search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 ஆயிரம் ஆண்டு பழமையான கைலாயநாதர் கோவிலில் அன்னாபிஷேக விழா
    X

    2 ஆயிரம் ஆண்டு பழமையான கைலாயநாதர் கோவிலில் அன்னாபிஷேக விழா

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
    • அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கைலாயநாதர் கோவிலில் அன்னாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. மேலும் அம்மனுக்கு 18 வகையான காய்கறிகள் சுமார் 100 கிலோ கொண்டு காதம்பரி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    பொதுவாக இந்துக்கள் உணவை வீணாக்காமல் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே இந்த அன்னாபிஷேக விழா கொண்டாட ப்படுகிறது.

    கைலாசநாதருக்கு முதலில் பசும்பால், இளநீர், சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள் மற்றும் அன்னம் போன்ற பல பொருட்களால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தபின்னர் சுவாமியின் மீது அன்னத்தால் பொருத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்ட ஒன்றரை மணி நேரம் அப்படியே வைக்கப்பட்டு பின்னர் அன்னத்தை கலைத்து குழந்தை பேறு இல்லாதோர்க்கு அந்த அன்ன பிரசாதமாக வழங்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அன்ன அபிஷேகத்தின் போது செய்யப்பட்டிருந்த அலங்கார புஷ்பங்கள் அருகில் உள்ள உத்திர காவிரி ஆற்றில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அங்கிருந்து நீரைக் கொண்டு வந்த சுவாமிக்கு மீண்டும் அபிஷேகம் செய்யப்பட்டடு தொடர்ந்து சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீப ஆராதனைகள் காட்டப்பட்டது.

    இந்த அன்னாபிஷேக விழாவில் பாக்கம் கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கைலாயநாதரை வழிபட்டு சென்றனர்.

    Next Story
    ×