என் மலர்
நீங்கள் தேடியது "விளையாட்டுப் போட்டிக்கு தேர்வு"
- பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வேலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளை வென்று ஜனவரி மாதம் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு பெற்றுள்ளனர்.
இப்பள்ளி மாணவி ஜி.ரம்யா மும்முறை தாண்டுதல் பிரிவில் முதலிடமும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடமும், மாணவிகள் டி.கலைவாணி, ஜி.ரம்யா, எஸ்.ஷமாபர்வீன், வள்ளி ஆகியோர் கொண்ட அணி 400 மீட்டர் தொடர் ஓட்ட போட்டியில் முதலிடம் பெற்றனர், 14 வயதுக்குட்பட்ட மாணவிகள் கலந்து கொண்ட கையுந்து பந்து போட்டியில் முதலிடமும், 17 வயதிற்கு உட்பட்டோ ருக்கான போட்டிகளில் கபடி பிரிவில் முதல் இடமும், 19 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் கையுந்து பந்து பிரிவில் இரண்டாம் இடமும் பெற்று சாதனை படைத்தனர்.
விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்து மாநில போட்டிக்கு தேர்வு பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.எஸ்.அமர்நாத் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயசீலிகிறிஸ்டி அனை வரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினார். விழாவில் திமுக பிரமுகர்கள் ஜம்புலிங்கம், தண்டபாணி கோபாலகிருஷ்ணன், பாபு, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் இருபால் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில் உடற்கல்வி ஆசிரியை கமலி நன்றி கூறினார்.






