சேலத்தில் சிறை கைதி திடீர் மரணம்

சீனிவாசனுக்கு கடந்த 15-ந்தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட அவரை சேலம் அரசு மருத்துவனையில் சேர்த்தனர்.
சேலத்தில் சிறை கைதி திடீர் மரணம்
Published on

சேலம்:

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள தொட்டியம் புதூரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 36). ஜோதிடரான இவர், நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக நடந்த கொலை வழக்கில், கடந்த அக்டோபர் மாதம் 7-ந் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சீனிவாசனுக்கு கடந்த 15-ந்தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட அவரை சேலம் அரசு மருத்துவனையில் சேர்த்தனர். அங்கேயே தொடர்ந்து சிகிச்சை பெற்ற வந்த நிலையில், நேற்று திடீரென சிகிச்சை பலனின்றி சீனிவாசன் உயிரிழந்தார்.

இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதி இறந்துள்ளதால் நீதித்துறை நடுவர் விசாரணை நடத்தி வருகிறார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com