என் மலர்tooltip icon

    வேலூர்

    • 2 மடங்கு விலை உயர்ந்துள்ளது
    • பொதுமக்கள் அதிர்ச்சி

    வேலூர்:

    வேலூர் மார்க்கெட்டில் கத்தரிக்காய் ரூ.180-க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    வேலூர் மார்க்கெட்

    வேலூர் நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மட்டுமின்றி ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்தும் காய்கறிகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதில் நேற்று முதல் காய்கறியின் விலை 2 மடங்கு உயர்ந்துள்ளது.

    அதன்படி கத்தரிக்காய் 1 கிலோ ரூ.180-க்கும், பீன்ஸ் ரூ.100, அவரை ரூ.120, புடலை ரூ.80, பெரிய வெங்காயம் ரூ.30, சின்ன வெங்காயம் ரூ.80, கேரட் ரூ.65, பாகற்காய் ரூ.60, முருங்கை ரூ.80, பீட்ரூட் ரூ.55 வெண்டை ரூ.70, முள்ளங்கி ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    அதேபோல் இஞ்சியும் அதிகபட்சமாக ரூ.200 வரை விலை உயர்த்தி விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி நடந்தது

    வேலூர்:

    தமிழக முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெடுஞ்சாலை துறை சார்பில் வேலூர் காகிதப்பட்டறையில் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடந்தது.

    இந்நிகழ்ச்சுக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தனசேகர், உதவி கோட்டை பொறியாளர் பிரகாஷ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இளநிலை பொறியாளர் விஜயா முன்னிலை வகித்தார். கலெக்டர் குமாரவேல் பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

    வேலூர் மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலை ஓரங்களில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் செந்தில் மாநகராட்சி கவுன்சிலர் மம்தா குமார், 2-வது மண்டல சுகாதார அலுவலர் லூர்துசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வேலூர் மாநகராட்சி கமிஷனர் பேச்சு
    • முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது

    வேலுார்:

    வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் மாநகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகம் இணைந்து, பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை தடுப்பது மற்றும் முன்னெச்சரிக்கை, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    மேயர் சுஜாதா தலைமை தாங்கினார். சிறப்பு விருந் தினராக, கமிஷனர் ரத்தின சாமி கலந்துகொண்டு பேசியதாவது:-

    பணி புரியும் இடத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும். பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள் நடக்கக் கூடாது.

    அப்படி நடந்தால் எப்படி வெளிப்படுத்துவது என்ப தற்காகவும் இந்த கூட்டம் நடக்கிறது. அச்சப்பட வேண்டாம், அத்துமீறல்கள் இருந்தால் தைரியமாக புகார் அளிக்கலாம். சம்பந் தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக, மாநகராட்சியில் தனியாக குழு அமைக்கப் படுகிறது.

    நிரந்தர பணியாளர்கள் மட்டுமல்ல, ஒப்பந்தஅடிப் படையில் பணிபுரியும் பெண்களும் தங்களுக்கு ஏதாவது பாலியல் ரீதியிலான அத்துமீறல்கள் இருந் தால் தைரியமாக புகார் அளிக்கலாம்.

    இங்கு 50 சதவீதம் பேர் பெண்கள் தான், மேயரும் பெண் தான். இங்கு கூறப்படும் கருத்துக்களை கவனமாக கேட்டு, அதை நீங்கள் மற்ற வர்களுக்கும் எடுத்துக் கூற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில், சின்னத் திரை பிரபலம் ஜெயச்சந் திரன், பாலியல் துன்புறுத் தல் தடுப்பு சட்டம் 2013 குறித்து விளக்க உரையாற் றினார். பாலியல் தடுப்பு குறித்த உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.

    மாநகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலக ஆலோசகர் விஜயலட்சுமி, பாதாள சாக்கடை திட்ட குழு தலைவர் தினகரன் மற்றும் மாநகராட்சி யில் பணிபுரியும் ஊழியர்கள் கலந்து கொணடனர்.

    • உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடவடிக்கை
    • பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் திட்டம் செயல்படுத்தப்படும்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் 157 பள்ளிகளில் பசுமை தோட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் நிதியுதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பசுமை தோட்டங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தோட்டங்களில் மரக்கன்றுகள் வளர்த்து பசுமை தோட்டமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து வேலூர் மாவட்ட கல்வி அதிகாரிகள் கூறியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் உள்ள 134 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி களிலும், 23 நிதியுதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பசுமை தோட்டம் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பள்ளி வளாகத்தில் குறிப்பிட்ட இடம் தோட்டத்துக்கு என ஒதுக்கப்படும். அதில் தோட்டக்கலையுடன் இணைந்து மூலிகை செடிகள் வைத்தல், வனத்துறையுடன் இணைந்து மரக்கன்றுகள் நடப்பட உள்ளது.

