என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய மீன் மார்க்கெட்"

    • மேயர் சுஜாதா தகவல்
    • மீன் வியாபாரி சங்கத்தினருடன் ஆலோசனை

    வேலூர்:

    வேலூர் கோட்டை அகழியில் இருந்து உபரி நீர் வெளியேறும் கால்வாயை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மேயர் சுஜாதா துணைமேயர் சுனில் குமார் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இதையடுத்து புதிய மீன் மார்க்கெட்டிற்கு சென்ற கலெக்டர் மீன் விற்பனை குறித்து வியாபாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வு குறித்து மேயர் சுஜாதா கூறுகையில்:-

    அகழியில் இருந்து உபரி நீர் வெளியேறும் கால்வாய் முழுவதும் தூர்வாரப்பட்டு சரி செய்யப்படும். மீன் மார்க்கெட் வியாபாரிகள் சாலையோரம் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து கொள்கின்றனர். இதனால் காலை வேலைகளில் பெங்களூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    எனவே மீன் மார்க்கெட் சாலையோரம் உள்ள தடுப்பு சுவர் முழுவதும் அகற்றப்படும். அதன்பின்னர் தடுப்புச் சுவரை நகர்த்தி வைப்பது குறித்து ஆலோசனை செய்யப்படும்.

    மீன் மார்க்கெட் வெளியே பேவர் பிளாக் கற்கள் பதிக்க மீன் வியாபாரி சங்கத்தினருடன் ஆலோசனை செய்யப்படும் என்றார்.

    • திருச்சி காந்தி மார்க்கெட் அருகாமையில் கிழக்கு புலிவார்டு ரோடு பகுதியில் பழமையான கட்டிடத்தில் மீன் மார்க்கெட் இயங்கி வந்தது.
    • இரண்டு மாடியில் மீன் மற்றும் ஆட்டு இறைச்சி வியாபாரிகளுக்கு 148 கடைகள் அமைக்கப்படுகின்றன. மேலும் இறைச்சி மற்றும் மீன் வகைகளை பாதுகாக்க குளிர் பதன கிடங்கு வசதியும் செய்யப்படுகிறது.

    திருச்சி,

    திருச்சி காந்தி மார்க்கெட் அருகாமையில் கிழக்கு புலிவார்டு ரோடு பகுதியில் பழமையான கட்டிடத்தில் மீன் மார்க்கெட் இயங்கி வந்தது. இந்த நிலையில் அந்த ஓட்டு கட்டிடத்தை இடித்து விட்டு அதே பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.13 கோடியில் புதிய மீன் மார்க்கெட் வளாகம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

    தற்போது புதிய கட்டடத்தின் கட்டுமான பணி 75 சதவீதம் பூர்த்தி அடைந்துள்ளது. வருகிற டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் புதிய மீன் மார்க்கெட் கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பழைய மீன் மார்க்கெட்டில் 60 கடைகள் மட்டுமே இயங்கி வந்தன. பழைய மார்க்கெட் இடிக்கப்பட்டதை தொடர்ந்து தற்காலிகமாக விறகுபேட்டை பகுதியில் வியாபாரம் செய்ய மாநகராட்சி சார்பில் இடம் ஒதுக்கப்பட்டது.

    புதிய மீன் மார்க்கெட் வளாகம் 25 ஆயிரம் சதுர அடியில் விசாலமான இடவசதியுடன் கட்டப்படுகிறது. இரண்டு மாடியில் மீன் மற்றும் ஆட்டு இறைச்சி வியாபாரிகளுக்கு 148 கடைகள் அமைக்கப்படுகின்றன. மேலும் இறைச்சி மற்றும் மீன் வகைகளை பாதுகாக்க குளிர் பதன கிடங்கு வசதியும் செய்யப்படுகிறது.

    பழைய கட்டிடத்தில் பார்க்கிங் வசதி இல்லாமல் இருந்தது. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் தற்போதைய புதிய மார்க்கெட் வளாகத்தில் 200 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வசதி செய்யப்பட உள்ளது. பணிகள் தொடர்பாக மாநகராட்சி இளநிலை இன்ஜினியர் ஒருவர் கூறும் போது,

    தற்போதைய நிலையில் ரூப் மட்டும் செங்கல் கட்டும் பணிகள் நிறைவடைந்துள்ளன. சிமெண்ட் பூச்சு, எலக்ட்ரிகல் மற்றும் பிளம்பிங் வேலைகள் விரைந்து தொடங்க இருக்கின்றோம். வருகிற டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து பணிகளும் பூர்த்தியடையும்

    அதன் பின்னர் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கும் பணி தொடங்கும். டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரியில் புதிய மீன் மார்க்கெட் உறுதியாக திறக்கப்படும் என தெரிவித்தார்.

    ×