என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காளியம்மன் கோவிலில் பாலாபிஷேக விழா
    X

    காளியம்மன் கோவிலில் பாலாபிஷேக விழா

    • 108 பக்தர்கள் பால்குடம் சுமந்துகொண்டு ஊர்வலமாக வந்தனர்
    • ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் செவரப்பூண்டி புதுபூண்டிதாங்கல் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சர்வ சக்தி அங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசை மற்றும் ஆடி வெள்ளிகிழமை முன்னிட்டு யாகபூஜை மற்றும் பால்குடம் ஏந்துதல் விழா நடந்தது.

    ஆதிகான் புறவடை மாரியம்மன் கோவிலில் இருந்து 108 பக்தர்கள் பால்குடம் தலையில் சுமந்துகொண்டு மேளதாளத்துடன் ஊர்வலமாக அங்காளம்மன் கோயிலுக்கு வந்து அங்காளம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

    41 - அடி உயரமுள்ள காளியம்மன் கோவிலில், உலக மக்கள் நன்மை பெற வேண்டி ஆலய நிர்வாகி சங்கர்சாமிகள் முன்னிலையில், மிளகாய் யாகபூஜை நடந்தது.

    நிகழ்ச்சியில், நீலந்தாங்கல் ஒன்றியக்குழு உறுப்பினர் அனுராதா சுகுமார் ஏற்பாட்டின் பேரில், பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. செவரப்பூண்டி, கீக்களூர், ஆதிகான் புறவடை, மேக்களூர், அவலூர்பேட்டை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×