    இந்த திட்டத்தினை கண்காணிக்க மாவட்ட அளவில் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளராக அதிசயநாதன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    அவர் அவ்வப்போது பள்ளிகளுக்கு சென்று இத்திட்டத்தின் செயல்பாடுகளை கண்காணிப்பார்.

    இதுதவிர இத்திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளி களில் பொறுப்பாசிரியர் ஒருவர் நியமிக்கப்ப ட்டுள்ளார். அவர் இது தொ டர்பாக கண்காணிப்பார்.

    பள்ளிகளில் மாணவர்கள் கொண்ட சுற்றுச்சூழல் மன்றம் அமைக்கப்படும். நடப்படும் மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பசுமைப்படை மாணவர்கள், சுற்றுச்சூழல் மன்ற மாணவர்கள் இப்பணி களை மேற்கொள்வார்கள்.

    கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் இந்த திட்டம் செயல்படு த்தப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நள்ளிரவு முதல் ஆவினில் இருந்து வெளியே செல்லும் வாகனங்களை, கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பரிசோதனை செய்த பின்பே வெளியே அனுப்பப்பட்டது.
    • பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை விடுவித்தது குறித்து ஆவின் வளாக பாதுகாப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் வழங்கி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

    வேலூர்:

    வேலூர் ஆவின் பால் அலுவலகம் சத்துவாச்சாரியில் இயங்கி வருகிறது.

    வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு அவை பாக்கெட்டுகளாக மாற்றி முகவர்கள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    ஆவின் நிறுவனத்தில் நள்ளிரவு முதல் பால்பாக்கெட்டுகள் வாகனங்களில் முகவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    பால்பாக்கெட்டுகள் எடுத்துச்செல்ல நேற்று முன்தினம் ஒரே பதிவு எண் கொண்ட 2 வேன்கள் ஆவின் அலுவலகத்துக்கு வந்திருந்தன.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆவின் பொது மேலாளர் (பொறுப்பு) சுந்தரவடிவேலு, 2 வாகனங்களையும் ஆய்வு செய்தார்.

    அப்போது ஒரு வாகனம் போலியானது என தெரிய வந்தது. அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இந்த வாகனம் மூலம் தினமும் சுமார் 2,300 லிட்டர் கடத்தப்பட்டு பல லட்சம் லிட்டர் பால் திருட்டு நடந்துள்ளது. 2 வேன்களை ஆவின் வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்தனர்.

    இந்நிலையில் நள்ளிரவில் ஆவின் நிறுவனத்துக்கு வந்த மர்மநபர்கள் அதிகாரியை மிரட்டி விட்டு, ஆவின் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆவணங்கள் இல்லாத வேனை எடுத்து சென்றுவிட்டனர்.

    இதுதொடர்பாக ஆவின் உதவி பொது மேலாளர் சிவக்குமார் (விற்பனை) நிர்வாகம் சார்பில் சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் ஒப்பந்ததாரர் சிவக்குமார் உள்பட 2 பேர் மீது சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் ஆவினில் இருந்து வெளியே செல்லும் வாகனங்களை, கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பரிசோதனை செய்த பின்பே வெளியே அனுப்பப்பட்டது.

    பால் பாக்கெட்டுகள் செல்லும் ஊர், முகவர்களின் விவரம் மற்றும் சரியான நபரிடம் தான் சென்று சேருகிறதா? என அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    ஆவின் நிறுவனத்திலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் வாகன விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

    இதில் ஒரே பதிவு எண் கொண்டு வாகனம் இயக்கியது குறித்து வரும் 25-ந் தேதிக்குள் விளக்கம் அளிக்க ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் அந்த 2 வாகனங்களின் ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரசு வாகனங்களில் பால் வினியோகம் செய்யப்படும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை விடுவித்தது குறித்து ஆவின் வளாக பாதுகாப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் வழங்கி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நல சங்கத்தின், நிறுவன தலைவர் பொன்னுசாமி கூறுகையில்:-

    ஆவின் விற்பனை பிரிவு அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் இந்தக் கடத்தல் நடைபெற்று இருக்காது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

    • நள்ளிரவில் ஆவின் நிறுவனத்துக்கு வந்த மர்மநபர்கள் அதிகாரியை மிரட்டி ஆவணங்கள் இல்லாத வேனை எடுத்து சென்றுவிட்டனர்.
    • ஒப்பந்ததாரர் சிவக்குமார் உள்பட 2 பேர் மீது சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் ஆவின் பால் அலுவலகம் சத்துவாச்சாரியில் இயங்கி வருகிறது.

    வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு அவை பாக்கெட்டுகளாக மாற்றி முகவர்கள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    ஆவின் நிறுவனத்தில் நள்ளிரவு முதல் பால்பாக்கெட்டுகள் வாகனங்களில் முகவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    பால்பாக்கெட்டுகள் எடுத்துச்செல்ல நேற்று முன்தினம் ஒரே பதிவு எண் கொண்ட 2 வேன்கள் ஆவின் அலுவலகத்துக்கு வந்திருந்தன.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆவின் பொது மேலாளர் (பொறுப்பு) சுந்தரவடிவேலு, 2 வாகனங்களையும் ஆய்வு செய்தார்.

    அப்போது ஒரு வாகனம் போலியானது என தெரிய வந்தது. அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இந்த வாகனம் மூலம் தினமும் சுமார் 2,300 லிட்டர் கடத்தப்பட்டு பல லட்சம் லிட்டர் பால் திருட்டு நடந்துள்ளது. 2 வேன்களை ஆவின் வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்தனர்.

    இந்நிலையில் நள்ளிரவில் ஆவின் நிறுவனத்துக்கு வந்த மர்மநபர்கள் அதிகாரியை மிரட்டி விட்டு, ஆவின் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆவணங்கள் இல்லாத வேனை எடுத்து சென்றுவிட்டனர்.

    இதுதொடர்பாக ஆவின் உதவி பொது மேலாளர் சிவக்குமார் (விற்பனை) நிர்வாகம் சார்பில் சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் ஒப்பந்ததாரர் சிவக்குமார் உள்பட 2 பேர் மீது சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் ஆவினில் இருந்து வெளியே செல்லும் வாகனங்களை, கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பரிசோதனை செய்த பின்பே வெளியே அனுப்பப்பட்டது.

    பால் பாக்கெட்டுகள் செல்லும் ஊர், முகவர்களின் விவரம் மற்றும் சரியான நபரிடம் தான் சென்று சேருகிறதா? என அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    ஆவின் நிறுவனத்திலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலசங்கத்தின், நிறுவன தலைவர் பொன்னுசாமி கூறுகையில்:-

    ஆவின் விற்பனை பிரிவு அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் இந்தக் கடத்தல் நடைபெற்று இருக்காது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

    • ஒரே பதிவெண்ணில் 2 வேன்களை இயக்கி 2,500 லிட்டர் பால் நூதன முறையில் திருடியது வெளிச்சத்திற்கு வந்தது.
    • வாகன உரிமையாளர் சிவக்குமார், ஓட்டுநர் விக்கி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வேலூர்:

    வேலூர் ஆவினில் ஒரே பதிவெண்ணில் 2 வேன்களை இயக்கி, அதில் தினமும் சுமார் 2,500 லிட்டர் பால் நூதன முறையில் திருடியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், வேலூர் ஆவினில் ஒரே பதிவு எண்ணில் இரண்டு வாகனங்கள் இயங்கிய விவகாரத்தில் இருவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    வாகன உரிமையாளர் சிவக்குமார், ஓட்டுநர் விக்கி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆவின் நிர்வாகம் சார்பில் அளித்த புகாரை தொடர்ந்து சத்துவாச்சாரி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இருவர் மீதும் அவதூறாக பேசுதல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாட்டரி சீட்டு விற்பனை காட்டன் சூதாட்டம் என்ற பெயரில் அமோகமாக நடைபெற்று வருகிறது.
    • 3-ம் நம்பர் லாட்டரியும், காட்டன் சூதாட்டமும் எளிய மக்களின் வருவாய் அனைத்தையும் பிடுங்கி, அவர்களை நடுத்தெருவில் நிற்கச் செய்கிறது.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை காட்டன் சூதாட்டம் என்ற பெயரில் அமோகமாக நடைபெற்று வருகிறது.

    பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பஜார் பகுதியில் வீடுகளை வாடகைக்கு எடுத்து காட்டன் சூதாட்டத்தை நடத்தி வருகின்றனர். தினமும் கூலி வேலைக்கு செல்பவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், காய்கறி, பூ, பழம் விற்கும் சிறு வியாபாரிகள், கட்டிட வேலை செய்பவர்கள் என இவர்களை குறிவைத்தே காட்டன் சூதாட்டம் நடத்தப்படுகிறது.

