என் மலர்
வேலூர்
- முன்னாள் தலைமை அறிவியல் ஆலோசகர் டாக்டர். ஆர். சிதம்பரம் பேச்சு
- பல்வேறு கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வழியாகவும் பங்கேற்றனர்
வேலூர்:
விஐடியில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்நுட்ப தொலைநோக்கு என்ற கருத்தரங்கு நடந்தது. இதில் இந்தியாவின் முன்னாள் தலைமை அறிவியல் ஆலோசகரும், அனு ஆற்றல் ஆணையத்தின் முன்னாள் தலைவரும் ஏ.ஐ.சி.டி.இ-யின் பேராசிரியரும் பத்ம விபூஷன், டாக்டர். ஆர். சிதம்பரம் பேசியதாவது:-
கருத்தரங்கு
இந்தியா பொருளாதார ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் மேம்படுத்தப்படுகிறது. இந்தக் கருத்தரங்கின் முக்கிய நோக்கமானது ஆராய்ச்சியின் தேவைகள் அதற்கு கல்வி நிறுவனங்களின் முக்கிய பங்கு, அதேபோல் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதாகும்.
இந்தியா முன்னிலை வகிக்க வேண்டும்
இந்தியா அறிவியலிலும், பொருளாதாரத்திலும் உலக அரங்கில் முன்னணி வகிக்க வேண்டும். இந்தியா பொருளாதார ரீதியாக வளர அறிவியல் ரீதியாக மேம்பட்ட மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்தும் பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.
இந்த கருத்தரங்கில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் விஐடி துணைவேந்தர், இணை துணை வேந்தர், பதிவாளர், துறை தலைவர்கள் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பல்வேறு கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வழியாகவும் பங்கேற்றனர்.
- நெஞ்சு வலி காரணமாக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற சென்னை கைதி உயிரிழந்தார்.
- பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 43). திருவண்ணாமலையில் நடந்த திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார். இவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். நேற்று இரவு சரவணனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
அவரை உடனடியாக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சரவணன் அதிகாலை பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனியார் மருத்துவக் கல்லூரி முதல்வர் சார்பில் பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
- பாகாயம் போலீசார் மாணவர்கள் 7 பேர் மீதும் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
வேலூர்:
வேலூர் தனியார் மருத்துவக் கல்லூரி விடுதியில் முதலாம் ஆண்டு மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்தனர்.
முதலாம் ஆண்டு மாணவர்களை அரை நிர்வாணப்படுத்தி டவுசருடன் விடுதி வளாகத்தில் ஓட விட்டுள்ளனர்.
குட்டிக்கரணம், தண்டால் எடுப்பது, மாணவர்கள் கட்டி பிடித்து முத்தம் கொடுக்க செய்து ராக்கிங் கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. மேலும் மருத்துவ கல்லூரி நிர்வாகத்திற்கு புகார் கடிதம் வந்தது. இதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தினர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து மருத்துவ கல்லூரி மாணவர்கள் 7 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
தனியார் மருத்துவக் கல்லூரி முதல்வர் சார்பில் பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக பாகாயம் போலீசார் மாணவர்கள் 7 பேர் மீதும் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
வேலூர் தனியார் மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை ராக்கிங் செய்ததாக மாணவர்கள் 7 பேர் மீது 2 பிரிவுகளில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
7 பேரும் ஆந்திரா மற்றும் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றனர்.
- சத்தம்போட்டு பேசிக்கொண்டிருந்த மாணவர்கள் மைதானத்தை 4 முறை சுற்றி ஓடி வரும்படி உத்தரவிட்டுள்ளார்.
