என் மலர்
திருவண்ணாமலை
- பண்ணை வேலை செய்து வந்தார்
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை பெரும்பாக்கம் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் நேற்று மாலை ஆண் பிணம் ஒன்று மிதந்து உள்ளது.
இதைகண்ட அக்கம்பக்கத்தினர் இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கிணற்றில் மிதந்த பிணத்தை மீட்டு பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கிணற்றில் இறந்த நிலையில் மீட்கப்பட்டது, கீழ்பென்னாத்தூர் பகுதியை சேர்ந்த முருகன் (வயது38) என்பது போலீசாருக்கு தெரியவந்தது.
மேலும் இறந்த நபர் அந்த பகுதியில் உள்ள ஒருவரின் தோட்டத்தில் பண்ணை வேலை செய்து வந்து உள்ளார். முருகன் கடந்த 27-ந் தேதி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீட்டிற்கு செல்ல வில்லை என்பதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜிஎஸ்டி வரியை கண்டித்து நடந்தது
- பழைய பஸ் நிலையத்திலிருந்து தேரடி வரை ஊர்வலம் சென்றனர்
வந்தவாசி:
மத்திய அரசைக் கண்டித்து வந்தவாசி, செய்யாறு, பெரணமல்லூர் வட்டார மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வந்தவாசி தேரடியில் உள்ள அஞ்சல் அலுவலகம் முன் நடைபெற்றது.
அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் மீது 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்த மத்திய அரசைக் கண்டித்தும், வரி விதிப்பை திரும்பக் கோரியும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வந்தவாசி வட்டாரச் செயலர் அ.அப்துல்காதர் தலைமை வகித்தார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ப.செல்வன், ந.சேகரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜா.வே.சிவராமன், எம்.மாரிமுத்து, எஸ்.முரளி ஆகியோர் பேசினார்.
முன்னதாக வந்தவாசி பழைய பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்ட ஆர்ப்பாட்டத்தினர் பஜார்வீதி வழியாக தேரடி சென்றடைந்தனர்.
- ஒருவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் அதிரடி நடவடிக்கை
- 20 கிலோ சிக்கியது
வந்தவாசி:
வந்தவாசி காதர்ஜண்டா தெருவில் உள்ள சிக்கன் பக்கோடா கடை ஒன்றில் சிக்கன் பக்கோடா வாங்கி சாப்பிட்ட மருத்துவர் ஒருவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, வந்தவாசி வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்தன் தலைமையிலான சுகாதாரத்துறையினர் அந்த தெருவில் உள்ள கோழி இறைச்சி விற்பனை மற்றும் சிக்கன் பக்கோடா கடைகளில் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
இதில் தனியார் மருத்துவமனை எதிரில் உள்ள சிக்கன் பக்கோடா கடை ஒன்றில் ப்ரீஸர் பாக்ஸில் சுமார் 20 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த கெட்டுப்போன கோழி இறைச்சியை சுகாதாரத்துறையினர் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.
- ஒருவர் கைது
- போலீசார் விசாரணை
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் அருகே உள்ள சிங்கம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 47) இவர் கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கன்னியம்மாள், இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள், உள்ளனர்.அதே கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா, (45).
வெங்கடேசன், ராஜா, இருவருமே கட்டிட தொழிலாளிகள், சக தொழிலாளியான இவர்களுக்கு ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது.கடந்த 27ஆம் தேதி இரவு வெங்கடேசன் சிங்கமுண்டி அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது மறைந்திருந்த ராஜா, கல்லால் வெங்கடேசனை, தலையில் தாக்கி உள்ளார்.இதில் பலத்த காயம் அடைந்த வெங்கடேசனை, அக்கம்பக்கம் உள்ளவர்கள் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன், ாரிதபமாக இறந்தார். இது குறித்து தேசூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.
- 108 பக்தர்கள் பால்குடம் சுமந்துகொண்டு ஊர்வலமாக வந்தனர்
- ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் செவரப்பூண்டி புதுபூண்டிதாங்கல் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சர்வ சக்தி அங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசை மற்றும் ஆடி வெள்ளிகிழமை முன்னிட்டு யாகபூஜை மற்றும் பால்குடம் ஏந்துதல் விழா நடந்தது.
