என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A person wearing sandals"

    • சமூக வலைதளத்தில் வீடியோ பரவல்
    • நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி

    வேலூர்:

    வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் தினந்தோறும் காலை முதல் இரவு வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலில் உள்ள சிற்பங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

    இவற்றை சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பார்வையிட்டும் அதன் அருகில் இருந்து போட்டோ எடுத்து மகிழ்கின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜலகண்டேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் வழியாக செருப்பு அணிந்து 2 பேர் கோவிலுக்குள் சென்றனர்.

    அவர்கள் அங்குள்ள கல்யாண மண்டபம் அருகே செருப்பு காலுடன் வலம் வந்துனர். இதனை கண்ட பக்தர்கள் சிலர் கோவிலுக்குள் ஏன் செருப்பு அணிந்து வந்திருக்கிறீர்கள் வெளியே கழட்டி விட்டால் என்ன என கேட்டுள்ளனர்.

    அப்போது அவர்கள் நாங்கள் இருவரும் தொல்பொருள் துறை அதிகாரிகள். எங்கள் கட்டுப்பாட்டில் தான் கோவில் உள்ளது.நீங்கள் வந்தோமா.. சாமி கும்பிட்டு விட்டு சென்றோமா.. என இருக்க வேண்டும்.எங்களைக் கேள்வி கேட்க வேண்டிய அவசியமில்லை என அலட்சியமாக பதில் அளித்தனர். இதனால் பக்தர்களுக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அதிகாரிகள் என கூறிக்கொண்டு செருப்பு அணிந்து கோவிலுக்குள் 2 பேர் இருப்பதை செல்போனில் பக்தர்கள் வீடியோ எடுத்தனர். இது சமூக வலைதளங்களிலும் பரவியது.

    இதனால் ஆவேசமடைந்த வேலூர் மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் இது தொடர்பாக தொல்பொருள் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அப்போது கோவில் என்பது புனிதமான ஒன்று.

    ராஜகோபுரத்திற்கு உள்ளே செருப்பு காலுடன் வருவது குற்றமாகும். கோவிலுக்குள் யார் செருப்பு அணிந்து வந்தாலும் காலை வெட்டுவோம். அதிகாரிகள் என்றால் கூட புனிதமான இடத்தில் செருப்பு அணிந்து வருவது இந்திய சாசன சட்டத்திற்கு எதிரானது.

    யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவேசமாக கூறினர். இதைக் கேட்டு அதிர்ச்சி யடைந்த தொல்பொருள் துறை அதிகாரிகள் யார் கோவிலுக்குள் செருப்பு அணிந்து உள்ளே சென்றார்கள் என்பது தெரியவில்லை‌.

    அவர்கள் யார் என்று குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என என்றனர்.

    ×