- மாணவன் மரணம் தொடர்பாக அணைக்கட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் 9ம் வகுப்புக்கு ஆசிரியர் யாரும் வராததால் மாணவர்கள் சத்தமாக பேசிக்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருந்தனர். அப்போது அங்கு வந்த தலைமை ஆசிரியர், மாணவர்களை கண்டித்துள்ளார். அத்துடன், சத்தம்போட்டு பேசிக்கொண்டிருந்த மாணவர்களை, பள்ளியின் மைதானத்தை சுற்றி 4 முறை ஓடி வரும்படி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி மாணவர்கள் மைதானத்தை சுற்றி ஓடிக்கொண்டிருந்தனர். அப்போது மோகன்ராஜ் என்ற மாணவன் திடீரென சுருண்டு விழுந்தான். அவனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவனது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவன் சிகிச்சை பலனின்றி இறந்துபோனான். இதுதொடர்பாக அணைக்கட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மேயர் சுஜாதா தகவல்
- மீன் வியாபாரி சங்கத்தினருடன் ஆலோசனை
வேலூர்:
வேலூர் கோட்டை அகழியில் இருந்து உபரி நீர் வெளியேறும் கால்வாயை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மேயர் சுஜாதா துணைமேயர் சுனில் குமார் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதையடுத்து புதிய மீன் மார்க்கெட்டிற்கு சென்ற கலெக்டர் மீன் விற்பனை குறித்து வியாபாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வு குறித்து மேயர் சுஜாதா கூறுகையில்:-
அகழியில் இருந்து உபரி நீர் வெளியேறும் கால்வாய் முழுவதும் தூர்வாரப்பட்டு சரி செய்யப்படும். மீன் மார்க்கெட் வியாபாரிகள் சாலையோரம் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து கொள்கின்றனர். இதனால் காலை வேலைகளில் பெங்களூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே மீன் மார்க்கெட் சாலையோரம் உள்ள தடுப்பு சுவர் முழுவதும் அகற்றப்படும். அதன்பின்னர் தடுப்புச் சுவரை நகர்த்தி வைப்பது குறித்து ஆலோசனை செய்யப்படும்.
மீன் மார்க்கெட் வெளியே பேவர் பிளாக் கற்கள் பதிக்க மீன் வியாபாரி சங்கத்தினருடன் ஆலோசனை செய்யப்படும் என்றார்.
- தகவல் தெரிவித்தும் வனத்துறை அதிகாரிகள் வரவில்லை
- பொதுமக்களே பிடித்து காட்டில் விட்டனர்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அருகே உள்ள போடிப்பேட்டை கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதேப்பகுதியில் கோழி இறைச்சிக்கடை ஒன்று உள்ளது.
அப்போது சுமார் இரவு 9 மணி அளவில் மலைப்பாம்பு ஒன்று இறைச்சியை சாப்பிட கடையை நோக்கி வந்துள்ளது. திடீரென அதனைப்பார்த்த கடையின் உரிமையாளர் பாம்பு, பாம்பு என கூச்சலிட்டுள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஒடுகத்தூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனை சற்றும் பொருட்படுத்தாமல் வனத்துறை அதிகாரிகள் நாங்கள் வர முடியாது நீங்களே பிடித்து காட்டில் விட்டு விடுங்கள் என சாமர்த்தியமாக கூறியுள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஒரு குழுவாக சேர்ந்து சுமார் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து சாக்கு பையில் அடைத்து அருகே இருந்த காப்புக்காட்டில் பத்திரமாக விட்டனர். இரவு நேரத்தில் ஊருக்குள் 7 அடி நீளமுடைய மலைப்பாம்பு புகுந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.
- சீஸ்மோகிராப் கருவி பொருத்தப்பட்டு கண்காணிப்பு
- வருவாய் துறையினர் விசாரணை
பேரணாம்பட்டு:
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரில் தரைக் காடு, குப்பைமேடு உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் சுற்றுப் புற கிராமங்களிலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மட் டும் தொடர்ந்து 4 முறை நில அதிர்வு ஏற்பட்டது.
பொது மக்கள் பீதிக்குள்ளாகினர். இதனைத்தொடர்ந்து மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
அதைதொடர்ந்து பேரணாம் பட்டு தாலுகா அலுவலகத் தில் நில அதிர்வை பதிவு செய்யும் சீஸ்மோகிராப் கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் பேரணாம்பட்டில் தரைக்காடு பகுதியில் நேற்று மதியம் சுமார் 1.25 மணியள வில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டு வெடிச்சத்தம் போன்று சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் வீடுகளில் பாத்திரங்கள் உருண்டன. தரைக் காடு பகுதியில் வசிக்கும் முபாரக் என்பவரின் வீட்டின் சுவரில் விரிசல் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
இந்த நில அதிர்வு சில நொடிகள் நீடித்ததாக பொது மக்கள் கூறினர். நில அதிர்வினால் பொதுமக்கள் அதிர்ச் சியடைந்து பீதிக்குள்ளாகி வீடுகளிலிருந்து வெளியே ஓடி வந்துதெருவில் நின்றனர்.
