என் மலர்tooltip icon

    வேலூர்

    • காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடக்கிறது
    • பள்ளி மாணவிகள் முன் பதிவு செய்து பங்கேற்கலாம்

    வேலூர்:

    குழந்தைகள் தினமான நவம்பர் 14-ந் தேதியை முன்னிட்டு வேலூர் அரசு அருங்காட்சியகம் சார்பில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்காக, நாளை சனிக்கிழமை காலை 10 மணி முதல் 12.30 மணி வரை ஓவியப்போட்டி வேலூர் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில், நடத்தப்பட உள்ளது.

    ஒவியப்போட்டியின் தலைப்பு வேலூர் மாவட்ட நினைவுச்சின்னங்கள்.

    பள்ளி மாணவர்களின், கலைத்திறனை ஊக்கப்படுத்தும் வகையில் ஒவியப்போட்டியானது 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்காக நடத்தப்படவுள்ளது

    ஓவியத்தில் ஆர்வமுள்ள 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள். இன்று மாலைக்குள் தங்களது பெயரை வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. பெயரை பதிவு செய்த மாணவர்கள் மட்டுமே ஒவியப்போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

    பள்ளி ஒன்றுக்கு 3 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கபடுவார்கள். ஒவியப்போட்டிக்கான ஓவிய தாள் மட்டுமே அருங்காட்சியகத்தில் வழங்கப்படும் ஏனைய பொருட்களை மாணவர்களே கொண்டு வரவேண்டும் என தெரிவித்தனர்.

    • தென்பெண்ணை ஆறு நீர் பகிர்வு குறித்து 4 வாரங்களில் ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    • தமிழகத்தில் தவறுகள் நடந்தால் நாங்கள் கேட்க அதிகாரம் உள்ளது என தமிழக கவர்னர் ரவி கூறி உள்ளார்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், காட்பாடி காந்தி நகரில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடந்தது. இதில் நீர் வளம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தென்பெண்ணை ஆறு நீர் பகிர்வு குறித்து 4 வாரங்களில் ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழக நீர்வளத்துறை செயலாளர் டெல்லி சென்றுள்ளார். அவர் வந்த பின்னர் அதை பற்றி கருத்து தெரிவிக்கிறேன்.

    தமிழகத்தில் தவறுகள் நடந்தால் நாங்கள் கேட்க அதிகாரம் உள்ளது என தமிழக கவர்னர் ரவி கூறி உள்ளார். பாவம் கவர்னர் அவர் எதையாவது சொல்லுவார்.

    தமிழகத்தில் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அது உப்பு சப்பில்லாதது. அவர் ஆதாரப்பூர்வமாக தெரிவித்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்க தயார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி
    • துர்நாற்றம் வீசுவதால் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாள் தோறும் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் சென்னை-பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதிகளில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    பள்ளிகொண்டா பேரூ ராட்சியில் வெட்டுவாணம் சின்ன கோவிந்தம்பாடி கீழாச்சூர் ராமாபுரம் வேப்பங்கால் என 5க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இங்கு சுமார் 25000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    மேலும் பொது மக்களிடத்தில் வீடு மற்றும் கடை பகுதிகளில் இருந்து நாள்தோறும் சேகரிக்கப்ப டும் குப்பை கழிவுகளை மக்கும், மக்கா குப்பைகளாக தரம் பிரித்து வாங்க வேண்டும் அவ்வாறு வாங்கப்படும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் கழிவுகளை எந்திரங்கள் கொண்டு வெட்டப்பட்டு பிளாஸ்டிக் தயாரிக்கும் கம்பெனிக ளுக்கு விற்பணைக்கும் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

    பேரூராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்படாமல் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலையை யொட்டிய பள்ளிகொண்டா பெரிய ஏரி உபரி நீர் வெளியேறும் கால்வாய் பகுதிகளில் தினமும் டன் கணக்கில் அப்படியே கொட்டப்ப டுகிறது.

    இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. குப்பை கழிவுகளால் அருகில் உள்ள விவசாய நிலங்கள் மலட்டுத்தன்மை அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் உபரிநீர் வெளியேறும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகும் அபாயம் நிலவி வருகிறது.

    அது மட்டும் இன்றி குப்பை கிடங்கிற்கு அருகில் பெரியாண்டவர் கோவில் இருப்பதால் பக்தர்கள் முகம் சுழித்தபடி மூக்கை பிடித்துக்கொண்டு கோயிலுக்கு செல்லும் சூழல் நிலவுகிறது.

