என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • ஆடி அமாவாசையை முன்னிட்டு நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    போளூர்:

    இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மறைந்த முன்னோர்களின் ஆசை பெறுவதற்கும் பித்ருக்களின் ஆசி பெறுவதற்கும் கோயில்களில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    போளூர் பெருமாள் கோவில், கைலாசநாதர் கோவில், ஆஞ்சநேயர் கோவில் போன்ற இடங்களில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான கலந்து கொண்டனர்.

    • திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
    • மாணவர்கள் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை சிஷ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜி. அப்துல்கலாம் நினைவு நாளை ஒட்டி அவருடைய திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    மாணவ மாணவிகள் கலந்து கொண்டு அவருடைய சிறப்புகளை வெளிப்படுத்தினார்கள்.

    நிகழ்ச்சியில் பள்ளியின் செயலாளர் டாக்டர். வி. எம். நேரு, தலைவர் டாக்டர் கணேசன், பொருளாளர் மணி, பள்ளி முதல்வர் மகாதேவன் மற்றும் அறக்கட்டளைதி இயக்குநர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    • ரூ.25.50 லட்சம் மதிப்பிட்டில் பணிகள் நடந்து வருகிறது
    • சாலைகளை நேரில் பார்வையிட்டார்

    வேட்டவலம்:

    வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜீஜாபாய் நேற்று வேட்டவலம் பேரூராட்சியில் உள்ள வீடு, கடைகள் மற்றும் திருமண மண்டபங்களை அளவீடு செய்து, சொத்து வரி, சீராய்வு பணிகளை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் பேரூராட்சிக்குட்பட்ட எள்ளுபிள்ளையார் குளம்,சமுத்திரம் எரி ஆகிய இடங்களில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.25.50 லட்சம் மதீப்பிட்டில் நடைபெறும் நீர்நிலை மேம்பாட்டுப் பணிகள் மற்றும் கீழ்பெ ன்னாத்தூர் எம்.எல்.ஏ தொகுதி நிதியின் மூலம் ரூ.20 லட்சம் மதீப்பீட்டில் நட ந்து முடிந்த புதிய மினிடேங்குகள், சிமெண்ட் சாலைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது செயல் அலுவலர் சுகந்தி, பேரூராட்சி மன்ற தலைவர் கவுரி,முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் முருகையன்,துணை தலைவர் ஜெயலட்சுமி, இளநிலை பொறியாளர் பழனிசாமி,பேரூராட்சி மன்ற உ றுப்பினர்கள் மணி, அன்சர் அலி,சங்கர்,முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் காந்தி, இளநிலை உதவியாளர் பன்னீர்செல்வம்,கணினி இயக்குநர் வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • இடு பொருட்களை வாங்க உரக்கடை உரிமையாளர்கள், கட்டாயப்படுத்துவதாக புகார்
    • விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள பெரணமல்லூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் முன்பு. விவசாயிகள் சங்கம் சார்பில்நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    விவசாய பயன்பாட்டிற்கு தனியார் உரக்கடைகளில் யூரியா, வாங்க செல்லும்போது கூடுதலாக விவசாய இடு பொருட்களை வாங்க உரக்கடை உரிமையாளர்கள், கட்டாயப்படுத்தி வருகின்றனர்.

    மேலும் கூடுதலாக அவர்கள் சொல்லக்கூடிய பொருட்களை வாங்கினால் மட்டுமே யூரியா தரப்படும் என விவசாயிகளை கட்டாயப்படுத்தி வியாபாரம் செய்து வருகின்றனர்.

    வேளாண்மை அதிகாரிகளுக்கு விவசாய சங்க செயலாளர்கள், விவசாய சங்க, பொறுப்பாளர்கள், விவசாயிகள், பலமுறை நடவடிக்கை எடுக்க கூறியும் நடவடிக்கை எடுக்காததால்.

    வேளாண்மை விரிவாக்க மையம் முன்பு நூதன முறையில் ஆடு, புலி, ஆட்டம் கட்டங்கள் வரையப்பட்டு, முகமூடி அணிந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க செயலாளர் புருஷோத்தமன், தலைமை தாங்கினார்.

    இதில் 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு மூலிகைகள், வாசனை திரவியங்கள் யாக குண்டத்தில் போடப்பட்டது.
    • சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    திருவண்ணாமலை:

    உலக நன்மைக்காகவும், உலகத்தில் இருந்து கொரோனாவை முற்றிலும் விரட்டவும், நாடு முழுவதும் நல்ல மழை பொழிய வேண்டிய சித்தர்கள் அருள் வேண்டி சித்தர்கள் வாழும் ஆன்மீக நகரமான திருவண்ணாமலை நகரை ஒட்டி அமைந்துள்ள தேவனாம்பட்டு கிராமத்தில் உள்ள சுயம்பு சுப்பிரமணியசாமி கோவிலில் ஜப்பான் பக்தர்கள் சிறப்பு யாகம் செய்தனர்.

