search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் மில்களில் இருந்து நூல் கொள்முதல் செய்து கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்க வேண்டும்
    X

    பா.ம.க. மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்த காட்சி.

    தனியார் மில்களில் இருந்து நூல் கொள்முதல் செய்து கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்க வேண்டும்

    • பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த லட்சுமணாபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேலூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் என்.குமார் தலைமை தாங்கினார்.

    மாவட்ட தலைவர் கு.வெங்கடேசன், மாவட்ட அமைப்பு செயலாளர் ஆர்.பாலாஜி, மாவட்ட அமைப்பு தலைவர் பாபுயாதவ், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜி.கே.ரவி, ஒன்றிய குழு உறுப்பினர் ஜி. சுரேஷ்குமார் உள்பட அணி பொறுப்பாளர்கள், ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட மகளிர் சங்க தலைவர் கலைவாணி நன்றி கூறினார். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

    ஒன்றிய பொறுப்பில் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் உடன் இணைந்து 15 பேர் கொண்ட கிளை பொறுப்பை நியமிப்பது, 5 பேர் கொண்ட அணி பொறுப்பை நியமித்து தின்னை பிரசாரம் குழுவை நியமிப்பது.

    குடியாத்தம் அரசு மருத்துவமனை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றி வாகனம் நிறுத்தும் இடம் ஏற்படுத்தி பொதுமக்களுக்கும், ஆம்புலன்சில் வரும் நோயாளிகளுக்கு ஏற்படும் சிரமங்களை குடியாத்தம் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தனியார் மில்லில் இருந்து நூல் கொள்முதல் செய்து கைத்தறி சங்க நெசவாளர்களுக்கு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொள்வது.

    பள்ளி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள நேதாஜி சவுக் ஒரு வழி பாதையில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கடையை உடனடியாக அகற்ற வேண்டும்.

    கூட நகரம் ஊராட்சியில் அமைக்கப்பட்டு வரும் ெரயில்வே மேம்பாலத்தை உடனடியாக கட்டாமல் மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்காத பொதுப்பணி துறையையும், நெடுஞ்சாலை துறையையும் கண்டிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×