என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம் யாகம் நடந்த காட்சி.
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சன்னதிகள் மூடல்
- வருகிற 25-ந் தேதி கும்பாபிஷேகம்
- கோபுர கலசங்கள் தங்க கலசமாக மாற்றப்படுகிறது
வேலூர்:
வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோவிலில் வருகிற 25- ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு இன்று ஜலகண்டேஸ்வரருக்கு சிறப்பு யாகங்களை நடத்தி, பாலாலயம் செய்யப்பட்டது.
இதில் கோபுர கலசங்கள் உள்ளிட்ட அனைத்தும் தங்க கலசங்களாக மாற்றபடுகிறது. அதேபோல் கொடி மரத்திற்கும் தங்ககவசம் அணிவிக்கபடுகிறது. பாலாலயம் செய்யபட்டதால் முருகர், விநாயகர், பெரு மாள், அகிலாண்டேஸ்வரி அம்மன் மற்றும் ஜலகண்டேஸ்வரர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளும் மூடப்பட்டது.
யாக சாலை பணி
மேலும் யாக சாலைகள் அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தில் பல லட்சம் பேர் பங்கேற்க வாய்ப்பு உள்ளதால், அதற்கான ஏற்பாடுகளும் தொடங்கப்பட்டது.
இதன் காரணமாக வரும் 25-ந் தேதி வரை சாமி சன்னதிகள் மூடப்பட்டிருக்கும். மூலவர்களுக்கும் அபிஷேக ஆராதனை நடைபெறாது என தெரிவித்தனர்.