ஆதிகான் புறவடை மாரியம்மன் கோவிலில் இருந்து 108 பக்தர்கள் பால்குடம் தலையில் சுமந்துகொண்டு மேளதாளத்துடன் ஊர்வலமாக அங்காளம்மன் கோயிலுக்கு வந்து அங்காளம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
41 - அடி உயரமுள்ள காளியம்மன் கோவிலில், உலக மக்கள் நன்மை பெற வேண்டி ஆலய நிர்வாகி சங்கர்சாமிகள் முன்னிலையில், மிளகாய் யாகபூஜை நடந்தது.
நிகழ்ச்சியில், நீலந்தாங்கல் ஒன்றியக்குழு உறுப்பினர் அனுராதா சுகுமார் ஏற்பாட்டின் பேரில், பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. செவரப்பூண்டி, கீக்களூர், ஆதிகான் புறவடை, மேக்களூர், அவலூர்பேட்டை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.
- 4 பேர் கைது
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடி அண்ணாமலை வேடியப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவரது மனைவி அலமேலு (வயது 29). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.
நேற்று முன்தினம் மதியம் கணவன், மனைவி இருவரும் வீட் டில் இருந்த போது வீட்டிற்கு வந்த வட மாநிலத்தவர்கள் 4 பேர் குறைந்த விலையில் நகைகளுக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறினர்.
இதனை நம்பி அலமேலு வீட்டில் இருந்த 3 வெள்ளி கொலு சுகளை பாலீஷ் போட கொடுத்துள்ளார். அந்த சமயத்தில் அவர்களில் ஒருவர் குடிக்க தண்ணீர் கேட்டார். தண்ணீர் எடுக்க அலமேலு வீட்டிற்குள் சென்றார்.
பின்னர் அவர் வெளியே வந்து பார்த்தபோது 4 பேரும் வெள்ளி கொலுசு களை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதை யடுத்து அவர் தனது கணவர் மற்றும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தப்பியோடிய 4 பேரையும் பிடித்து திருவண்ணா மலை தாலுகா போலீசில் ஒப்படைத்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த சஞ்சீவ்குமார் (23), கோனுகுமார் (21), அமீத்குமார் (20), நீரஜ்குமார் (25) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த வெள்ளி கொலுசுகளை பறிமுதல் செய்தனர்.
- சேத்துப்பட்டு கோட்டுப்பாக்கம் கோவிலில் ஆடி அமாவாசை விழாவையொட்டி நடந்தது
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கோட்டுப்பாக்கம், கிராமத்தில் உள்ள மகான் பரதேசி ஆறுமுகசாமி 186ம்ஆண்டு குரு பூஜை விழா, மற்றும் ஆடி அமாவாசை விழா, நடந்தது.கடந்த 26-ஆம் தேதி சன்மார்க்கக் கொடி, ஏற்றி ஊரணி பொங்கல், வைத்து விழா தொடங்கியது.
இதைத் தொடர்ந்து 27ஆம் தேதி அம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.முக்கிய விழாவான நேற்று மகன்பரதேசி ஆறுமுகசாமி குருபூஜை விழா, மற்றும் ஆடி அமாவாசை விழா, நடந்தது.
காலையில் மகான் பரதேசி ஆறுமுக சாமி ஜீவசமாதிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு குருபூஜைக, செய்தனர்.
பின்னர் கோவில் வளாகத்தில் பெரிய பந்தலமைத்து, யாக குண்டம், அமைத்து குழந்தை வரம் வேண்டி சுமங்கலி பெண்கள் விரதம் இருந்து யாகத்தில் கலந்து கொண்டனர்.
மண் சோறு சாப்பிட்டனர்
இஞ்சிமேடு பெரிய மலை திருமணி சேறை உடையார் சிவன் கோவில் சித்தர் பெருமாள், சாமிகள் தலைமையில் சித்தர்கள், சாதுக்கள், குழந்தை வரம் வேண்டி வந்த 1000 சுமங்கலி பெண்களுக்ககு பிரசாதம், வழங்கினார்.
அன்னத்தைப் பெற்றுக் கொண்ட சுமங்கலி பெண்கள் மகான் பரதேசி ஆறுமுகசாயை தரிசனம் செய்துவிட்டு.
கோவில் வளாகத்தில் உள்ள குளத்தில் உள்ள படிக்கட்டுகளில் பிரசாதத்தை, வைத்து குழந்தை வரம் வேண்டி, கைகளை பின்புறமாக கட்டிக்கொண்டு வாயால் மண்சோறு சாப்பிட்டனர்.
அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக நேர்த்திக்கடனாக குழந்தை பாக்கியம் பெற்ற சுமங்கலி பெண்கள், ஆண்கள், பெரியவர்கள், பால் காவடி, பன்னீர் காவடி, ஆகிய காவடிகள் பக்தர்கள் நேர்த்திக்கடனாக கோவிலுக்கு எடுத்து வந்தனர்.இதில் சென்னை, திருச்சி, திருவண்ணாமலை ஆரணி, வந்தவாசி, செங்கம், போளூர், சேத்துப்பட்டு உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர.
விழா ஏற்பாடுகளை ஊர் பெரியவர்கள், இளைஞர்கள், விழா குழுவினர், ஆகியோர் செய்து இருந்தனர்.
இரவு அம்மன் வீதி உலா, மற்றும் நாடகம், ஆகியவை நடந்தது.
- கலெக்டர் முருகேஷ் உத்தரவு
- திட்ட பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
திருவண்ணாமலை:
புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 37 கிராம ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.
நீர் நிலை ஆக்கிரமிப்பு
இதில் பல்வேறு அரசு துறை அலுவலர்களும் புதுப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட 37 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் பேசியதாவது :-
பிரதம மந்திரி வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு 2016-17 முதல் 2021-22 வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்த வீடுகள் எண்ணிக்கை 2462 இதற்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.59.08 கோடி ஆகும். பயனாளிகளால் முடிக்கப்பட்ட வீடுகள் எண்ணிக்கை 1082 இதற்கான மொத்த தொகை ரூ.25.96 கோடி சம்மந்தப்பட்ட பயனாளிகள் வங்கி கணக்கில் ஈடு செய்யப்பட்டது.
அகற்ற உத்தரவு
தற்போது கட்டப்பட்டு வரும் வீடுகள் மற்றும் நிலுவையில் உள்ள வீடுகளின் எண்ணிக்கை 1375 இதற்கான தொகை ரூ.33.00 கோடி ஆகும். மேலும், 2020-21 ஆம் ஆண்டு பசுமை வீடு திட்டத்தின் கீழ் மொத்த வீடுகள் 62, மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.1.63 கோடி ஆகும். பயனாளிகளால் முடிக்கப்பட்ட வீடுகள் 46, இதற்கான மொத்த தொகை ரூ.1.16 கோடி சம்மந்தப்பட்ட பயனாளிகள் வங்கி கணக்கில் ஈடு செய்யப்பட்டது. நிலுவையில் உள்ள வீடுகள் 16 ஆகும்.
இதற்கான மதிப்பீட்டு தொகை ரூ.47.10 லட்சம் ஆகும். நிலுவையில் உள்ள வீடுகளை விரைந்து கட்டி முடிக்கவும் கட்ட இயலாத பயனாளிகளை கண்டறிந்து ஊராட்சி மன்ற தலைவர் மூலமாகவும் அல்லது ஒப்பந்ததாரர்கள் மூலமாகவும் கட்டி முடிக்க அறிவுறுத்தினார்.
மேலும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றுதல், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் திட்டம், ஜல் ஜீவன் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், குடிசை வீடு கணக்கெடுப்பு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், 14 - வது மற்றும் 15 - வது நிதிக்குழு மான்ய திட்டப்பணிகள், தூய்மை பாரத இயக்கம் (கிராமின்) திட்டத்தின் கீழ் தனிநபர் இல்லக்கழிப்பறைகள், பொது சுகாதார வளாகம் அமைத்தல் ஆகிய திட்டப்பணிகளை விரைந்து முடித்திடுமாறு அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் (ஊ.வ) ராமகிருஷ்ணன் உதவி இயக்குநர் (ஊராட்சி) சரண்யாதேவி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- குடும்ப பிரச்சினை காரணமா ?
- போலீசார் விசாரணை
சேத்துப்பட்டு :
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு, அருந்ததி பாளையத்தை சேர்ந்தவர். பாரதி, கார் டிரைவர் இவரது மனைவி பவித்ரா (வயது 23), இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது.
பவித்ரா, சேத்துப்பட்டு அருகே உள்ள மேல்வில்லிவனம், கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று இருந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக பவித்ரா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் உள்ள ஒரு அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கினார்.
அவரை மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பவித்ராவை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியில் இறந்து விட்டதாக கூறினார்.
