வேலூர் ஜெயிலில் சென்னை கைதி திடீர் மரணம்

நெஞ்சு வலி காரணமாக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற சென்னை கைதி உயிரிழந்தார். பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் ஜெயிலில் சென்னை கைதி திடீர் மரணம்
Published on

வேலூர்:

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 43). திருவண்ணாமலையில் நடந்த திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார். இவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். நேற்று இரவு சரவணனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

அவரை உடனடியாக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சரவணன் அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com