என் மலர்
உள்ளூர் செய்திகள்

1½ கிராம் தங்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா முழு உருவ படம்.
1½ கிராம் தங்கத்தில் ஜெயலலிதா உருவ படம்- ஆம்பூர் நகை தொழிலாளி அசத்தல்
அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, அப்துல் கலாம், கிரிக்கெட் உலக கோப்பை மற்றும் அனைத்து மதப் பண்டிகைகளின் சின்னங்களை தங்கத்தால் செதுக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆம்பூர்:
ஆம்பூர் ஷராப் பஜாரை சேர்ந்தவர் தேவன் (வயது55). தங்க நகை சிற்பியான இவர் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை செய்து வருகிறார்.
முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 5-வது நினைவு நாளையொட்டி கடந்த 3 நாட்களாக வேலை செய்து 1½ கிராம் தங்கத்தில் ஜெயலலிதா முழு உருவ படத்தை செதுக்கி உள்ளார். இதனுடைய மதிப்பு ரூ.5 ஆயிரம் ஆகும்.
இவர் ஏற்கனவே அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, அப்துல் கலாம், கிரிக்கெட் உலக கோப்பை மற்றும் அனைத்து மதப் பண்டிகைகளின் சின்னங்களை தங்கத்தால் செதுக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... சென்னையில் கடும் பனிப்பொழிவு- அதிகாலை நேரத்தில் வாகன ஓட்டிகள் திணறல்
Next Story