    பக்தர்கள் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டும். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என அப்பகுதிமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    • பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி அலுவலக வளாகத்தில் சுமார் 45 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடம் உள்ளது.

    முன்பு இந்த கட்டிடத்தில் நகர மன்ற கூட்டங்கள் நடைபெற்று வந்தன. சில ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி வளாகத்தில் புதியதாக பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டிடங்கள் கட்டப்பட்டதால் இந்த பழைய கட்டிடத்தில் கூட்டங்கள் நடைபெறுவது இல்லை.

    இந்த பழைய கட்டிடத்தில் குடியாத்தம் நகராட்சி சுகாதார பணிகளுக்கு தேவையான கருவிகள், ப்ளீச்சிங் பவுடர், பினாயில், கிரிமிநாசினி மற்றும் கொரோனா காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் இருந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் அந்த பழைய கட்டிடத்தில் இருந்து தீ ஜுவாலைகள் தெரிந்துள்ளது. அந்த வழியாக சென்ற ஆட்டோ டிரைவர் கள் தீ விபத்து குறித்து நகராட்சி அலுவலகத்திற்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு பணியில் ஈடுபட்டனர்.

    தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் அமலுவிஜயன் எம். எல். ஏ., நகர மன்ற தலைவர் சவுந்தரராசன், ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, பொறியாளர் பி.சிசில் தாமஸ் சுகாதார அலுவலர் மொய்தீன், துப்புரவு பணி மேற்பார்வையாளர் பிரபுதாஸ் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை பார்வை யிட்டனர்.

    தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி,கே.வி. குப்பம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட போலீசார் தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தீ விபத்து ஏற்பட்ட நகராட்சி பழைய கட்டிடத்தின் அருகிலேயே சில மீட்டர் தொலைவில் பெட்ரோல் பங்குகளும், பின்பகுதியில் அரசு மருத்துவமனையும் இருப்பதால் தீ மேலும் பரவாமல் இருக்கவும் பாதுகாப்பு பணி தீவிர படுத்தப்பட்டது. தீயணைப்பு வாகனங்கள் மூலம் சுமார் 2 மணி நேரம் போராடி முற்றிலும் தீயணைக்கப்பட்டது.

    இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

    இந்த தீ விபத்துக்கான காரணம் குடியாத்தம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் தீவிர விசாரணை
    • இரவில் பெண் ஒருவர் ஆற்றில் குதித்ததாக பொதுமக்கள் தகவல்

    வேலூர்:

    வேலூர் பாலாற்றில் தற்போது ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனை ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் காட்பாடியில் இருந்து வேலூர் புதிய பஸ் நிலையம் வரக்கூடிய பழைய பாலாற்றின் பாலத்தின் மேலிருந்து நேற்று இரவு பெண் ஒருவர் ஆற்றில் குதித்ததாக விருதம்ட்டு போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் உடனடியாக விரைந்து சென்று பாலத்தின் மேலிருந்து பார்வையிட்டனர். மேலும் ஆற்றின் தண்ணீரில் பார்த்தனர். ஆனால் அங்கு யாரும் இல்லை. இருள் சூழ்ந்து காணப்பட்டது. அங்கு எதுவும் தெரியவில்லை.

    ஆற்றில் குதித்த பெண் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டாரா? அவரது கதி என்ன அல்லது வேண்டுமென்று யாராவது போலீசாரை அலைக்கழித்தார்களா என்பது தெரியவில்லை.

    இன்று காலையில் மீண்டும் போலீசார் பாலாற்று பகுதியில் பார்வையிட்டனர். மேலும் விருதம்பட்டு பகுதியிலிருந்து பெண் யாராவது காணாமல் போனார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதுவரை எந்த ஒரு பெண்ணும் காணாமல் போனதாக தகவல் வரவில்லை. ஆற்றில் பெண் உண்மையிலேயே குதித்தாரா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என போலீசார் தெரிவித்தனர்.

    • 1,330 திருக்குறள்களை 66 நிமிடங்களில் ஒப்புவித்தனர்
    • மாணவர்களுக்கு சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த பாக்கம் கிராமத்தில் உள்ள ஆசிர்வாத் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 133 பேர் தலா 10 திருக்குறள்கள் என 133 அதிகாரங்களைக் கொண்ட 1,330 திருக்குறள்களை 66 நிமிடங்களில் ஒப்புவித்தனர்.

