என் மலர்
நீங்கள் தேடியது "Assistant Director surprise inspection"
- ரூ.25.50 லட்சம் மதிப்பிட்டில் பணிகள் நடந்து வருகிறது
- சாலைகளை நேரில் பார்வையிட்டார்
வேட்டவலம்:
வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜீஜாபாய் நேற்று வேட்டவலம் பேரூராட்சியில் உள்ள வீடு, கடைகள் மற்றும் திருமண மண்டபங்களை அளவீடு செய்து, சொத்து வரி, சீராய்வு பணிகளை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பேரூராட்சிக்குட்பட்ட எள்ளுபிள்ளையார் குளம்,சமுத்திரம் எரி ஆகிய இடங்களில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.25.50 லட்சம் மதீப்பிட்டில் நடைபெறும் நீர்நிலை மேம்பாட்டுப் பணிகள் மற்றும் கீழ்பெ ன்னாத்தூர் எம்.எல்.ஏ தொகுதி நிதியின் மூலம் ரூ.20 லட்சம் மதீப்பீட்டில் நட ந்து முடிந்த புதிய மினிடேங்குகள், சிமெண்ட் சாலைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது செயல் அலுவலர் சுகந்தி, பேரூராட்சி மன்ற தலைவர் கவுரி,முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் முருகையன்,துணை தலைவர் ஜெயலட்சுமி, இளநிலை பொறியாளர் பழனிசாமி,பேரூராட்சி மன்ற உ றுப்பினர்கள் மணி, அன்சர் அலி,சங்கர்,முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் காந்தி, இளநிலை உதவியாளர் பன்னீர்செல்வம்,கணினி இயக்குநர் வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.






