என் மலர்
நீங்கள் தேடியது "வி.ஐ.டி. விழா"
- வி.ஐ.டி. விழாவில் இந்தியன் வங்கி நிர்வாக இயக்குநர் பேச்சு
- புதிய கண்டுபிடிப்புகளை கண்டு பிடிக்க வேண்டும் என அறிவுரை
வேலுார்:
விஐடியில் 2022-23-ம் ஆண்டுக்கான மாணவர் பேரவை தொடக்க விழா பல்கலைக்கழக வளாகத் தில் நேற்று நடந்தது. விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்தார். இந்தியன் வங்கி நிர்வாக இயக் குனர் சாந்திலால் ஜெயின் சிறப்பு விருந்தினராக பங் கேற்றார்.
சிறப்பு விருந்தினரை மாணவர் நல உதவி இயக் குனர் சுஜாதா.அறிமுகப்ப டுத்தினார். விழாவில் சாந் திலால் ஜெயின் பேசியதாவது:- விஐடி பல்கலைக்க ழகமும், இந்தியன் வங்கியும் இணைந்து சிறப்பாக செயல்படுகிறது. விஐடியில் உலக தரத்திலான கல்வி வழங்கப்படுகிறது. மாணவர் பேரவை மூலம் மாணவர்களுக்கு தலைமை பண்பு வளரும். நீங்கள் என்ன ஆக வேண்டும் ? என முதலில் தீர்மானிக்க வேண்டும்.
அதைத் தொடர்ந்து உங்களது லட்சியத்திற்காக நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். நான் படிக்கும்போது வங்கி மேலாளராக வர வேண்டும் என நினைத்து அறிவியல் பாடத்தி லிருந்து காமர்ஸ் பாடத்துக்கு மாறினேன். தொடர்ந்து கடினமாக உழைத்தேன். வங்கி மேலாளர் ஆனேன்.
பல்வேறு பொறுப்பு களில் இருந்து இப்போது உங்கள் முன்னால் இந்தி யன் வங்கியின் நிர்வாக இயக்குனராக உள்ளேன். இதற்குக் காரணம் கடின உழைப்புதான். கொரோனா காலத்தில் மக்கள் அனை வரும் அவதிப்பட்டனர். இருந்தாலும் நாங்கள் அந்த காலகட்டத்தில் மக்களுக்கு உதவி செய்தோம்.
இந்தியன் வங்கி சார் பில் மாணவர்களுக்கு கல்வி கடன், வீட்டுக் கடன் என பல்வேறு கடன்கள் வழங்கப்படுகிறது மொபைல் பேங்கிங் அதிகரித்து வருகிறது. வருங்காலத்தில் உங்களுக்கு நிறைய சவால்கள் உள்ளன. நீங்கள் புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும். வருங்காலம் உங்கள்கையில் உள்ளது. நீங்கள் தலைசிறந்த தலைவர்களாக திகழ வாழ்த்துகிறேன்' என்றார்.
நிகழ்ச்சியில் வேந்தர் விசுவநாதன் பேசியதாவது:-மாணவர் பேரவை சிறப்பாக செயல்படுகிறது. மாணவர் பேரவை மாணவர்களுக் கும், பேராசிரியர்களுக்கும் பாலமாக திகழ்கிறது. விஐடி பல்கலைக் கழகத் தில் மாணவர்களை சேர்க் கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண் டுமென எதிர்பார்க்கின்றனர்.
கடந்த ஆண்டு 951 கம்பெனிகள் வந்தன. இந்த ஆண்டு இதுவரை 504 கம்பெனிகள் வந்துள்ளன. கடந்த ஆண்டு ஒரு மாண வருக்கு அதிகபட்ச சம்ப ளமாக ஒரு ஆண்டுக்கு ரூ. 75 லட்சத்தில் வேலை வாய்ப்பு கிடைத்தது. இந்த ஆண்டு இரண்டு மாண வர்களுக்கு ஒரு ஆண்டுக்கு ஒரு கோடியே 2 லட்சம் என அதிகபட்ச சம்பளம் கிடைத்துள்ளது. இந்த அளவு சம்பளம் பேராசிரி யர்களுக்கு கூட கிடைக் காது. ஒருவேளை தொழில திபர்களுக்கு வேண்டுமா னால் கிடைக்கலாம்.
படிக்கும்போது மாண வர்களுக்கு ஒழுக்கம் தேவை. கல்லூரிக்கு விடு வ. முறை எடுக்காமல் வர வேண்டும். நான் கல்லுா ரியில் படிக்கும்போது ஒரு நாள் கூட விடுமுறை எடுத்தது இல்லை. நீங்கள் நன்றாக படித்தால் வாழ்க் கையில் வெற்றி பெறலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சிக்கு விஐடி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் நலன் உதவி இயக்குனர் ஆர்த்தி வரவேற்றார்.
மாணவர் நல இயக்குனர் நைஜூ உறுதிமொழி வாசிக்க மாணவர் பேரவை நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாணவர் நல உதவி இயக்குனர் 5 ஷர்மிளா நன்றி கூறினார்.