இது குறித்து தகவலறிந்த பேர ணாம்பட்டு வருவாய் ஆய்வா ளர் கீதா, கிராம நிர்வாக அலுவலர் அன்பரசன் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை நடத்தினர்.
- சமூக வலைதளத்தில் வீடியோ பரவல்
- நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி
வேலூர்:
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் தினந்தோறும் காலை முதல் இரவு வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலில் உள்ள சிற்பங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
இவற்றை சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பார்வையிட்டும் அதன் அருகில் இருந்து போட்டோ எடுத்து மகிழ்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜலகண்டேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் வழியாக செருப்பு அணிந்து 2 பேர் கோவிலுக்குள் சென்றனர்.
அவர்கள் அங்குள்ள கல்யாண மண்டபம் அருகே செருப்பு காலுடன் வலம் வந்துனர். இதனை கண்ட பக்தர்கள் சிலர் கோவிலுக்குள் ஏன் செருப்பு அணிந்து வந்திருக்கிறீர்கள் வெளியே கழட்டி விட்டால் என்ன என கேட்டுள்ளனர்.
அப்போது அவர்கள் நாங்கள் இருவரும் தொல்பொருள் துறை அதிகாரிகள். எங்கள் கட்டுப்பாட்டில் தான் கோவில் உள்ளது.நீங்கள் வந்தோமா.. சாமி கும்பிட்டு விட்டு சென்றோமா.. என இருக்க வேண்டும்.எங்களைக் கேள்வி கேட்க வேண்டிய அவசியமில்லை என அலட்சியமாக பதில் அளித்தனர். இதனால் பக்தர்களுக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதிகாரிகள் என கூறிக்கொண்டு செருப்பு அணிந்து கோவிலுக்குள் 2 பேர் இருப்பதை செல்போனில் பக்தர்கள் வீடியோ எடுத்தனர். இது சமூக வலைதளங்களிலும் பரவியது.
இதனால் ஆவேசமடைந்த வேலூர் மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் இது தொடர்பாக தொல்பொருள் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அப்போது கோவில் என்பது புனிதமான ஒன்று.
ராஜகோபுரத்திற்கு உள்ளே செருப்பு காலுடன் வருவது குற்றமாகும். கோவிலுக்குள் யார் செருப்பு அணிந்து வந்தாலும் காலை வெட்டுவோம். அதிகாரிகள் என்றால் கூட புனிதமான இடத்தில் செருப்பு அணிந்து வருவது இந்திய சாசன சட்டத்திற்கு எதிரானது.
யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவேசமாக கூறினர். இதைக் கேட்டு அதிர்ச்சி யடைந்த தொல்பொருள் துறை அதிகாரிகள் யார் கோவிலுக்குள் செருப்பு அணிந்து உள்ளே சென்றார்கள் என்பது தெரியவில்லை.
அவர்கள் யார் என்று குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என என்றனர்.
- பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டது
- பணிகள் குறித்து ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தீயணைப்பு நிலையத்தில் உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் எஸ்.பழனி தலைமையில் வருடாந்திர ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின் போது தீ விபத்து மற்றும் தடுப்பு பணிகளுக்கான பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டது.
குடியாத்தம் தீயணைப்பு நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பட்டாசு கடைகளில் விவரங்கள் அடங்கிய பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து இயற்கை இடற்பாடுகள் மற்றும் பேரிடர் காலங்களில் மீட்பு பணியின் போது கொண்டு செல்லப்படும் உபகரணங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
அந்த உபகரணங்கள் சரியானபடி உள்ளதா எனவும் ஆய்வு செய்யப்பட்டது மேலும் தீ தடுப்பு கருவிகள் சரியான முறையில் இயங்குகின்றதா எனவும் ஆய்வு செய்யப்பட்டது இந்த ஆய்வின் போது குடியாத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் கே. லோகநாதன் உடன் இருந்தார்.
முன்னதாக குடியாத்தம் தீயணைப்பு வீரர்களின் தீ தடுப்பு பணிகள் குறித்து ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.
- தனியார் மருத்துவக் கல்லூரி முதல்வர் சார்பில் பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
- முதல் கட்டமாக மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களிடம் விசாரணையை தொடங்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
வேலூர்:
வேலூர் தனியார் மருத்துவக் கல்லூரி விடுதியில் முதலாம் ஆண்டு மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்துள்ளனர்.
