என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கியாஸ் சிலிண்டர் வெடித்து குடிசை வீடு எரிந்து நாசம்
    X

    வேலூர் அடுத்த பெருமுகையில் தீப்பிடித்து எரிந்த குடிசை வீடு.

    கியாஸ் சிலிண்டர் வெடித்து குடிசை வீடு எரிந்து நாசம்

    • ஆதார் கார்டு, பணம் எரிந்தது
    • தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள பிள்ளையார் குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரம். கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஜெயந்தி. தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    சுந்தரம் குடும்பத்துடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார். இன்று காலை சுந்தரத்தின் மனைவி சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது திடீரென அடுப்பில் எரிந்த தீ குடிசை வீட்டில் பற்றியது.

    தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயந்தி வீட்டிலிருந்த கணவன் மற்றும் பிள்ளைகளை வெளியே அழைத்துக் கொண்டு ஓடி வந்தார். அக்கம் பக்கத்தினர் சேர்ந்து வீட்டில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர்.

    அந்த நேரத்தில் வீட்டில் இருந்த சமையல் கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    இதனால் வீடு முழுவதும் பரவி எரிந்தது. தகவல் அறிந்த வேலூர் தீணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். வீட்டிலிருந்த பிரிட்ஜ், டி.வி., குழந்தைகளின் பள்ளி சான்றிதழ்கள் ஆதார் கார்டு மற்றும் பணம் ஆகியவை எரிந்து நாசமானது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×