search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் 37 மையங்களில் குரூப் 1 தேர்வு எழுதினர்
    X

    வேலூர் தந்தை பெரியார் என்ஜினியரிங் கல்லூரியில் நடந்த குரூப் 1 தேர்வு மையத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் 37 மையங்களில் குரூப் 1 தேர்வு எழுதினர்

    • 10, 113 பேர் எழுதினர்
    • 5 நடமாடும் குழுக்கள் பணியில் ஈடுபட்டனர்

    வேலூர்:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையம் சார்பில் குரூப் 1 முதல் நிலை தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடந்தது.

    துணை ஆட்சியர், துணை போலீஸ் சூப்பிரண்டு, துணைப்பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கு இந்த தேர்வு நடந்தது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 14 மையங்க ளில் 3,883 பேர் தேர்வு எழுதினர்.

    இதேபோல் வேலூர் மாவட்டத்தில் 6,230 பேர் தேர்வு எழுதினர் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேலூர் வெங்கடேஸ்வரா பள்ளி, சத்துவாச்சாரி ேஹாலி கிராஸ் பள்ளி, ஊரீஸ் பள்ளி உள்பட மாவட்டத்தில் உள்ள 23 மையங்களில் நடந்தது.

    தேர்வு மையங்களில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    அனைத்து தேர்வு மையங்களிலும் குடிநீர் மின்சாரம் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் துணை ஆட்சியர் அளவிலான 2 பறக்கும் படை அலுவலர்கள் துணை வட்டாட்சியர்கள் முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் போலீசார் அலுவலக உதவியாளர் ஆகியோர் சேர்ந்து 5 நடமாடும் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அனைத்து நிகழ்வு களையும் வீடியோவாக பதிவு செய்தனர். தேர்வு எழுத காலை 9 மணிக்குள் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    தேர்வு எழுத வந்தவர்கள் கொண்டு வந்த செல்போன், டிஜிட்டல் வாட்ச், ஸ்மார்ட் வாட்ச், கால்குலேட்டர் போன்றவற்றை தேர்வு மையத்திற்குள் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட வில்லை.

    Next Story
    ×