என் மலர்tooltip icon

    வேலூர்

    • பிரபா என்கிற சந்தியா மனம் திருந்தி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சரணடைந்தார். அவர் வேலூரில் உள்ள இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
    • சந்தியா தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்து இருந்தார்.

    வேலூர்:

    கர்நாடக மாநிலம், சிமோகா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபா என்கிற சந்தியா (வயது 45). இவர், கர்நாடக மாநிலம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில், மாவோயிஸ்டு அமைப்புக்காகப் பல ஆண்டுகளாகத் தீவிரமாக பணியாற்றியிருக்கிறார்.

    2006-ம் ஆண்டிலிருந்து தலைமறைவாக இருந்துவந்த பிரபா மீது கர்நாடகாவில் மட்டும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

    பிரபா என்கிற சந்தியா மனம் திருந்தி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சரணடைந்தார். அவர் வேலூரில் உள்ள இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

    சந்தியா தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்து இருந்தார்.

    இதனை தொடர்ந்து தமிழக அரசின் சரணடைதல் மற்றும் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் அவருக்கு ஆவின் நிர்வாகம் மூலம் வேலூர் மாவட்டம், அரியூர், முருக்கேரி ஸ்ரீ சாய் வசந்தம் கிரக இல்லத்திற்கு எதிரே மாநில நெடுஞ்சாலையில் ஆவின் பாலகம் அமைத்து தரப்பட்டுள்ளது.

    ஆவின் பாலகத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று தொடங்கி வைத்தார்.

    அப்போது சமூகத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டவர்கள் மனம் திருந்தி வரவேண்டும். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், மற்றும் சமூகத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர்கள் மனம் திருந்தி வரும் போது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய அரசு தயாராக உள்ளது என்றார்.

    நிகழ்ச்சியில் கியூ பிரான்ச் போலீஸ் சூப்பிரண்டு கண்ணம்மாள், போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜேஷ் கண்ணன், தீபா சத்யன், பாலகிருஷ்ணன் வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கட்டுமான பணிகளை அதிகாரிகள் ஆய்வு
    • மார்ச் மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை

    வேலூர்:

    அரியூரில் ரூ.2.50 கோடியில் அறிவுசார் மையம் அமைக்கப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    வேலூரை அடுத்த அரியூரில் ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பில் அறிவுசார் மையம் கட்டப்பட்டு வருகிறது. இதனை மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் நேற்று திடீர் ஆய்வு செய்தார். நடைபெற்று வரும் பணிகள் குறித்து அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். கட்டிட பணிகள் தரமாக இருக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார். ஆய்வின்போது மாநகராட்சி நகர்நல அலுவலர் முருகன் (பொறுப்பு), இளநிலை உதவி பொறியாளர் செல்வராஜ், கவுன்சிலர் கணேஷ்சங்கர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அறிவு பெறும் இடமாக அமைய இந்த அறிவுசார் மையம் கட்டப்படுகிறது. நூலகம் போன்று செயல்படும். இங்கு புத்தகங்கள் படிக்க வைக்கப்படும். மேலும் ஆன்லைன் மூலம் புத்தகங்கள் படிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இதுதவிர தொழில்நுட்பங்களும் இடம்பெறும். போட்டித்தேர்வுகளுக்கு தயார்படுத்துபவர்களும் உதவியாக அமைய உள்ளது.

    அரியூரில் அமைக்கப்படுவதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள். கட்டிட பணிகள் வருகிற ஜனவரி மாதத்துக்குள் முடிக்கவும், இதர தொழில்நுட்ப பணிகள் முடிக்கப்பட்டு மார்ச் மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 10, 113 பேர் எழுதினர்
    • 5 நடமாடும் குழுக்கள் பணியில் ஈடுபட்டனர்

    வேலூர்:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையம் சார்பில் குரூப் 1 முதல் நிலை தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடந்தது.

    துணை ஆட்சியர், துணை போலீஸ் சூப்பிரண்டு, துணைப்பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கு இந்த தேர்வு நடந்தது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 14 மையங்க ளில் 3,883 பேர் தேர்வு எழுதினர்.

    இதேபோல் வேலூர் மாவட்டத்தில் 6,230 பேர் தேர்வு எழுதினர் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேலூர் வெங்கடேஸ்வரா பள்ளி, சத்துவாச்சாரி ேஹாலி கிராஸ் பள்ளி, ஊரீஸ் பள்ளி உள்பட மாவட்டத்தில் உள்ள 23 மையங்களில் நடந்தது.

