என் மலர்
நீங்கள் தேடியது "காகங்கள் வேட்டை"
- இறந்த காகங்னளை எடுத்துகொண்டு மர்ம நபர்கள் தப்பியோட்டம்
- போலீசார் விசாரணை
பேரணாம்பட்டு:
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பாலூர் கிராமம் பஸ் நிறுத்தம் அருகே சமுதாய கூடம் உள்ளது. இதன் எதிரே ஆலமரம் ஒன்று உள்ளது.
மேலும் பக்கத்தில் உள்ள பாலூர் அரசு உயர் நிலைப்பள்ளியிலும் மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் 100-க்கும் மேற்பட்ட காகங்கள் வசிக்கின்றன.
இந்த நிலையில் நேற்று மாலை திடீரென நிறைய காகங்கள் தரையில் விழுந்து இறந்து கிடந்தன. இதைப் பார்த்த பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என்ன நடக்கிறது என்றே புரியாமல் திகைத்தனர்.
அப்போது அடையாளம் தெரியாத 40 வயதுள்ள ஒரு பெண்ணும், ஆணும் பைக்கில் வந்து தாங்கள் வைத்திருந்த கோணிப்பைகளில் இறந்த காகங்களை அவசர, அவசரமாக எடுத்து போட்டனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கூச்சலிட்டு அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் பைக்கில் ஏறி இறந்த காகங்களுடன் தப்பிச்சென்றனர். இதையடுத்து அந்த பகுதியில் பார்த்தபோது காகங்களை வேட்டையாட வேர்க்கடலையில் விஷம் கலந்து வீசப்பட்டிருந்தது தெரியவந்தது.
பொதுவாக காகங்களை யாரும் வேட்டையாட மாட்டார்கள். அப்படி இருந்தும் எதற்காக இவ்வளவு காகங்கள் வேட்டையாடப்பட்டது எதற்காக என்பது தெரியவில்லை.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