    இதில் நூற்றுக்கணக்கான ஏஜெண்டுகள் இருப்பதாகவும், இதில், பல கோடி ரூபாய் புரளுவதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில் காட்டன் ஜாக்பாட் என்ற பெயரில் நடத்தி வரும் சூதாட்டத்தை போலீசாரும் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த காட்டன் சூதாட்டம் விற்பனை மதியம் 1.30 மணிக்கு மேல் தான் சூடு பிடிக்க தொடங்குகிறது.

    அந்த சமயத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் அவர்களது வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டு அந்த சூதாட்டம் நடக்கும் தெருவில் சென்று லாட்டரி சீட்டுகளை அங்கு இருக்கும் ஏஜென்ட்கள் மூலமாக மாறி மாறி எழுதி விட்டு செல்கின்றனர்.

    சூதாட்ட கும்பல் தங்களிடம் எழுத வரும் நபர்களிடம் இருந்து பல ஆயிரம் ரூபாய் அளவிற்கு பணத்தை கட்டணமாக பெற்றுக் கொள்கின்றனர்.

    குறிப்பாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகளவில் காட்டன் சூதாட்டம் மூன்றாம் நம்பர் லாட்டரி விற்பனை அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.

    "அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு, ராணிப்பேட்டை விஷாரம் என மாவட்டம் முழுக்க காட்டன் குதாட்டமும், மூன்று நம்பர் லாட்டரியும் கொடிகட்டிப் பறக்கின்றன. இந்த காட்டன், 3-ம் நம்பர் லாட்டரி இரண்டுக்கும் இடையே பெரிய வித்தியாசம் கிடையாது. காட்டன் என்பது 2 எண்கள் எழுதித்தர வேண்டும். உதாரணமாக, ஒரு பெட்டிக்கடைக்கு சென்று 35 எனச்சொன்னால் 10 ரூபாய் வாங்கிக்கொண்டு அந்த எண்ணை ஒரு துண்டுச் சீட்டில் எழுதித் தந்துவிடுவார்கள் நாம் சொன்ன எண் தேர்வாகியிருந்தால் 700 ரூபாய் கிடைக்கும். ஒரு எண்ணுக்கு 10 ரூபாய் என்பதால் பலரும் 35, 44. 55 என 10 முதல் 20 விதமான இரட்டை இலக்க எண்களை எழுதி அதற்கான பணத்தைத் தந்துவிடுவார்கள்.

    இதில் ஒப்பன், குளோஸ் என மற்றொரு வகை உள்ளது. ஓப்பன் என்றால், 2 எண்களில் முதல் எண்ணை மட்டும் குறிப்பிடுவது. அதாவது 1 முதல் 9 வரை என ஏதாவது ஒரு எண்ணை சொல்லி பணம் கட்டுவது. உதாரணமாக 4-ம் எண் மீது பணம் கட்டியிருந்தால் இதில் 40, 41, 42 என வந்தாலும் முதலில் 4 வந்தால் அதற்கு பரிசு தருவார்கள்.

    அதாவது 10 ரூபாய் கட்டினால் 350 ரூபாய் கிடைக்கும். குளோஸ் டைப் என்பது, கடைசி எண் 1 முதல் 9 வரை ஏதாவது ஒரு எண்ணை குறித்துத் தர வேண்டும். உதாரணமாக 5 என வைத்துக் கொள்வோம் 45, 55, 65, 15 என எது வந்தாலும் கடைசியில் 5 என முடிந்தால் பாதித் தொகை கிடைக்கும்.

    நீங்கள் 10 ரூபாய்தான் கட்டவேண்டும் என்கிற கட்டாயமில்லை. 100. 500 கூட கட்டலாம். பரிசுத்தொகை அப்படியே 10 மடங்கு அதிகமாகத் தருவார்கள் 3-ம் நம்பர் லாட்டரி என்பது, ஒரு எண்ணுக்கு 10 ரூபாய் செலுத்த வேண்டும்.

    உதாரணமாக, 567 என எழுதித் தந்தால் 567 குலுக்கலில் வந்தால் அந்த எண்ணை எழுதித் தந்தவர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். 5 மட்டுமே வந்தது என்றால் 30 ரூபாய் தருவார்கள். S6 என 2 எண்கள் வந்திருந்தால் 500 ரூபாய் தருவார்கள்.