    தேர்வு மையங்களில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    அனைத்து தேர்வு மையங்களிலும் குடிநீர் மின்சாரம் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் துணை ஆட்சியர் அளவிலான 2 பறக்கும் படை அலுவலர்கள் துணை வட்டாட்சியர்கள் முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் போலீசார் அலுவலக உதவியாளர் ஆகியோர் சேர்ந்து 5 நடமாடும் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அனைத்து நிகழ்வு களையும் வீடியோவாக பதிவு செய்தனர். தேர்வு எழுத காலை 9 மணிக்குள் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    தேர்வு எழுத வந்தவர்கள் கொண்டு வந்த செல்போன், டிஜிட்டல் வாட்ச், ஸ்மார்ட் வாட்ச், கால்குலேட்டர் போன்றவற்றை தேர்வு மையத்திற்குள் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட வில்லை.

    • எடுப்பதில் போட்டி
    • கடைகள் விரைவில் ஏலம் விட நடவடிக்கைகள்

    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் 4 கழிவறைகள் ரூ.68 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.

    வேலூர் புதிய பஸ் நிலையம் சுமார் ரூ.52 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து சென்னை, பெங்களூரு, சித்தூர் மற்றும் பிற மாவட்டங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பஸ் நிலையம் திறக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் அங்கு கடைகள் திறக்கப்படாமலே உள்ளது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். கட்டப்பட்டுள்ள சுமார் 80 கடைகளை வாடகை எடுப்பதில் அரசியல் கட்சியினர் போட்டி போட்டு வருவதாக கூறப்படுகிறது.

    பஸ் நிலையத்தில் உள்ள கழிவறையும் முறையாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் பொதுமக்கள் முன்வைத்தனர். சில கழிவறைகள் திறக்கப்படாமல் இருந்ததால் பலர் ஆங்காங்கே சிறுநீர் கழித்து வந்தனர்.

    இந்தநிலையில் பஸ் நிலையத்தில் உள்ள தரைதளத்தில் 4 இடங்களில் குளியல்அறைகளுடன் கூடிய கழிவறைகளும், முதல் தளத்தில் 2 இடங்களில் கழிவறைகளும் நேற்று ஏலம் விடப்பட்டன.

    ரூ.68 லட்சத்துக்கு...

    அதில் தரைதளத்தில் உள்ள 4 இடங்களில் உள்ள கழிவறைகள் மட்டும் ரூ.68 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் உள்ள கழிவறை மட்டும் ரூ.33 லட்சத்துக்கு ஏலம் போனதாக தெரிகிறது.

    இதன்மூலம் ஆண்டுக்கு மாநகராட்சிக்கு ரூ.68 லட்சம் வருமானம் கிடைக்கும் என மாநகராட்சி அதிகாரிகள் கூறினர். மேலும், அவர்கள் கூறுகையில், புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளும், முதல் தளத்தில் உள்ள கழிவறைகளும் விரைவில் ஏலம் விட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • தரைப்பாலம் அமையும் இடத்தையும் ஆய்வு

    வேலூர்:

    சர்வதேச கழிவறை தினத்தையொட்டி வேலூர் அடுத்த அடுக்கம்பாறையில் விழிப்புணர்வு நடைபயணத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று தொடங்கி வைத்தார்.

    ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து போலீஸ் பயிற்சி கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கொண்டு மூஞ்சூர் பட்டு வரை நடைபயணம் சென்றனர். நிகழ்ச்சியில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ மாவட்ட திட்ட இயக்குனர் ஆர்த்தி கணியம்பாடி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திவ்யா, துணை தலைவர் கஜேந்திரன், தாசில்தார் செந்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் தயாளன் ,ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசு துணைத் தலைவர் டான் பாஸ்கோ, கவுன்சிலர் வேலாயுதம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து மேட்டு இடையம் பட்டியில் சாலை இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு சாலை அமைக்க விடாமல் எதிர்ப்பு தெரிவித்த இடங்களை மாவட்ட திட்ட அலுவலர் ஆர்த்தி பார்வையிட்டார்.

    இதேபோல் ஓட்டேரி ஏரிக்கு நீர்வரத்து வரும் கால்வாய் மீது தரைப்பாலம் அமைக்க உள்ள இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • இறந்த காகங்னளை எடுத்துகொண்டு மர்ம நபர்கள் தப்பியோட்டம்
    • போலீசார் விசாரணை

    பேரணாம்பட்டு:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பாலூர் கிராமம் பஸ் நிறுத்தம் அருகே சமுதாய கூடம் உள்ளது. இதன் எதிரே ஆலமரம் ஒன்று உள்ளது.

    மேலும் பக்கத்தில் உள்ள பாலூர் அரசு உயர் நிலைப்பள்ளியிலும் மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் 100-க்கும் மேற்பட்ட காகங்கள் வசிக்கின்றன.