    இதில் பல்வேறு வகையான சிறப்பு மூலிகைகள் வாசனை திரவியங்கள் யாக குண்டத்தில் போடப்பட்டது.

    இந்த யாகத்தில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சாக்கிகோ ஓஷி, சாயாஓஷி, மாஸ்கோஓஷி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    இதனை தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    இந்த யாகத்திற்கான சிறப்பு ஏற்பாடுகளை மரக்காணத்தை பூர்வீகமாக கொண்ட ஜப்பான் குடியுரிமை பெற்ற சுப்ரமணியம் செய்திருந்தார்.

    இந்த யாகத்தில் தேவனாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இதில் கோவில் குருக்கள் சந்தோஷ் தலைமையில் சிவாச்சாரியார்கள் யாகம் நடத்தினார்கள்.

    இதனைத் தொடர்ந்து கிராம மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • ரூ.4 ஆயிரம் அபராதம் விதிப்பு
    • திருவண்ணாமலை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

    திருவண்ணாமலை:

    ஆடு மேய்த்து கொண்டிருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை அளித்து திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது.

    செய்யாறு தாலுகா குண்ணவாக்கம் குளக்கரை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 34), ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவர் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 17-ந் தேதி அந்த பகுதியில் உள்ள காட்டு பகுதிக்கு சென்று உள்ளார்.

    அப்போது அங்கு 2 சிறுமிகள் ஆடு மேய்த்து கொண்டிருந்தனர். அங்கிருந்த சுமார் 11 வயதுடைய சிறுமி ஒருவரை சுரேஷ் தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

    அந்த சமயத்தில் அவ்வூரில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று கொண்டிருந்த ஒலிபெருக்கியின் சத்தம் காரணத்தினால் சிறுமியின் அலறல் சத்தம் வெளியே கேட்கவில்லை.

    அங்கிருந்த மற்றொரு சிறுமி சுரேசுடன் சென்ற சிறுமியை தேடி சென்று உள்ளார். அப்போது சுரேஷ் சிறுமியை பலாத்காரம் செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் அங்கிருந்த ஓடி ஊருக்குள் சென்று இது குறித்து அப்பகுதி மக்களிடம் தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில் சிறுமியின் தாய் மற்றும் ஊர் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். பொது மக்கள் வருவதை கண்டதும் சுரேஷ் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

    இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுரேஷை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில் நேற்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார். அதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சுரேஷிற்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    • ஒப்பந்தப்புள்ளி ஒத்தி வைக்கப்பட்டதைக் கண்டித்து நடந்தது
    • போலீசார் சமரசம் செய்ததால் போராட்டத்தை கைவிட்டனர்

    வந்தவாசி:

    வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற இருந்த ஒப்பந்தப்புள்ளி ஒத்தி வைக்கப்பட்டதைக் கண்டித்து ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அந்த அலுவலகத்தினுள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் ரூ.83.76 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி படிவங்கள் நேற்று மாலை வரை வழங்கப்படும் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் இன்று மாலை வரை பெற்றுக் கொள்ளப்படும் என்றும் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக இந்த ஒப்பந்தப்புள்ளி ஒத்தி வைக்கப்படுவதாக ஒன்றிய நிர்வாகம் அலுவலகத்தில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டியது.

    இதனால் ஆத்திரமடைந்த ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினுள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஆர்.விஜயன் தலைமையில் ஒன்றியக்குழு உறுப்பினர் சக்திவேல் மற்றும் 5 பெண் ஒன்றியக்குழு உறுப்பினர்களின் கணவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

    அதிகாரிகள் அைலகழிப்பு

    இந்த ஒப்பந்தப்புள்ளி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்ட நிலையில், இப்போது மீண்டும் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்தப்புள்ளி படிவங்களை வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழித்தனர். இப்போதோ மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கின்றனர். ஒப்பந்தப்புள்ளி தள்ளி வைக்கப்பட்டதற்கான உண்மையான காரணத்தையும் அவர்கள் தெரிவிக்க மறுக்கின்றனர். ஆளுங்கட்சியினரின் அழுத்தம் காரணமாகவே அதிகாரிகள் இதுபோன்று முறையற்று செயல்படுகின்றனர். எனவே ஒப்பந்தப்புள்ளி ஒத்தி வைக்கப்பட்டதைக் கண்டித்து நாங்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.

