என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்துவாச்சாரியில் பாதாள சாக்கடை பணியால் போக்குவரத்து நெரிசல்
    X

    பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடந்து வரும் காட்சி. தடுப்பு வைத்து கலெக்டர் ஆபீஸ் ரவுன்டானா சாலை அடைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட காட்சி.

    சத்துவாச்சாரியில் பாதாள சாக்கடை பணியால் போக்குவரத்து நெரிசல்

    • சாலையில் முள் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது
    • பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    வேலூர்,

    வேலூர் ஆற்காடு சாலையில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளங்கள் தோண்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் சாலையில் முள் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

    இதனால் சத்துவாச்சாரி சர்க்கிள் சாலை பகுதியில் வரும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அவ்வழியாக வரும் வாகனங்களை போக்குவரத்து போலீசார் வேறு வழி பாதையில் அனுப்புகின்றனர்.

    இதனால் இன்று காலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ெபாதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×