    இந்த நிலையில் நேற்று மாலை திடீரென நிறைய காகங்கள் தரையில் விழுந்து இறந்து கிடந்தன. இதைப் பார்த்த பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என்ன நடக்கிறது என்றே புரியாமல் திகைத்தனர்.

    அப்போது அடையாளம் தெரியாத 40 வயதுள்ள ஒரு பெண்ணும், ஆணும் பைக்கில் வந்து தாங்கள் வைத்திருந்த கோணிப்பைகளில் இறந்த காகங்களை அவசர, அவசரமாக எடுத்து போட்டனர்.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கூச்சலிட்டு அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் பைக்கில் ஏறி இறந்த காகங்களுடன் தப்பிச்சென்றனர். இதையடுத்து அந்த பகுதியில் பார்த்தபோது காகங்களை வேட்டையாட வேர்க்கடலையில் விஷம் கலந்து வீசப்பட்டிருந்தது தெரியவந்தது.

    பொதுவாக காகங்களை யாரும் வேட்டையாட மாட்டார்கள். அப்படி இருந்தும் எதற்காக இவ்வளவு காகங்கள் வேட்டையாடப்பட்டது எதற்காக என்பது தெரியவில்லை.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • போக்சோ சட்டத்தில் நடவடிக்கை
    • திருமண ஆசைகாட்டி துணிகரம்

    குடியாத்தம்:

    குடியாத்தம் செருவங்கி புதுதெரு பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன் இவரது மகன் பிரதீப் (வயது 22) வெல்டிங் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் 16 வயதான மாணவியை காதலித்து வந்தார். மாணவியிடம் திருமண ஆசைகாட்டி பிரதீப் நெருக்கமாக இருந்துள்ளார்.

    இந்நிலையில் அந்த மாணவிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது இதனையடுத்து மாணவியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

    அங்கு பரிசோதனை செய்ததில் மாணவி 3 மாத கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தீவிரமாக விசாரித்தபோது வாலிபர் பிரதீப் ஆசை வார்த்தைகள் கூறி நெருக்கமாக இருந்ததாக கூறி உள்ளார்.

    இதனை தொடர்ந்து அவர்கள் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அத ன்பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் நிர்மலா ஆகி யோர் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரதீப்பை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பக்தர்கள் தரிசனம் செய்தனர்
    • ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

    வேலூர்:

    ஸ்ரீராம ராஜ்ய ரத யாத்திரை நேற்று வேலூருக்கு வந்தது. ஸ்ரீபுரத்தில் இருந்து புறப்பட்ட ரதம் திருமலை- திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் அருகே வந்தது.

    பின்னர் அங்கிருந்து காட்பாடி காந்தி நகர், சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகே வந்தடைந்தது.

    அங்கிருந்து தோட்டப்பாளையம் சென்று அதைத்தொடர்ந்து மீண்டும் ஸ்ரீபுரத்துக்கு திரும்பியது.

    நகருக்குள் வந்த ரதத்தை பலர் ஆர்வமாக பார்த்தனர். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    சில பக்தர்கள் பூக்களை தூவி வரவேற்றனர். ஏராளமானவர்கள் ரதத்தின் முன்பு செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

    போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • விழிப்புணர்வுடன் செல்ல அறிவுறுத்தல்
    • கடும் குளிரால் வேலூரில் வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்

    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொட்டும் பனிப்பொழிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. கடந்த வாரத்தில் காற்றுடன் மழை பெய்தது. இதனால் பனிப்பொழிவு ஓரளவு குறைவாக இருந்தது.தற்போது குளிரின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கடந்த 2 நாட்களாகவே வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடுமையான பனி மூட்டம் காணப்படுகிறது.

    சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காலை நேரத்தில் எதிரே இருப்பது கூட தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு கொட்டுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விடிந்தும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கிறார்கள்.

    மாலை 5 மணிக்கு மேலும் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. காலை, மாலை பனியின் தாக்கம் கடுமையாக இருப்பதால் பொதுமக்கள் வீடுகளுக்குள முடங்கியுள்ளனர். வெயில் வந்த பிறகே, வீடுகளில் இருந்து வெளியில் வருகிறார்கள். கடும் பனிப்பொழிவு மக்களை வாட்டி வதைத்து உறைய வைக்கிறது.

    பனியின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வேலூர் மக்கள் வீதியிலும், வீட்டு முன்பும் குப்பைகள் மற்றும் பழைய பொருட்களை கொளுத்திவிட்டு குளிர் காய்கிறார்கள். கொட்டும் பனிக்கும், உறைய வைக்கும் குளிருக்கும் ஸ்வெட்டர், சால்வை விற்பனையும் சூடுபிடித்துள்ளது.

