிட்டது. ஆச்சரியப்படும் விதமாக இப்போது எங்களிடம் நல்ல ஆரோக்கியமான, மகிழ்ச்சியான குழந்தை உள்ளது. அவளின் தந்தையை போலவே” என குறிப்பிட்டுள்ளார்.

    அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் பிறந்து, 2006-ம் ஆண்டில் நியூசிலாந்தில் குடியேறிய ஜூலி, இதற்கு முன்னர் கடந்த 2018-ம் ஆண்டு மோட்டார் சைக்கிளில் ஆஸ்பத்திரிக்கு சென்று தனது முதல் குழந்தையை பெற்றெடுத்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

    ×