    100 ரூபாய்க்கு டோக்கன் எழுதினால். எழுதும் புரோக்கருக்கு 30 ரூபாய் கிடைப்பதால், தொழிலாளர்கள் அதிகம் புழங்கும் காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட், பஸ் நிலையங்களில் உள்ள கடைகள் மற்றும் தனி அறைகளை எடுத்தும் பலர் எழுதுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    3-ம் நம்பர் லாட்டரியும், காட்டன் சூதாட்டமும் எளிய மக்களின் வருவாய் அனைத்தையும் பிடுங்கி, அவர்களை நடுத்தெருவில் நிற்கச் செய்கிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    • ஏராள மான லாட்டரி சீட்டுகள் பறிமுதல்
    • போலீசார் சோதனையில் சிக்கினர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக வந்த தொடர் புகார்களின் பேரில் குடியாத்தம் டவுன் போலீசார் நேற்று குடியாத்தம் நெல்லூர் பேட்டை பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது சாமுண்டிபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 36) என்பவர் லாட்டரி சீட்டுகளை விற்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கார்த்தியை கைது செய்தனர்.

    இதேபோல் தரணம்பேட்டை பகுதியில் பாபு (62) என்பவர் லாட்டரி சீட்டுகள் விற்றுக் கொண்டிருக்கும் போது போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து ஏராள மான லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • வருகிற 11-ந் தேதி வருகிறார்
    • பூமி பூஜை நடந்தது

    வேலூர்:

    வேலூர் அருகே கந்தனேரியில் வருகிற 11-ந் தேதி பா.ஜ.க. சார்பில் நடைபெறும், 9 ஆண்டுகால சாதனை விளக்க பொது கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷா பங்கேற்க உள்ளார்.

    இந்த பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தில், பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கே. எஸ் நரேந்திரன் தலைமையில் இன்று பூமி பூஜை நடைபெற்றது.

    இதில் பா.ஜ.க. மாநில பொதுச்செ யலாளர் கார்த்தியாயினி, மாநிலச் செயலாளர் வெங்கடேசன்,

    வேலூர் மாவட்ட தலைவர் மனோகரன் 18-வது வார்டு உறுப்பினர் சுமதி மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வருகிற 25-ந் தேதி கும்பாபிஷேகம்
    • கோபுர கலசங்கள் தங்க கலசமாக மாற்றப்படுகிறது

    வேலூர்:

    வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோவிலில் வருகிற 25- ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு இன்று ஜலகண்டேஸ்வரருக்கு சிறப்பு யாகங்களை நடத்தி, பாலாலயம் செய்யப்பட்டது.

    இதில் கோபுர கலசங்கள் உள்ளிட்ட அனைத்தும் தங்க கலசங்களாக மாற்றபடுகிறது. அதேபோல் கொடி மரத்திற்கும் தங்ககவசம் அணிவிக்கபடுகிறது. பாலாலயம் செய்யபட்டதால் முருகர், விநாயகர், பெரு மாள், அகிலாண்டேஸ்வரி அம்மன் மற்றும் ஜலகண்டேஸ்வரர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளும் மூடப்பட்டது.

    யாக சாலை பணி

    மேலும் யாக சாலைகள் அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தில் பல லட்சம் பேர் பங்கேற்க வாய்ப்பு உள்ளதால், அதற்கான ஏற்பாடுகளும் தொடங்கப்பட்டது.

    இதன் காரணமாக வரும் 25-ந் தேதி வரை சாமி சன்னதிகள் மூடப்பட்டிருக்கும். மூலவர்களுக்கும் அபிஷேக ஆராதனை நடைபெறாது என தெரிவித்தனர்.

    • அழுகிய காய்கறிகளால் துர்நாற்றம் வீசுகிறது
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தொரப்பாடி டோல்கேட் பகுதியில் உழவர் சந்தை செயல்ப்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தங்களது விவசாய நிலங்களில் பயிரிடப்படும் காய்கறிகளை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

    கிராமப்புறங்களில் இயற்கையாக விளைவிக்கப்படும் காய்கறிகள் குறைந்த விலையில் கிடைப்பதால் ஏராளமானோர் இங்கு வந்து வாங்கி செல்கின்றனர்.

    இந்த நிலையில் உழவர் சந்தையில் போடப்படும் குப்பைகளை, மாநகராட்சி துப்புர பணியாளர்கள் சரிவர அகற்றுவதில்லை என கூறப்படுகிறது. கடமைக்காக வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே அங்கு குப்பைகள் அகற்றி சுத்தம் செய்யப்படுகிறது.

    சுமார் 3 நாட்களுக்கு மேல் குப்பைகள் அகற்றாமல் இருப்பதால், அழுகிய காய்கறிகளால் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

    உழவர் சந்தைக்கு காய்களை வாங்க வரும் பொதுமக்கள் துர்நாற்றம் தாங்காமல் மூக்கை பிடித்தபடியே செல்கின்றனர்.

    எனவே உழவர் சந்தையில் சேகரிக்கப்படும் குப்பைகளை தினமும் அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×