என் மலர்
வேலூர்
- நேருக்கு நேர் மோதிக்கொண்டது
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி அருகே உள்ள பண்டபல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 30) கூலி வேலை செய்து வருகிறார்.
நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் பண்டப்பல்லியில் இருந்து பரதராமி செல்ல பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாமிரெட்டிபல்லி கிராமம் தனியார் கல்லூரி அருகே வரும்போது ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து தாதுமணல் ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி சென்ற லாரியும்-பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த சுரேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, பரதராமி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் ஆகியோர் விரைந்து வந்து சுரேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து தொடர்பாக பரதராமி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆதார் கார்டு, பணம் எரிந்தது
- தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்
வேலூர்:
வேலூர் அருகே உள்ள பிள்ளையார் குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரம். கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஜெயந்தி. தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.
சுந்தரம் குடும்பத்துடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார். இன்று காலை சுந்தரத்தின் மனைவி சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது திடீரென அடுப்பில் எரிந்த தீ குடிசை வீட்டில் பற்றியது.
தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயந்தி வீட்டிலிருந்த கணவன் மற்றும் பிள்ளைகளை வெளியே அழைத்துக் கொண்டு ஓடி வந்தார். அக்கம் பக்கத்தினர் சேர்ந்து வீட்டில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர்.
அந்த நேரத்தில் வீட்டில் இருந்த சமையல் கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதனால் வீடு முழுவதும் பரவி எரிந்தது. தகவல் அறிந்த வேலூர் தீணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். வீட்டிலிருந்த பிரிட்ஜ், டி.வி., குழந்தைகளின் பள்ளி சான்றிதழ்கள் ஆதார் கார்டு மற்றும் பணம் ஆகியவை எரிந்து நாசமானது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வேலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளை வென்று ஜனவரி மாதம் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு பெற்றுள்ளனர்.
இப்பள்ளி மாணவி ஜி.ரம்யா மும்முறை தாண்டுதல் பிரிவில் முதலிடமும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடமும், மாணவிகள் டி.கலைவாணி, ஜி.ரம்யா, எஸ்.ஷமாபர்வீன், வள்ளி ஆகியோர் கொண்ட அணி 400 மீட்டர் தொடர் ஓட்ட போட்டியில் முதலிடம் பெற்றனர், 14 வயதுக்குட்பட்ட மாணவிகள் கலந்து கொண்ட கையுந்து பந்து போட்டியில் முதலிடமும், 17 வயதிற்கு உட்பட்டோ ருக்கான போட்டிகளில் கபடி பிரிவில் முதல் இடமும், 19 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் கையுந்து பந்து பிரிவில் இரண்டாம் இடமும் பெற்று சாதனை படைத்தனர்.
விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்து மாநில போட்டிக்கு தேர்வு பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.எஸ்.அமர்நாத் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயசீலிகிறிஸ்டி அனை வரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினார். விழாவில் திமுக பிரமுகர்கள் ஜம்புலிங்கம், தண்டபாணி கோபாலகிருஷ்ணன், பாபு, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் இருபால் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில் உடற்கல்வி ஆசிரியை கமலி நன்றி கூறினார்.
- முதலாம் ஆண்டு மாணவர்களை அரை டவுசருடன் விடுதி வளாகத்தை சுற்றி வர செய்தனர்.
- முதலாம் ஆண்டு மாணவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
வேலூர்:
வேலூர் பாகாயத்தில் பிரபல தனியார் மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு விடுதியில் புதிதாக சேர்ந்த மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்துள்ளனர். ராக்கிங் கொடுமைகள் அனைத்தும் வீடியோவில் பரவி வருகிறது.
முதலாம் ஆண்டு மாணவர்களை அரை டவுசருடன் விடுதி வளாகத்தை சுற்றி வர செய்தனர். அவர்கள் ஓடி வரும்போது தண்ணீரை பீய்ச்சி அடித்து ஆரவாரம் செய்துள்ளனர்.
அப்போது தண்டால் போட வைத்தும் குட்டிக்கரணம் அடிக்கவும் அவர்களை மிரட்டியுள்ளனர்.அதனை கண்டு பயந்து போன முதலாம் ஆண்டு மாணவர்கள் குட்டிக்கரணம் போட்டனர். அவர்கள் கூறியபடி தண்டால் எடுத்தனர்.
மேலும் இரண்டு மாணவர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க சொன்னார்கள்.
அவர்கள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தனர். அப்போது அது சரியில்லை என்று கூறி மீண்டும் மீண்டும் முத்தம் கொடுக்க வைத்தனர்.