    இது உலக சாதனையாகும். இந்த திருக்குறள் ஒப்புவித்தல் சாத னையை லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் பதிவு செய்தது. இந்த நிலையில் லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம்சார்பில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் சாதனை படைத்த 133 மாணவர்களுக்கு சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் எஸ்.மஞ்சுநாத் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் பிரமிளா கண்ணன் வரவேற் றார். சிறப்பு விருந்தினராக டி.வி. புகழ் ஈரோடு மகேஷ், திரைப்பட இசையமைப்பாளர் சி.அரவிந்த்பாபு ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கும், மாணவர்களின் சாத னைக்கு உதவியாக இருந்த ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்தனர். சாதனை நிகழ்ச் சிக்கான ஏற்பாடுகளை லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் ஜோசப் இளந்தென்றல், தலைமை நிர்வாக அலுவலர் எஸ்.கார்த்திக் குமார் ஆகியோர் செய்து இருந்தனர். நிகழ்ச்சியில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் பள்ளியின் கணக்கு அலுவலர் கே.செல்வகுமார் நன்றி கூறினார்.

    • எதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்லும் வாகனங்கள்
    • வாகன ஓட்டிகள் கடும் சிரமம்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்த வண்ணம் இருந்தது கடந்த இரு தினங்களாக மழை இல்லாமல் லேசான பனிபொழிவு காணப்படுகிறது.

    வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கும்போது சுமார் 10 மீட்டர் தொலைவில் உள்ள வாகனங்கள் கூட சரிவர தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி இயக்கி செல்கின்றனர்.

    இதனால் நெடுஞ்சாலையில் அதிக அளவில் பனிமூட்டமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    • பீடி தொழிலாளர் சம்மேளனம் கோரிக்கை
    • கலெக்டருக்கு மனு

    திருப்பத்தூர்:

    மாநில காங்கிரஸ் பீடி தொழி லாளர்கள் நல சம்மேளனத் தின் மாநில பொதுச்செயலா ளர் ஆர்.முனிராஜ் தமிழக முதல் - அமச்சர். மற்றும் மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பி உள்ளார்.

    அதில் வேலூர், திருப்பத்தூர் ஒருங் கிணைந்த மாவட்டத்தில் 10 லட்சம் பீடி தொழிலாளர்கள் உள்ளார்கள். அவர்களுக்கு நீண்டநாளுக்கு பிறகு 10.5.2022 அன்று நடந்த முத்தரப்பு பேச்சு வார்த்தையில் தொழிலாளர் நலத்துறை செயலாளர் ஆர்.கிரிலோஷ் குமார், முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த், தொழிலாளர் நலத் துறை இணை ஆணையர் உ.லட்சுமிகாந்தன் முன்னி லையிலும், கூடுதல் தொழிலாளர் ஆணையர் ராமசந்திரன், தொழிலாளர் துறை ஆணை யாளர்அப்துல் காதர், உதவி ஆணையாளர் இந்துமதி, வேலூர், திருநெல்வேலி மாவட்ட பீடி உற்பத்தியாளர் சங்கம், ஐ.என்.டி.யு.சி. பீடி தொழிலாளர் நல சங்கம் சார்பில் தமிழ்நாடு பீடி தொழிலாளர்கள் சம்மேளத்தின் மாநில தலைவர் சி.சுப்பிரமணி, மாநில பொதுச் செயலாளர் முனீராஜி ஆகியோரும் கலந்து கொண்டு கையொப் இடப்பட்டது.

    பம் இன்றைய தேதி வரையில் இந்த ஒப்பந்த அரசாணை வெளிவரவில்லை. ஆகையால் முன் தேதியிட்டு உடனடியாக தொழிலாளர்கள் நலன் கருதி அரசாணையை வெளியிட வேண்டும் என்று கூறி உள்ளார்.

    • மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்
    • கிராமம் கிராமமாக கலை நிகழ்ச்சி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் எச்ஐவி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில கட்டுபாட்டு சங்கம் இணைந்து மாநில அளவில் எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் குறித்த தகவல்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன்படி 20 மாவட்டங்களில் தொடர்ந்து 10 நாட்கள் கிராமம் கிராமமாக வீதி நாடகம், கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் பொம்மலாட்டம் ஆகியவற்றின் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் உறவுகள் மற்றும் சாரல் கலை குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பட்டியலிடப்பட்ட கிராமங்களில் எய்ட்ஸ் நோய் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ரூ.5 ஆயிரம் வசூலிக்கப்பட்டது
    • மாடுகளை வீட்டுக்குள் கட்டி வைக்கும்படி மைக் மூலம் அறிவிப்பு

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி பகுதியில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மாடுகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை அண்ணா சாலை உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் மாடுகள் சுற்றி திரிகின்றன.

    காட்பாடி சத்துவாச்சாரி ரோட்டில் சாலையை ஆக்கிரமித்து ஏராளமான மாடுகள் படுத்து கிடக்கின்றன.

    மாடுகளை கட்டவிழ்த்து விடும் உரிமையாளர்களுக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்தும் மாடுகள் சுற்றி திரிவதை அவர்கள் நிறுத்தவில்லை.

    காட்பாடியில் 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் மெயின் ரோடுகளில் சுற்றி திரியும் 5 மாடுகள் பிடிக்கப்பட்டன.

    பிடிக்கப்பட்ட மாடுகள், உரிமையாளர்கள் வந்தால் ஒரு மாட்டுக்கு ரூ.5ஆயிரம் அபராதம் கட்டிய பிறகு மாடுகள் விடுவிக்கப்படும், இல்லை என்றால் மாடுகள் ஜெயின் கோசலாவில் விடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    வேலூர் மாநகராட்சி பகுதியில் தினசரி மாடுகள் பிடிக்கப்பட உள்ளது உரிமையாளர்கள் தங்கள் மாடுகளை வெளியே விடாமல் வீட்டுக்குள் கட்டி வைக்கும்படி மைக் மூலம் தெரிவிக்கப்பட்டது.

    • உயிர் காக்கும் வழிமுறைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்ட தற்காலிக காவலர் பயிற்சி மையத்தில் சிஎம்சி இந்திய மருத்துவ சங்கமும், காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கமும், டாக்டர் இக்ரம் சமூகநல அறக்கட்டளையும் இணைந்து பருவமழை விபத்துக்கள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தியது.

    முகாமிற்கு ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர் மனோகரன் தலைமை தாங்கினார். தீயணைப்பு மார்ஷல் டாக்டர் அ.மு.இக்ரம் வரவேற்று பேசினார்.

    காட்பாடி ரெட்கிராஸ் சங்க அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், ஊர்க்காவல்படை சுரேஷ் இந்திய மருத்துவ சங்க செயலாளர் டாக்டர் மகேஷ், துணைத்தலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.சீனிவாசன் டராபிக் வார்டன் குழும திட்ட அதிகாரி பி.என்.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

    வேலூர் கிறித்துவ மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவின் மருத்துவ குழு தலைவர் டாக்டர் சுக்ரியாநாயக், டாக்டர் பிரகாஷ் ஆகியோர் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

    இந்த விழிப்புணர்வு முகாமில் பருவ மழையில் ஏற்படும் பாதிப்புகள், தடுப்பு முறைகள், இதய நிறுத்தம், நீங்கள் எப்படி உதவலாம், அடிப்படை உயிர் காக்கும் வழிமுறைகள், உணர்வு உள்ளதா என்று சோதனை செய்யும் முறை, சுவாசக்குழாய் சோதனை செய்யும் முறை, மார்பு அழுத்தங்கள், வாய் வழி சுவாசம், மீட்பு நிலை ஆகிய தலைப்புகளில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

    • வி.ஐ.டி. விழாவில் இந்தியன் வங்கி நிர்வாக இயக்குநர் பேச்சு
    • புதிய கண்டுபிடிப்புகளை கண்டு பிடிக்க வேண்டும் என அறிவுரை

    வேலுார்:

    விஐடியில் 2022-23-ம் ஆண்டுக்கான மாணவர் பேரவை தொடக்க விழா பல்கலைக்கழக வளாகத் தில் நேற்று நடந்தது. விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்தார். இந்தியன் வங்கி நிர்வாக இயக் குனர் சாந்திலால் ஜெயின் சிறப்பு விருந்தினராக பங் கேற்றார்.

