search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Communist Demonstration"

    • அரியாங்குப்பம் தொகுதி இந்திய கம்யூனிஸ்டு சார்பாக மின்துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி செயலாளர் சுகதேவ் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் தொகுதி இந்திய கம்யூனிஸ்டு சார்பாக மின்துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி செயலாளர் சுகதேவ் தலைமை தாங்கினார். துணை செயலாளர் சிவராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை மாநில குழு உறுப்பினர் கீதநாதன் தொடங்கி வைத்தார்.

    ஆர்ப்பாட்டத்தில், நிர்வாகிகள் அபிஷேகம், சக்திவேல், சுப்பிரமணி, ஆறுமுகம், ஜீவா, செல்வராஜ், ஏழுமலை, இந்திரஜித், கண்ணன், கலா, லூர்து மேரி, முருகையன், அலமேலு, அம்சா, கவுரி, ஆண்டாள், ரமணி, பத்மாவதி, சாந்தி மற்றும் இளைஞர் பெருமன்றத்தின் தினேஷ், பிரேம், பிரகாஷ், துளசி, பிரசன்னா, அதோனீஸ், கார்த்தி கலந்து கொண்டனர்.

    அரியாங்குப்பம் முருங்கப்பாக்கம் பாலத்தில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது மின் கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி அடித்து மரணம் அடைந்த தொழிலாளி மணியின் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

    மின் துறை வெயில் காலங்களில் எர்த் மற்றும் மின்சாரம் கசிவதை சரி செய்யும் பணியில் ஈடுபடாமல் அலட்சியம் படுத்துவதை கண்டித்து

    இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    • ஜிஎஸ்டி வரியை கண்டித்து நடந்தது
    • பழைய பஸ் நிலையத்திலிருந்து தேரடி வரை ஊர்வலம் சென்றனர்

    வந்தவாசி:

    மத்திய அரசைக் கண்டித்து வந்தவாசி, செய்யாறு, பெரணமல்லூர் வட்டார மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வந்தவாசி தேரடியில் உள்ள அஞ்சல் அலுவலகம் முன் நடைபெற்றது.

    அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் மீது 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்த மத்திய அரசைக் கண்டித்தும், வரி விதிப்பை திரும்பக் கோரியும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வந்தவாசி வட்டாரச் செயலர் அ.அப்துல்காதர் தலைமை வகித்தார்.

    மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ப.செல்வன், ந.சேகரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜா.வே.சிவராமன், எம்.மாரிமுத்து, எஸ்.முரளி ஆகியோர் பேசினார்.

    முன்னதாக வந்தவாசி பழைய பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்ட ஆர்ப்பாட்டத்தினர் பஜார்வீதி வழியாக தேரடி சென்றடைந்தனர்.

    ×