என் மலர்
நீங்கள் தேடியது "Prisoner Dead"
- கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து இரவு மாரி முத்துவின் உடலை பெற்றுக்கொண்டனர்.
- சம்பவம் தொடர்பாக, வனத்துறையினர் மற்றும் அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை நடத்தினர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மேல்குருமலை பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 58). இவர் புலிப்பல் வைத்திருந்ததாக கூறி, கடந்த 29-ந்தேதி உடுமலை வனத்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் வனத்துறை அலுவலகத்தில் உள்ள குளியலறையில் மாரிமுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என வனத்துறையினர் தெரிவித்தனர். தகவல் அறிந்த மாரிமுத்துவின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வனத்துறையினர் விசாரணை என்ற பெயரில் அடித்து துன்புறுத்தியதால் மாரிமுத்து உயிரிழந்தார் என்று குற்றம் சாட்டினர். போலீசார், வருவாய் துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி பிரேத பரிசோதனைக்காக மாரிமுத்து உடலை திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
நேற்று காலை உடுமலை மாஜிஸ்திரேட்டு நித்யகலா முன்னிலையில் மருத்துவர் குழுவினர் பிரேத பரிசோதனை நடத்தினர். பிரேத பரிசோதனை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டது. உடுமலை ஆர்.டி.ஓ., குமார், டி.எஸ்.பி., நமசிவாயம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மருத்துவமனை வளாகத்தில் மாரிமுத்துவின் உறவினர்கள் திரண்டிருந்தனர். அவரது குடும்பத்தினர் அடையாளம் உறுதிப்படுத்திய பின் உடல் பிரேத பரிசோதனை நடந்தது.
பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் அங்கு திரண்டிருந்த மாரிமுத்துவின் உறவினர்கள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் பிரேத பரிசோதனை கூடம் முன் அமர்ந்து உடலை வாங்க மறுத்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மாரிமுத்துவின் உறவினர்கள், பிரேத பரிசோதனை வீடியோ பதிவுகளை வழங்க வேண்டும். இந்த வழக்கை வன்கொடுமை சட்டத்தில் சேர்க்க வேண்டும். சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வேண்டும் என தர்ணாவில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து இரவு மாரி முத்துவின் உடலை பெற்றுக்கொண்டனர்.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக, வனத்துறையினர் மற்றும் அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை நடத்தினர். இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரக வனவர் நிமல் குமார், வனக்காவலர் செந்தில்குமார் ஆகியோரை சஸ்பெண்டு செய்து திருப்பூர் மாவட்ட வன அலுவலர் ராஜேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
- நெஞ்சு வலி காரணமாக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற சென்னை கைதி உயிரிழந்தார்.
- பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 43). திருவண்ணாமலையில் நடந்த திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார். இவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். நேற்று இரவு சரவணனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
அவரை உடனடியாக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சரவணன் அதிகாலை பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சீனிவாசனுக்கு கடந்த 15-ந்தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
- பாதிக்கப்பட்ட அவரை சேலம் அரசு மருத்துவனையில் சேர்த்தனர்.
சேலம்:
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள தொட்டியம் புதூரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 36). ஜோதிடரான இவர், நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக நடந்த கொலை வழக்கில், கடந்த அக்டோபர் மாதம் 7-ந் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சீனிவாசனுக்கு கடந்த 15-ந்தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட அவரை சேலம் அரசு மருத்துவனையில் சேர்த்தனர். அங்கேயே தொடர்ந்து சிகிச்சை பெற்ற வந்த நிலையில், நேற்று திடீரென சிகிச்சை பலனின்றி சீனிவாசன் உயிரிழந்தார்.
இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதி இறந்துள்ளதால் நீதித்துறை நடுவர் விசாரணை நடத்தி வருகிறார்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் இப்ராகிம் (60). இவரை போதைப் பொருள் கடத்தல் வழக்கில் போலீசார் கைது செய்து புழல் ஜெயிலில் தண்டனை கைதியாக அடைத்தனர்.
இந்த நிலையில் இப்ராகிமுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவருக்கு கடந்த 2 மாதமாக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று காலை சிகிச்சை பலனின்றி இப்ராகிம் பரிதாபமாக இறந்தார்.