    சிறப்பு விருந்தினரை மாணவர் நல உதவி இயக் குனர் சுஜாதா.அறிமுகப்ப டுத்தினார். விழாவில் சாந் திலால் ஜெயின் பேசியதாவது:- விஐடி பல்கலைக்க ழகமும், இந்தியன் வங்கியும் இணைந்து சிறப்பாக செயல்படுகிறது. விஐடியில் உலக தரத்திலான கல்வி வழங்கப்படுகிறது. மாணவர் பேரவை மூலம் மாணவர்களுக்கு தலைமை பண்பு வளரும். நீங்கள் என்ன ஆக வேண்டும் ? என முதலில் தீர்மானிக்க வேண்டும்.

    அதைத் தொடர்ந்து உங்களது லட்சியத்திற்காக நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். நான் படிக்கும்போது வங்கி மேலாளராக வர வேண்டும் என நினைத்து அறிவியல் பாடத்தி லிருந்து காமர்ஸ் பாடத்துக்கு மாறினேன். தொடர்ந்து கடினமாக உழைத்தேன். வங்கி மேலாளர் ஆனேன்.

    பல்வேறு பொறுப்பு களில் இருந்து இப்போது உங்கள் முன்னால் இந்தி யன் வங்கியின் நிர்வாக இயக்குனராக உள்ளேன். இதற்குக் காரணம் கடின உழைப்புதான். கொரோனா காலத்தில் மக்கள் அனை வரும் அவதிப்பட்டனர். இருந்தாலும் நாங்கள் அந்த காலகட்டத்தில் மக்களுக்கு உதவி செய்தோம்.

    இந்தியன் வங்கி சார் பில் மாணவர்களுக்கு கல்வி கடன், வீட்டுக் கடன் என பல்வேறு கடன்கள் வழங்கப்படுகிறது மொபைல் பேங்கிங் அதிகரித்து வருகிறது. வருங்காலத்தில் உங்களுக்கு நிறைய சவால்கள் உள்ளன. நீங்கள் புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும். வருங்காலம் உங்கள்கையில் உள்ளது. நீங்கள் தலைசிறந்த தலைவர்களாக திகழ வாழ்த்துகிறேன்' என்றார்.

    நிகழ்ச்சியில் வேந்தர் விசுவநாதன் பேசியதாவது:-மாணவர் பேரவை சிறப்பாக செயல்படுகிறது. மாணவர் பேரவை மாணவர்களுக் கும், பேராசிரியர்களுக்கும் பாலமாக திகழ்கிறது. விஐடி பல்கலைக் கழகத் தில் மாணவர்களை சேர்க் கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண் டுமென எதிர்பார்க்கின்றனர்.

    கடந்த ஆண்டு 951 கம்பெனிகள் வந்தன. இந்த ஆண்டு இதுவரை 504 கம்பெனிகள் வந்துள்ளன. கடந்த ஆண்டு ஒரு மாண வருக்கு அதிகபட்ச சம்ப ளமாக ஒரு ஆண்டுக்கு ரூ. 75 லட்சத்தில் வேலை வாய்ப்பு கிடைத்தது. இந்த ஆண்டு இரண்டு மாண வர்களுக்கு ஒரு ஆண்டுக்கு ஒரு கோடியே 2 லட்சம் என அதிகபட்ச சம்பளம் கிடைத்துள்ளது. இந்த அளவு சம்பளம் பேராசிரி யர்களுக்கு கூட கிடைக் காது. ஒருவேளை தொழில திபர்களுக்கு வேண்டுமா னால் கிடைக்கலாம்.

    படிக்கும்போது மாண வர்களுக்கு ஒழுக்கம் தேவை. கல்லூரிக்கு விடு வ. முறை எடுக்காமல் வர வேண்டும். நான் கல்லுா ரியில் படிக்கும்போது ஒரு நாள் கூட விடுமுறை எடுத்தது இல்லை. நீங்கள் நன்றாக படித்தால் வாழ்க் கையில் வெற்றி பெறலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சிக்கு விஐடி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் நலன் உதவி இயக்குனர் ஆர்த்தி வரவேற்றார்.

    மாணவர் நல இயக்குனர் நைஜூ உறுதிமொழி வாசிக்க மாணவர் பேரவை நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாணவர் நல உதவி இயக்குனர் 5 ஷர்மிளா நன்றி கூறினார்.

    ×