    பனிப்பொழிவு, குளிர் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பனி கொட்டுவதால் மக்கள் சளி, காய்ச்சலால் அவதிப்படுகிறார்கள். பனிக்கு டீக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது.

    சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் விழிப்புணர்வுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    • குடியாத்தம் கொண்டசமுத்திரம் ஊராட்சியில் நடந்தது
    • 904 மாடுகளுக்கு சிகிச்சை

    குடியாத்தம்:

    குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் கொண்ட சமுத்திரம் ஊராட்சி காளியம்மன்பட்டி சாமியார்மலை பகுதியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு கொண்டசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரி பிரேம்குமார் தலைமை தாங்கினார்.ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் எம்.சிவகவி, இ.தமிழ்சசெல்வி, எஸ்.சரவணன் முன்னிலை வகித்தனர்.

    இம்முகாமில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம் கலந்து கொண்டு கால்நடை மருத்துவ முகாமை தொடங்கி வைத்து சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    கல்லப்பாடி கால்நடை மருத்துவர் எம்.ரமேஷ் தலைமையில் மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.இந்த முகாமில் பசுமாடுகள், காளைமாடுகள், ஆடுகள், கோழிகள் மற்றும் வீட்டு வளர்ப்பு பிராணிகள் என 904 கால்நடைகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றன.

    நிகழ்ச்சியில் அப்பகுதி பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • உடல் நிலை பாதிப்பால் அவதி
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த சின்னப்பள்ளிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முத்தையன் (வயது 67). இவர் அதே ஊரில் கூலி வேலை செய்து வந்தார். சில ஆண்டுகளாக உடல் நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார்.

    இந்நிலையில் நேற்று அவர் தன்னுடைய வீட்டின் அருகில் உள்ள மரத்தில் வேட்டியால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். இதனைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் உடனடியாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதனையடுத்து விரைந்து வந்த சிறப்பு தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் இன்பரசன் ஆகியோர் முத்கைதையன் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பராமரிப்பு பணி நடக்கிறது
    • காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது

    குடியாத்தம்:

    தமிழ்நாடு மின்சார வாரியம் குடியாத்தம் கோட்டத்தி ற்குட்பட்ட குடியாத்தம் செதுக்கரை, பிச்சனூர், பரதராமி, மோடிகுப்பம், பாக்கம், பரவக்கல், பேரணாம்பட்டு, சின்னவரிகம், மொரசப்பல்லி, உப்பரப்பல்லி ஆகிய துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய மின் சாதனை மற்றும் பராமரிப்பு பணிகளில் நடைபெறுகிறது.

    இதனால் நாளை சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை குடியாத்தம் டவுன், நெல்லூர் பேட்டை, கீழ்ஆலத்தூர், வெள்ளேரி, கல்லப்பாடி, கல்லேரி. பிச்சனூர், போடிப்பேட்டை, தரணம்பேட்டை, புவனேஸ்வரி பேட்டை. கொத்தூர், பூசாரிவலசை, பரதராமி, ராமாபுரம். செதுக்கரை, புதுப்பேட்டை, டெலிகாம் ஏரியா, செருவங்கி, சந்தப்பேட்டை, சைனகுண்டா, சேங்குன்றம், ஆர்.கொல்லப்பல்லி, மோடிகுப்பம். பரவக்கல், கார்கூர், மோர்தானா, மீனூர், குளிதிகை, செண்டத்தூர் ஆகிய பகுதிகள் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    இதே போல பேரணாம்பட்டு துணை மின் நிலையத்தை சேர்ந்த பேரணாம்பட்டு, பாலூர், ஓம்குப்பம், கொத்தூர், குண்டலபள்ளி, சாத்கர், ஏரிகுத்தி, எருக்கம்பட்டு, பத்தரப்பல்லி, பல்லாலகுப்பம்.

    சின்னவரிகம், துத்திப்பட்டு, பெரியவரிகம், உமராபாத், மிட்டாளம், நரியம்பட்டு, அழிஞ்சிகுப்பம், சாத்தம்பாக்கம், ராசாக்கல், புதூர், எர்தாங்கல், நலங்காநல்லூர், மொரசப்பல்லி, டி.டி.மோட்டூர், கமலாபுரம், பெரும்பாடி, உப்பரபல்லி, தட்டப்பாறை, மூங்கப்பட்டு, ஜிட்டப்பள்ளி, மீனூர், கொட்டாரமடுகு, மோர்தானா, தானாங்குட்டை, சின்னாலப்பல்லி ஆகிய பகுதிகள் மின் விநியோகம் நிறுத்தப்படும். இத்தகவலை மின்வாரிய குடியாத்தம் செயற்பொறியாளர் பொறுப்பு விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

    ×