முதலாம் ஆண்டு மாணவர்களை அரை நிர்வாணப்படுத்தி டவுசருடன் விடுதி வளாகத்தில் ஓட விட்டுள்ளனர். மேலும் அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து ஆரவாரம் செய்துள்ளனர்.
குட்டிக்கரணம், தண்டால் எடுப்பது, மாணவர்கள் கட்டி பிடித்து முத்தம் கொடுக்க செய்து ராக்கிங் கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது.
மேலும் மருத்துவ கல்லூரி நிர்வாகத்திற்கு புகார் கடிதம் வந்தது. இதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தினர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து மருத்துவ கல்லூரி மாணவர்கள் 7 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
ராக்கிங் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி முதலாம் ஆண்டு மாணவர்கள் மீது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த கொடுமையான செயலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தனியார் மருத்துவக் கல்லூரி முதல்வர் சார்பில் பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் எங்களுடைய மருத்துவ கல்லூரி விடுதியில் ராக்கிங் செய்யப்பட்டதாக வீடியோ மற்றும் மொட்டை கடிதத்தில் புகார் வந்துள்ளது. இது சம்பந்தமாக விசாரணை நடத்தி 7 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம்.
மேலும் இது குறித்த விவரங்களையும் இணைத்துள்ளோம். இந்த ராக்கிங் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக பாகாயம் போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர். முதல் கட்டமாக மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களிடம் விசாரணையை தொடங்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
- இயக்குனர் விக்ரம் மேத்யூஸ் தகவல்
- வேலூர் வளாகம் தான் எப்போதும் தலைமையிடமாக செயல்படும்
வேலூர்:
வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரி இயக்குனர் விக்ரம் மேத்யூஸ் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரியில் புதிய கிளை ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கில் திறக்கப்பட்டு முழுமையாக செயல்பட்டு வருகிறது. சில சிறப்பு துறைகள் முதன்மையாக ராணிப்பேட்டை வளாகத்திலும் மற்றவை வேலூர் வளாகத்திலும் செயல்படுகின்றன.
வேலூர் வளாகத்தில் உள்ள சில கட்டிடங்கள் மிகவும் பழமையானதாகவும் சுண்ணாம்பு சுவர்களை கொண்டதாகவும் உள்ளது.
இந்த கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. இதற்கான பணிகள் 6 மாத காலத்தில் தொடங்கப்பட உள்ளது. எத்தகைய பிரச்சினை உள்ள நோயாளியும் அவசர உதவிக்கு இந்த இரண்டு வளாகங்களில் உள்ள அவசர சிகிச்சை பிரிவை அணுகலாம்.
வேலூர் வளாகத்தில் இருந்து வழக்கம்போல் அனைத்து பிரிவுகளும் செயல்படும். சில நோயாளிகள் சிறப்பு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் எங்களுடைய 2 வளாகங்களுக்கு இடையே மாற்றப்படலாம். 2 வளாகங்களிலும் நெஞ்சு வலிக்கான சேவைகள் வழங்கப்படுகிறது. எங்களுடைய இருதய நோய் நிபுணர்களால் வேலூர் டவுன் வளாகத்திலேயே சிகிச்சை அளிக்கப்படும்.
வேலூர் வளாகத்தில் இருந்து அனைத்து துறைகளும் ராணிப்பேட்டை வளாகத்திற்கு மாற்றப்பட்டு விட்டதாக வதந்தி பரவுகிறது. இதனை பொதுமக்கள் நம்ப வேண்டாம். தற்போது 13 துறைகள் மட்டுமே ராணிப்பேட்டை வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இன்னும் 2 ஆண்டுகளில் வேலூர் சிஎம்சி வளாகம் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு உலக தரத்தில் மேம்படுத்தப்பட உள்ளது. சிஎம்சி ஆஸ்பத்திரியை பொறுத்தவரையில் வேலூர் வளாகம் தான் எப்போதும் தலைமையிடமாக கொண்டு செயல்படும்.
சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் ராக்கிங் சம்பந்தமாக விசாரணை நடந்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சி.எம்.சி.ஆஸ்பத்திரி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் துரை ஜாஸ்பர் உடன் இருந்தார்.
- 5 சட்டமன்ற தொகுதியில் 12 லட்சத்து 68,108 வாக்காளர்கள் உள்ளனர்
- 9,787 பேர் புதிதாக சேர்ப்பு; 35,127 பேர் நீக்கம்
வேலூர்:
இந்திய தேர்தல் ஆணையம் 2023 ஜனவரி 1-ந் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு சிறப்பு சுருக்க திருத்தம் வாக்காளர் பட்டியல் தயாரிக்க உத்தரவிட்டுள்ளது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று வெளியிட்டார்.