இது குறித்து தகவல் அறிந்த சேத்துப்பட்டு போலீசார் உடலை கைபற்றி திருவண்ணாமலை, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நகராட்சி நிர்வாக துறை அமைச்சருக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கடிதம்
- பக்தர்கள் கோரிக்கையை ஏற்று செயல்படுத்த அறிவுறுத்தல்
திருவண்ணாமலை :
திருவண்ணாமலை நகராட்சியால் பராமரிக்கப்படும் கட்டண கழிப்பிடங்கள் இலவச கழிப்பிடங்களாக மாற்றம் செய்ய வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நகராட்சி நிர்வாக துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:- திருவண்ணாமலை நகரம் கோவில் நகரமாக இருப்பதாலும், பவுர்ணமி மற்றும் சித்ரா பவுர்ணமி நாட்களில் சுமார் 8 லட்சம் முதல் 10 லட்சம் வரை ஆன்மீக பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
மேலும் வெளி மாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டினர் அதிகளவில் வருகை தருகின்றனர். எனவே பொது மக்களின் அடிப்படை தேவையான கழிப்பறை வசதியினை நகராட்சியின் அனைத்து கழிப்பிடங்களையும் பொதுமக்கள் முற்றிலும் இலவசமாக பயன்படுத்தி கொள்ள வழிவகை செய்யப்பட வேண்டியது அவசியமாகிறது.
எனவே திருவண்ணாமலை நகராட்சியால் பராமரிக்கப்படும் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலைய உட்புறத்தில் உள்ள நவீன கட்டண கழிப்பறை, ஜோதி மார்க்கெட் நவீன கட்டண கழிப்பறை, ஈசான்யம் பகுதியில் உள்ள கட்டண கழிப்பறைகள் என 15 இடங்களில் உள்ள கழிப்பிடங்களை அப்பகுதி தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் நல்ல முறையில் சுகாதாரமாக பராமரிப்பு செய்வது குறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தலைமையில் உரிய முடிவு எடுக்க கேட்டு கொள்கிறேன்.
எனவே திருவண்ணாமலை நகராட்சியில் 15 இடங்களில் உள்ள கட்டண கழிப்பிடங்களை இலவச கழிப்பிடங்களாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- கலெக்டர் எச்சரிக்கை
- கவுன்சிலிங் கொடுக்கவும் அறிவுறுத்தல்
திருவண்ணாமலை:
அனுமதியின்றி பள்ளிகளில் விடுதி நடத்தினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் தங்குமிடத்துடன் கூடிய அரசு, தனியார் பள்ளி மற்றும் உண்டு உறைவிட பள்ளியின் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மாணவர்களின் மனநலம் மற்றும் நல்வாழ்வை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. தற்போது பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்குவதற்கு ஏதுவாக மாவட்ட சமூக நல அலுவலர்கள் மூலம் உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மாணவர்கள் தங்கும் அரசு பள்ளி, கல்லூரி விடுதிகள், உண்டு உறைவிட பள்ளி விடுதிகள் 41, அரசு நிதியுதவி பெறும் பள்ளி விடுதிகள் 18, தனியார் பள்ளி விடுதிகள் 12 என மொத்தம் 71 பள்ளி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் சாதாரண கதவுகள் தான் அமைக்க வேண்டும். மாடிப்பகுதியில் பாதுகாப்பான தடுப்பு சுவர்கள் போதிய உயரத்திற்கு ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆபத்தான கட்டிடங்கள் அல்லது கட்டிடப்பகுதிகள் இருப்பின் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பள்ளி விடுதிகளில் தீயணைக்கும் கருவிகளை அவசர உபயோகத்திற்கு உதவும் வகையில் பொருத்தமான இடத்தில் வைத்திருக்க வேண்டும்.