அந்த வீடியோ தற்போது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஏற்பட்ட இந்த கொடுமைகள் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் முதலாம் ஆண்டு மாணவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
புதிதாக சேர்ந்த மாணவர்களை அரை டவுசருடன் விடுதி வளாகத்தை சுற்றி வர வைத்த சம்பவம் தற்போது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முதலாம் ஆண்டு மாணவர்கள் விடுதி வார்டன் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், "மாணவர்கள் தங்கும் விடுதியில் புதிதாக சேர்ந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆடைகளை களைந்து விடுதி வளாகத்தை சுற்றி வர வைத்தனர்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்கள் உடல் ரீதியாக எவ்வாறு துன்புறுத்தப்பட்டார்கள் என்பதை அந்த மாணவர்களே தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.
டெல்லியில் இருக்கும் ராக்கிங் தடுப்புப் பிரிவுக்கும் புகார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மருத்துவக் கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.
முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர் ராக்கிங் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கல்லூரியின் முதல்வர் டாக்டர் சாலமன் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இந்த தொடர்பாக சீனியர் மாணவர்கள் 7 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வியாபாரிகள் முற்றுகை
- வேலூர் அடுக்கம்பாறையில் பரபரப்பு
வேலூர்
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். ஆஸ்பத்திரி முன்பு உள்ள மூஞ்சூர்பட்டு சாலையில் நோயாளிகள் நடந்து செல்ல வசதியாக நடை பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆக்கிமிரப்பு அகற்றம்
இந்த நடைபாதைகளை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் வைக்கப்ப ட்டுள்ளன. டிபன் கடை துணிக்கடை பங்க்கடை என 50-க்கும் மேற்பட்ட கடைகள் நடைபாதை ஆக்கிரமித்து வைத்திருந்தனர்.
இன்று காலை பென்னாத்தூர் பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தை ஒட்டி மூஞ்சூர்பட்டு சாலையில் வைக்க ப்பட்டிருந்த கடைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் முற்றுகையில் ஈடுபட்டனர்.
பரபரப்பு
இது பற்றி தகவல் அறிந்த தாசில்தார் செந்தில், பென்னாத்தூர் பேரூராட்சி தலைவர் பவானி சசிகுமார், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இறுதியில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றியதன் மூலம் ஆஸ்பத்திரி முன்பு சாலை அகலமாக காட்சியளித்தது. இவ்வளவு பெரிய சாலை இருந்ததா என்று ஆச்சரியத்துடன் பார்க்கும் வகையில் சாலை அனைவரும் கடந்து செல்ல வசதியாக இருந்தது.
இந்த இடத்தில் தொடர்ந்து ஆக்கிரமிப்பு கடை இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- சாலையில் முள் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது
- பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
வேலூர்,
வேலூர் ஆற்காடு சாலையில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளங்கள் தோண்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் சாலையில் முள் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் சத்துவாச்சாரி சர்க்கிள் சாலை பகுதியில் வரும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அவ்வழியாக வரும் வாகனங்களை போக்குவரத்து போலீசார் வேறு வழி பாதையில் அனுப்புகின்றனர்.
இதனால் இன்று காலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ெபாதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்
- 1 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து ெசன்றனர்
வேலூர்,
காட்பாடி ஆக்ஸிலியம் கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன் மற்றும் சைக்காலஜி துறை, சமூகப் பணித் துறை சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
ஆக்ஸிலியம் கல்லூரி முதல்வர் ஜெயன்சாந்தி, சமூகப்பணித் துறைத் தலைவர் ஷர்மி அல்தாப், ஊடகத்துறை ராதிகா மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
பேரணி ஆக்ஸிலியம் கல்லூரியில் இருந்து தொடங்கியது. டான் போஸ்கோ பள்ளி காட்பாடி வழியாக 1 கிலோமீட்டர் தூரம் வரை சென்று விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பினர்.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
- அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கைலாயநாதர் கோவிலில் அன்னாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. மேலும் அம்மனுக்கு 18 வகையான காய்கறிகள் சுமார் 100 கிலோ கொண்டு காதம்பரி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
பொதுவாக இந்துக்கள் உணவை வீணாக்காமல் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே இந்த அன்னாபிஷேக விழா கொண்டாட ப்படுகிறது.
கைலாசநாதருக்கு முதலில் பசும்பால், இளநீர், சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள் மற்றும் அன்னம் போன்ற பல பொருட்களால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தபின்னர் சுவாமியின் மீது அன்னத்தால் பொருத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்ட ஒன்றரை மணி நேரம் அப்படியே வைக்கப்பட்டு பின்னர் அன்னத்தை கலைத்து குழந்தை பேறு இல்லாதோர்க்கு அந்த அன்ன பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அன்ன அபிஷேகத்தின் போது செய்யப்பட்டிருந்த அலங்கார புஷ்பங்கள் அருகில் உள்ள உத்திர காவிரி ஆற்றில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அங்கிருந்து நீரைக் கொண்டு வந்த சுவாமிக்கு மீண்டும் அபிஷேகம் செய்யப்பட்டடு தொடர்ந்து சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீப ஆராதனைகள் காட்டப்பட்டது.
