என் மலர்
உள்ளூர் செய்திகள்

157 பள்ளிகளில் பசுமை தோட்டம்
- உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடவடிக்கை
- பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் திட்டம் செயல்படுத்தப்படும்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் 157 பள்ளிகளில் பசுமை தோட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் நிதியுதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பசுமை தோட்டங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தோட்டங்களில் மரக்கன்றுகள் வளர்த்து பசுமை தோட்டமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேலூர் மாவட்ட கல்வி அதிகாரிகள் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் உள்ள 134 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி களிலும், 23 நிதியுதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பசுமை தோட்டம் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பள்ளி வளாகத்தில் குறிப்பிட்ட இடம் தோட்டத்துக்கு என ஒதுக்கப்படும். அதில் தோட்டக்கலையுடன் இணைந்து மூலிகை செடிகள் வைத்தல், வனத்துறையுடன் இணைந்து மரக்கன்றுகள் நடப்பட உள்ளது.
இந்த திட்டத்தினை கண்காணிக்க மாவட்ட அளவில் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளராக அதிசயநாதன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் அவ்வப்போது பள்ளிகளுக்கு சென்று இத்திட்டத்தின் செயல்பாடுகளை கண்காணிப்பார்.
இதுதவிர இத்திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளி களில் பொறுப்பாசிரியர் ஒருவர் நியமிக்கப்ப ட்டுள்ளார். அவர் இது தொ டர்பாக கண்காணிப்பார்.
பள்ளிகளில் மாணவர்கள் கொண்ட சுற்றுச்சூழல் மன்றம் அமைக்கப்படும். நடப்படும் மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பசுமைப்படை மாணவர்கள், சுற்றுச்சூழல் மன்ற மாணவர்கள் இப்பணி களை மேற்கொள்வார்கள்.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் இந்த திட்டம் செயல்படு த்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






