என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலையோரம் குப்பைகள்"

    • பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி
    • துர்நாற்றம் வீசுவதால் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாள் தோறும் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் சென்னை-பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதிகளில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    பள்ளிகொண்டா பேரூ ராட்சியில் வெட்டுவாணம் சின்ன கோவிந்தம்பாடி கீழாச்சூர் ராமாபுரம் வேப்பங்கால் என 5க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இங்கு சுமார் 25000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    மேலும் பொது மக்களிடத்தில் வீடு மற்றும் கடை பகுதிகளில் இருந்து நாள்தோறும் சேகரிக்கப்ப டும் குப்பை கழிவுகளை மக்கும், மக்கா குப்பைகளாக தரம் பிரித்து வாங்க வேண்டும் அவ்வாறு வாங்கப்படும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் கழிவுகளை எந்திரங்கள் கொண்டு வெட்டப்பட்டு பிளாஸ்டிக் தயாரிக்கும் கம்பெனிக ளுக்கு விற்பணைக்கும் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

    பேரூராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்படாமல் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலையை யொட்டிய பள்ளிகொண்டா பெரிய ஏரி உபரி நீர் வெளியேறும் கால்வாய் பகுதிகளில் தினமும் டன் கணக்கில் அப்படியே கொட்டப்ப டுகிறது.

    இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. குப்பை கழிவுகளால் அருகில் உள்ள விவசாய நிலங்கள் மலட்டுத்தன்மை அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் உபரிநீர் வெளியேறும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகும் அபாயம் நிலவி வருகிறது.

    அது மட்டும் இன்றி குப்பை கிடங்கிற்கு அருகில் பெரியாண்டவர் கோவில் இருப்பதால் பக்தர்கள் முகம் சுழித்தபடி மூக்கை பிடித்துக்கொண்டு கோயிலுக்கு செல்லும் சூழல் நிலவுகிறது.

    பக்தர்கள் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டும். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என அப்பகுதிமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×