வேலூர் மாவட்டத்தில் 12 லட்சத்து 68 ஆயிரத்து 108 வாக்காளர்கள் உள்ளனர். வழக்கம் போல் பெண் வாக்காளர்களே அதிகம். வேலூர் மாவட்டத்தில் 153 மூன்றாம் பாலினத்தவர் இடம் பெற்றுள்ளனர்
வேலூர் மாவட்டத்தில் 9,787 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இறப்பு, இரு முறை பதிவு, இடமாறுதல் உள்ளிட்ட காரணங்களால் 35,127 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் 6 லட்சத்து 13 ஆயிரத்தி 707 ஆண் வாக்காளர்களும் 6 லட்சத்து 54 ஆயிரத்து 248 பெண் வாக்காளர்களும் 153 மூன்றாம் பாலினத்தவர் என 12 லட்சத்து 68 ஆயிரத்து 108 பேர் இடம் பெற்றுள்ளனர்.
காட்பாடி தொகுதியில் 1 லட்சத்து 18 ஆயிரத்தது 128 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 26 ஆயிரத்து 594 பெண் வாக்காளர்களும் 34 மூன்றாம் பாலினத்தவர் என 2 லட்சத்து 44 ஆயிரத்து 756 பேர் உள்ளனர்.
வேலூர் தொகுதியில் 1 லட்சத்து 21 ஆயிரத்தி 822 ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 31 ஆயிரத்து 491 பெண் வாக்காளர்கள் 37 மூன்றாம் பாலினத்தவர் என 2 லட்சத்து 53 ஆயிரத்து 350 பேர் உள்ளனர்.
அணைக்கட்டு தொகுதியில் 1 லட்சத்து 23 ஆயிரத்தி 713 ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 31 ஆயிரத்து 433 பெண் வாக்காளர்கள் 31 மூன்றாம் பாலினத்தவர் என 2 லட்சத்து 55 ஆயிரத்து 177 பேர் இடம் பெற்றுள்ளனர்.
கீழ்வைத்தினான் குப்பம் (கே.வி.குப்பம்) (தனி) தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்தி 658 ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 15 ஆயிரத்து 595 பெண் வாக்காளர்கள் 8 மூன்றாம் பாலினத்தவர் என 2 லட்சத்து 26 ஆயிரத்து 261 பேர் இடம் பெற்றுள்ளனர்.
குடியாத்தம் (தனி) தொகுதியில் 1 லட்சத்து 39 ஆயிரத்தி 386 ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 49 ஆயிரத்து 135 பெண் வாக்காளர்கள் 43 மூன்றாம் பாலினத்தவர் என 2 லட்சத்து 88 ஆயிரத்து 564 பேர் உள்ளனர்.
மேலும் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் 652 இடங்களில் உள்ள 1300 வாக்குச்சாவடி மையங்களிலும் மாநகராட்சி அலுவலகம் மற்றும் வருவாய் கோட்ட அலுவலகங்கள். வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், என மொத்தம்
666 இடங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த வாக்காளர் பட்டியல் இன்று முதல் 08-12-2022 வரை ஒரு மாத காலத்திற்கு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.
வாக்காளர்களின் பெயர் சேர்த்தல் நீக்குதல் போன்றவற்றை இணையதளம் வாயிலாகவும் பட்டியலில் சேர்க்க நீக்கவும் செய்யலாம். அத்துடன் நவம்பர்12,13,26 மற்றும் 27 ஆகிய 4 விடுமுறை நாட்களிலும் சிறப்பு முகாம்கள் நடக்கவுள்ளது. இதனை மக்கள் பயன்படுத்திகொள்ள வேண்டும்.
மாவட்டத்திலுள்ள பொதுமக்களும் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெ ற்றுள்ளதா என சரிபார்த்து,
பெயர் சேர்க்க படிவம் 6A, ஆதார் என் சேர்க்க படிவம் 6 பி பட்டியலில் பெயர் நீக்கம் செய்ய படிவம் 7,திருத்தம் செய்ய படிவம் 8,முகவரி மாற்றம் செய்ய படிவம் 8A ஆகியவற்றின் விண்ணப்பம் செய்யலாம் என கலெக்டர் தெரிவித்தார்.