சட்டப்படி கடும் நடவடிக்கை
அதுமட்டுமின்றி 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்கள் மனநல பாதிப்பு, மனசோர்வு, படிப்பில் ஆர்வமின்மை ஆகியவைகளை கண்டறிந்து அவ்வாறு இருப்பின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உளவியலாளர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களின் மனச்சோர்வை போக்குவதற்கு உறுதுணையாக இருந்திட வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் ஏதேனும் மாற்றங்களை கண்டறிந்தால் அவற்றை புறக்கணிக்காமல் அவர்களுடன் கலந்துரையாடல் வேண்டும். நல்ல உணவு, நல்ல உடை இவற்றுடன் நல்ல மனநலத்தை வளர்க்க பாடுபட வேண்டும் என ஆசிரியர்கள் பெற்றோர்களிடத்தில் எடுத்துரைக்க வேண்டும். அதுமட்டுமின்றி தேர்வுகளில் தோல்வி அடைந்த குழந்தைகளை எக்காரணத்தை கொண்டு அடிக்கவோ, திட்டவோ, துன்புறத்தவோ கூடாது. அவ்வகையான பிரச்சனைகளை ஆக்கப்பூர்வமாக கையாண்டு குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்திடல் வேண்டும். இது சம்மந்தமாக ஏதேனும் பிரச்சனைகள், ஆலோசனைகள் தேவைப்படுமாயின் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய 104 என்ற இலவச தொலைபேசியை தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம். மேலும் சில தனியார் பள்ளிகளில் அனுமதியில்லாமல் விடுதிகள் நடத்துவது கண்டறியப்பட்டு உள்ளது. அனுமதியில்லாமல் விடுதிகள் நடத்துவது சட்டப்படி குற்றம். பள்ளி விடுதிக்கு முறையாக விண்ணப்பித்து அரசு அனுமதி பெற்ற பின்னரே மாணவர்களை சேர்த்து விடுதியை செயல்படுத்த வேண்டும். அனுமதியின்றி பள்ளிகளில் விடுதி நடத்தினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சைல்டு லைன் உதவி எண்
தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பேசியதாவது:- கள்ளக்குறிச்சி, திருவள்ளூரில் ஏற்பட்ட பிரச்சனை அனைவருக்கும் தெரியும். பள்ளி மாணவர்கள் பெற்றோர்களை விட ஆசிரியர்கள் தான் அதிக நேரம் கூட இருக்கும் சூழ்நிலை உள்ளது. ஆசிரியர்களுக்கு பாடம் சொல்லி கொடுப்பது மட்டும் வேலையில்லை. மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக ஏதேனும் பிரச்சனை உள்ளதா, பள்ளியில் சக மாணவர்களுடன் அவர்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றனர், அவர்களது மன நிலை எப்படி உள்ளது போன்றவற்றையும் ஆசிரியர்கள் அறிந்து கொள்ள வேண்டும். 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களித்தில் உளவியல் ரீதியான பிரச்சனைகள் இருக்கும். அவர்களை ஆசிரியர்கள் நன்கு கண்காணிக்க வேண்டும். மன உறுதி குறைவாக காணப்படும் குழந்தைகளுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். சைல்டு லைன் இலவச உதவி எண் குறித்து பள்ளிகளில் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விடுதிகளில் குழந்தைகளுக்கு கொடுக்கும் சாப்பாட்டில் முழு கவனம் செலுத்த வேண்டும். பெண் குழந்தைகள் தங்கி இருக்கும் இடத்தை தவிர பள்ளி மற்றும் விடுதிகளில் கண்டிப்பாக சி.சி.டி.வி. கேமிரா பொருத்த வேண்டும். பள்ளி மற்றும் விடுதிகளில் புகார் பெட்டி வைக்க வேண்டும். பள்ளி மற்றும் விடுதிகளில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் அந்த சம்பவம் குறித்து 12 மணி நேரத்திற்குள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு விவரத்துடன் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
மாணவர்களுக்கு கவுன்சிலிங்...
சமீபத்தில் திருவண்ணாமலை ஒரு அரசு பள்ளியில் இருதரப்பை சோ்ந்த மாணவர்கள் தகராறில் ஈடுபட்டனர். பள்ளிகளில் இதுபோன்ற பிரச்சனைகள் இருப்பது கண்டறிந்தால் ஆசிரியர்கள் முன்கூட்டியே போலீசாரின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். குட்கா பொருட்களை மாணவர்கள் யாரேனும் பயன்படுத்துவது தெரியவந்தால் அவர்களை உடனடியாக கண்டித்து, கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். மேலும் போலீசாரிடம் தகவல் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட பள்ளியை சுற்றியுள்ள பகுதியில் சோதனை நடத்தி அவற்றை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் விடுதிக்கான சட்ட விதி 2014-ஐ கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். சட்ட விதிகளை பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சண்முகசுந்தரம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் குமரன், மாவட்ட சமூக நல அலுவலர் மீனாம்பிகை மற்றும் துறை அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- பெண்கள் பால்குடம் ஊர்வலம்
- ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் இன்று ஆடி திருவிழா முன்னிட்டு 501 பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மாம்பட்டு கிராமத்தில் உள்ள குளக்கரையில் இருந்து பால் குடங்களை பெண்கள் தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக சென்று ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு பக்தர்களின் கைகளால் பாலபிஷேகம் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஸ்ரீ முத்துமாரியம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் மங்கள மேள வாதியுங்கள் முழங்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்த பால்குட ஊர்வல நிகழ்ச்சியில் வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் தரிசனம் செய்து சென்றனர்.






