என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோட்டுப்பாக்கம் மகான் பரதேசி ஆறுமுகசாமி கோவில் குளத்தில் குழந்தை வரம் வேண்டி பெண்கள் மண் சோறு சாப்பிட்ட போது எடுத்த படம்.
குழந்தை வரம் வேண்டி மண் சோறு சாப்பிட்ட பெண்கள்
- சேத்துப்பட்டு கோட்டுப்பாக்கம் கோவிலில் ஆடி அமாவாசை விழாவையொட்டி நடந்தது
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கோட்டுப்பாக்கம், கிராமத்தில் உள்ள மகான் பரதேசி ஆறுமுகசாமி 186ம்ஆண்டு குரு பூஜை விழா, மற்றும் ஆடி அமாவாசை விழா, நடந்தது.கடந்த 26-ஆம் தேதி சன்மார்க்கக் கொடி, ஏற்றி ஊரணி பொங்கல், வைத்து விழா தொடங்கியது.
இதைத் தொடர்ந்து 27ஆம் தேதி அம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.முக்கிய விழாவான நேற்று மகன்பரதேசி ஆறுமுகசாமி குருபூஜை விழா, மற்றும் ஆடி அமாவாசை விழா, நடந்தது.
காலையில் மகான் பரதேசி ஆறுமுக சாமி ஜீவசமாதிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு குருபூஜைக, செய்தனர்.
பின்னர் கோவில் வளாகத்தில் பெரிய பந்தலமைத்து, யாக குண்டம், அமைத்து குழந்தை வரம் வேண்டி சுமங்கலி பெண்கள் விரதம் இருந்து யாகத்தில் கலந்து கொண்டனர்.
மண் சோறு சாப்பிட்டனர்
இஞ்சிமேடு பெரிய மலை திருமணி சேறை உடையார் சிவன் கோவில் சித்தர் பெருமாள், சாமிகள் தலைமையில் சித்தர்கள், சாதுக்கள், குழந்தை வரம் வேண்டி வந்த 1000 சுமங்கலி பெண்களுக்ககு பிரசாதம், வழங்கினார்.
அன்னத்தைப் பெற்றுக் கொண்ட சுமங்கலி பெண்கள் மகான் பரதேசி ஆறுமுகசாயை தரிசனம் செய்துவிட்டு.
கோவில் வளாகத்தில் உள்ள குளத்தில் உள்ள படிக்கட்டுகளில் பிரசாதத்தை, வைத்து குழந்தை வரம் வேண்டி, கைகளை பின்புறமாக கட்டிக்கொண்டு வாயால் மண்சோறு சாப்பிட்டனர்.
அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக நேர்த்திக்கடனாக குழந்தை பாக்கியம் பெற்ற சுமங்கலி பெண்கள், ஆண்கள், பெரியவர்கள், பால் காவடி, பன்னீர் காவடி, ஆகிய காவடிகள் பக்தர்கள் நேர்த்திக்கடனாக கோவிலுக்கு எடுத்து வந்தனர்.இதில் சென்னை, திருச்சி, திருவண்ணாமலை ஆரணி, வந்தவாசி, செங்கம், போளூர், சேத்துப்பட்டு உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர.
விழா ஏற்பாடுகளை ஊர் பெரியவர்கள், இளைஞர்கள், விழா குழுவினர், ஆகியோர் செய்து இருந்தனர்.
இரவு அம்மன் வீதி உலா, மற்றும் நாடகம், ஆகியவை நடந்தது.