    தகவலறிந்து அங்கு சென்ற வந்தவாசி தெற்கு போலீசார் சமரசம் செய்ததை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    • துர்நாற்றம் வீசியது.
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் ஒன்றியம் கடலாடி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மேல்சோழங்குப்பம் பூங்காவனத்தம்மன் கோவில் ஓடை பாலத்தின் கீழ் தண்ணீரில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் மிதந்து கிடந்தன.

    இது பற்றி தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் கடலாடி ேபாலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதன் போலீசார் நேற்று சம்பவ இடத்திற்கு வந்து கவுந்த நிலையில் உள்ள வாலிபரின் உடலை தூக்கிய போது உடல் முழுவதும் அழுகிய நிலையில் கிடந்தது. இறந்து சுமார் 4,5 நாட்கள் ஆகிய நிலையில் இருந்ததால் துர்நாற்றம் வீசியது. உடனே உடலை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

    மேலும் இறந்த நபர் பற்றி விசாரணை செய்ததில் அதே பகுதி டேங்க் தெருவை சேர்ந்த வடிவேல் (வயது 30) என்றும் கூலி தொழிலாளி எனவும் தெரியவந்தது.

    மேலும் இவருக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகின்றன இவருக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

    இறந்த நபர் கடந்த 23ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திருப்பவில்லை என்பது தெரிய வந்தன. மேலும் இறந்த நபர் எப்படி இறந்தார் தெரியவில்லை.

    முன்விரோதம் காரணமாக யாராவது அடித்து கொலை செய்து போட்டுவிட்டு உள்ளார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    • பூட்டை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த பெருங்கட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 33). இவர் மின்வாரியத்தில் வயர் மேனாக வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி சீதா (30). பிரபாகரனின் தாயார் கோடீஸ்வரி (55). இவர்கள் அனைவரும் கடந்த 24-ந் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே சென்று இருந்தனர். இதனை நோட்டமிட்ட மர்மகும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பீரோவில் இருந்த அரை பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

    இதுகுறித்து மோரணம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் ஏற்பட்ட மின் கசிவை சரிசெய்த போது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாற்று வென்றான் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 19). இவர் செய்யாறு டவுன் பகுதியில் உள்ள தனியார் ஐ.டி.ஐ.யில் வயர் மேன் எலக்ட்ரீசியன் படித்து வந்தார்.

    நேற்று மாலை இவரது வீட்டில் மின் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை சரி செய்வதற்காக விக்னேஷ் சுவிட்ச் போர்டில் கை வைத்துள்ளார்.

    அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதனைக் கண்ட உறவினர்கள் விக்னேசை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து விக்னேஷின் தாயார் கற்பகம் செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அறுந்து கிடந்த ஒயரை எடுத்ததால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    செய்யாறு அடுத்த உக்கல் கிராமம் குட்டை கரை தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 45) விவசாய கூலி தொழிலாளி. இவது மனைவி கவுரி. இவர்களுக்கு செல்வம், வெற்றிவேல் என்ற 2 மகள்கள் உள்ளனர்.

    சங்கர் நேற்று மாலை வீட்டின் முன்பு அறுந்து கிடந்த ஒயரை எடுத்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தது கிடந்தார். சங்கரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பரிசோதித்த டாக்டர்கள் சங்கர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இதுகுறித்து இவருடைய மனைவி கவுரி தூசி போலீஸ் நிலையத்தில் புகார் அளிதார். போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • நாதஸ்வர பயிற்சிக்கு சென்ற இடத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நாகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆரணி:

    திருவள்ளூர் மாவட்டம் அதிகந்தூர் அடுத்த கடப்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் நாகராஜ் (வயது16). இவர் ஆரணி அடுத்த எஸ்.வி.நகரத்தில் சண்முகம் என்பவர் வீட்டில் தங்கி நாதஸ்வர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

    பயிற்சியின்போது நாகராஜ் திருமணம், கச்சேரி ஆகிய நிகழ்ச்சிகளில் நாதஸ்வரம் வாசித்து இருக்கிறார். நாகராஜ் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    அந்தப் பெண்ணுடன் செல்போன் மூலம் பேசி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அப்பெண் இவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் நாகராஜ் மன உளைச்சலில் காணப்பட்டார்.

    நேற்று பயிற்சிகளை முடித்துவிட்டு மாலை வீட்டு மாடிக்கு சென்றார். அங்குள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த நாகராஜை மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து நாகராஜின் தந்தை கணேசன் ஆரணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நாகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாதஸ்வர பயிற்சிக்கு சென்ற இடத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×