இந்த அன்னாபிஷேக விழாவில் பாக்கம் கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கைலாயநாதரை வழிபட்டு சென்றனர்.
- பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த லட்சுமணாபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேலூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் என்.குமார் தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் கு.வெங்கடேசன், மாவட்ட அமைப்பு செயலாளர் ஆர்.பாலாஜி, மாவட்ட அமைப்பு தலைவர் பாபுயாதவ், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜி.கே.ரவி, ஒன்றிய குழு உறுப்பினர் ஜி. சுரேஷ்குமார் உள்பட அணி பொறுப்பாளர்கள், ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட மகளிர் சங்க தலைவர் கலைவாணி நன்றி கூறினார். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
ஒன்றிய பொறுப்பில் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் உடன் இணைந்து 15 பேர் கொண்ட கிளை பொறுப்பை நியமிப்பது, 5 பேர் கொண்ட அணி பொறுப்பை நியமித்து தின்னை பிரசாரம் குழுவை நியமிப்பது.
குடியாத்தம் அரசு மருத்துவமனை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றி வாகனம் நிறுத்தும் இடம் ஏற்படுத்தி பொதுமக்களுக்கும், ஆம்புலன்சில் வரும் நோயாளிகளுக்கு ஏற்படும் சிரமங்களை குடியாத்தம் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனியார் மில்லில் இருந்து நூல் கொள்முதல் செய்து கைத்தறி சங்க நெசவாளர்களுக்கு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொள்வது.
பள்ளி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள நேதாஜி சவுக் ஒரு வழி பாதையில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கடையை உடனடியாக அகற்ற வேண்டும்.
கூட நகரம் ஊராட்சியில் அமைக்கப்பட்டு வரும் ெரயில்வே மேம்பாலத்தை உடனடியாக கட்டாமல் மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்காத பொதுப்பணி துறையையும், நெடுஞ்சாலை துறையையும் கண்டிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- சந்திர கிரகணத்தையொட்டி நடவடிக்கை
- சாமி தரிசனத்திற்கு அனுமதி இல்லை
வேலூர்:
சந்திர கிரகணம் இன்று மதியம் 2.39 மணியில் இருந்து மாலை 6.29 மணி வரை நிகழ்கிறது. இதனையொட்டி கோவில்களில் நடை சாத்தப்பட்டது.
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் இன்று மதியம் 1 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இரவு 7.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.
வேலூர் அண்ணா சாலையில் உள்ள திருப்பதி தேவஸ்தான சீனிவாச பெருமாள் கோவிலில் காலை முதலே நடை சாத்தப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்த பிறகு தேவஸ்தான கோவில் நடை திறக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி அம்மன் கோவிலில் இன்று சந்திர கிரகணத்தையொட்டி மதியம் 12 மணிக்கு நடை சாத்தப்பட்டது.
ஸ்ரீபுரம் தங்கக் கோவில் இன்று மதியம் 12 மணிக்கு மூடப்பட்டது.தொடர்ந்து இன்று முழுவதும் நடை சாத்தப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இதேபோல ரத்தினகிரி, வள்ளிமலை உள்ளிட்ட முருகர் கோவிலிலும் இன்று சந்திர கிரகணத்தையொட்டி மதியம் முதல் இரவு 7 மணி வரை நடை சாத்தப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
- விடுமுறை நாட்களில் ஒடுகத்தூரில் உள்ள துணிக்கடைக்கு வேலைக்கு செல்லும் மாணவி இரவு பணி முடிந்து கத்தாரி குப்பம் வரை பஸ்சில் வருவார்.
- கத்தாரிக்குப்பம் பஸ் நிறுத்தத்தில் இருந்து அவரது தந்தை பைக்கில் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்வது வழக்கம்.
ஒடுகத்தூர்:
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரில் இருந்து மேல்அரசம்பட்டு செல்லும் சாலையில் உள்ள கத்தாரிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 27). ஊசூர் அடுத்துள்ள தார் வழியில் உள்ள ஒரு பேக்கரி கடையில் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி கடந்த வாரம்தான் பெண் குழந்தை பிறந்தது.
இதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி மீது சரத்குமாருக்கு மோகம் ஏற்பட்டுள்ளது. மாணவி குடியாத்தம் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். குடும்ப சூழ்நிலை காரணமாக சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் ஒடுகத்தூரில் உள்ள ஒரு துணிக்கடையில் மாணவி வேலை பார்த்து வந்தார். அதில் வரும் சம்பள பணத்தை படிப்பு செலவிற்கு பயன்படுத்திக் கொண்டார்.
இந்த நிலையில் சரத்குமார் மாணவி தனியாக செல்லும் நேரத்தில் அவரிடம் ஆபாசமாக பேசி உள்ளார். தனது ஆசைக்கு இணங்குமாறு மாணவியை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டுகளாக சரத்குமார் மாணவியை பின் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்தார்.
தனக்கு ஏற்கனவே திருமணமாகி பெண் குழந்தை பிறந்த பொறுப்பு கூட இல்லாமல் மாணவியை அடைவதில் சரத்குமார் குறியாக இருந்தார்.
விடுமுறை நாட்களில் ஒடுகத்தூரில் உள்ள துணிக்கடைக்கு வேலைக்கு செல்லும் மாணவி இரவு பணி முடிந்து கத்தாரி குப்பம் வரை பஸ்சில் வருவார். கத்தாரிக்குப்பம் பஸ் நிறுத்தத்தில் இருந்து அவரது தந்தை பைக்கில் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்வது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவு மாணவி துணிக்கடையில் வேலை முடிந்து இரவு 8.30 மணிக்கு ஒடுகத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து கத்தாரி குப்பத்திற்கு பஸ்சில் சென்று இறங்கினார்.
ஆனால் அவரது தந்தை அங்கு அழைத்துச் செல்ல வரவில்லை. அந்த நேரத்தில் மாணவியின் வருகைக்காக சரத்குமார் முன்கூட்டியே அங்கு காத்திருந்தார்.
ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் நடந்து சென்ற மாணவியை சரத்குமார் தன்னுடன் வருமாறு கையை பிடித்து இழுத்து வற்புறுத்தினார்.
இதனை சற்றும் எதிர்பாராத மாணவி கத்தி கூச்சலிட்டார். அப்போது சரத்குமார் மாணவியின் வாயில் துணியை கட்டி கொலை மிரட்டல் விடுத்தார். மாணவியை வேகமாக அருகில் உள்ள வாழைத்தோட்டத்திற்குள் இழுத்துச் சென்றார். கை, வாய் ஆகியவற்றை துணியால் கட்டி வலுக்கட்டாயமாக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் கட்டாயப்படுத்தி மீண்டும் மீண்டும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
நடந்த சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால் உன்னையும் உன் குடும்பத்தையும் கொன்று விடுவேன் என மிரட்டினார். இதையடுத்து இரவு 10 மணி அளவில் மாணவி வீட்டுக்குச் சென்றார்.
தனக்கு நடந்த கொடூர சம்பவம் குறித்து தனது தாயிடம் அழுது கொண்டே கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து வேப்பங்குப்பம் போலீசில் புகார் கொடுத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் போக்சோ சட்டத்தின் கீழ் சரத்குமாரை கைது செய்தார். அவர் இன்று வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். பிறந்து ஒரு வாரமே ஆன தனது மகளை கொஞ்ச வேண்டிய சரத்குமார் பொறுப்பில்லாத தன்னுடைய வக்கிர புத்தியால் சிறையில் கம்பி எண்ணுகிறார்.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு இன்று வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடந்தது. வீட்டிற்கு தனியாக சென்ற மாணவியை மிரட்டி வாலிபர் பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒடுகத்தூர் மேல்அரசம்பட்டு சாலை இருபுறமும் விவசாயம் மற்றும் அடர்ந்த வனப்பகுதி நிறைந்து காணப்படுகிறது. இந்த சாலையில் இது போன்ற சம்பவம் நடந்துள்ளதால் அந்தப் பகுதி பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதனை தடுக்க இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என அந்த பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- கலெக்டர் அலுவலகத்தில் புகார்
- நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. இதில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். காட்பாடி அருகே உள்ள கொடுக்கந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர் புகார் மனு ஒன்று அளித்தார்.
அதில் ஊராட்சி செயலாளர் மீது நான் ஊழல் தொடர்பான புகார் அளித்தேன். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று என்னை புகாரை வாபஸ் பெற கோரி மிரட்டி கும்பல் ஒன்று அடித்து தாக்கினர். என்னையும் என் குடும்பத்தினரை பழிவாங்க நினைக்கின்றனர். உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரை சேர்ந்த சீத்தம்மாள் (76) என்பவர் காட்டுப்புத்தூர் கிராமத்தில் தனது பெயரில் உள்ள சொத்தை பாகப்பிரிவினை செய்யவிடாமல் மறுக்கும் மகன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.






