என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பவுர்ணமி அன்று கிரிவலம் வருவது சிறப்பானது.
    • திருவண்ணாமலை மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வார்கள்.

    திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வார்கள்.

    மாதந்தோறும் வரும் பவுர்ணமி மட்டுமின்றி முக்கிய விசேஷ நாட்களிலும் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை (வியாழக்கிழமை) காலை 10.16 மணிக்கு தொடங்கி மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு நிறைவடைகிறது.

    பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்வதற்காக முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • ஏராளானோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    செய்யாறு அருகே வெம்பாக்கம் ஒன்றியம், அழிவிடைதாங்கி மதுரா பெருமாள்பேட்டை கிராமத்தில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.46.27 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கப்பட்டிருந்தது.

    இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமை தாங்கினார்.

    வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர் டி.ராஜி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி தார் சாலையை திறந்து வைத்து மக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் ஞானவேலு, மா. கி. வெங்கடேசன், மோ. ரவி, ராம் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.93 லட்சம் நிதி ஒதுக்கீடு
    • ஆரணி சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தில் ஏகாம்ப ரேஸ்வரர் கோவிலுக்கு மூன்று நிலை ராஜகோபுரம் கட்ட ரூ.93 லட்சம் அப்போதைய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த சேவூர் ராமச்சந்திரன், இந்து சமய அறநிலையத்துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்து தந்துள்ளார்.

    தற்போது ராஜகோபுரம் கட்டும் பணி கோவிலில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அவருடன் ஒன்றிய செயலாளர்கள் திருமால், இ.ஜெயப்பிரகாஷ், ஆரணி நகர செயலாளர் அசோக்குமார், கண்ணமங்கலம் நகர செயலாளர் பாண்டியன், கொளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணிஆனந்தன், துணை தலைவர் சாலம்மாள், வழக்கறிஞர் வெங்கடேசன், அசோக்குமார், வேலப்பாடி சரவணன், வினோத் உள்பட பலர் உடன் வந்திருந்தனர். மேலும் கோயில் விழாக்குழு தலைவர் சரவணன், முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.

    • நலத்திட்ட உதவிகள் வழங்கினர்
    • நெசவாளர்கள் கலந்து கொண்டனர்

    கண்ணமங்கலம்::

    கண்ணமங்கலம் அருகே உள்ள அத்திமலைப்பட்டு அறிஞர் அண்ணா கைத்தறி பட்டு நெசவாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கைத்தறி வார விழா சங்க தலைவர் சங்கரிபாலசந்தர் தலைமையில் நடைபெற்றது.

    இயக்குநர்கள் தண்டபாணி, முனியன், துணை தலைவர் பஞ்சாட்சரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மேலாளர் கணேசன் வரவேற்று பேசினார். இந்த விழாவில் மேலாண்மை இயக்குனர் சத்தியபாமா, உதவி இயக்குனர் இளங்கோவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, கைத்தறி நெசவு வேலை செய்து இச்சங்கத்தில் உறுப்பினர்காக உள்ள நெசவுத்தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

    இதில் கைத்தறி ஆய்வாளர் ஜெகதீசன் மற்றும் கைத்தறி நெசவாளர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மோகனா நன்றி கூறினார்.

    • 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
    • கலெக்டர் தலைமையில் நடந்தது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை ஜீவா வேலு பன்னாட்டு பள்ளி மாணவ மாணவிகள் திருவண்ணாமலை கலெக்டர் தலைமையில் நடைபெற்ற போதை மருந்து தடுப்பு விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு பேரணியாக சென்றனர். விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பள்ளியின் துணைத் தாளாளர் விஜிதா குமரன் முன்னிலை வகித்தார்.

    பள்ளியின் பதிவாளர் முனைவர் இர. சத்தியசீலன் தலைமை தாங்கினார். ஜீவா வேலு பன்னாட்டு பள்ளியின் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    முனைவர் கார்த்திகேயன் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

    • மின்சார சட்ட சீர்திருத்தத்தை கைவிடக்கோரி நடந்தது
    • அனைத்து தொழிற்சங்க ஊழியர்கள் பங்கேற்றனர்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் சைதாப்பேட்டையில் இயங்கி வரும் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலக வளாகம் எதிரில் மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யபடும் மின்சார சட்ட சீர்திருத்தம் 2022-ஐ கைவிட கோரி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மின்வாரிய தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    மின்சார வாரிய சட்டத்திருத்தம் மசோதா நிறைவேறி தனியார் மயமாக்கல் ஏற்பட்டால் விவசாயிகளுக்கு வழங்க கூடிய மின்சாரம் விசை தறி நெசவாளர்கள் பொதுமக்களுக்கு வழங்க கூடிய 100 யூனிட் மின்சாரம் அடியோடு ரத்து செய்து அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கபடுவார்கள் என்று இந்த தர்ணா பேராட்டத்தில் எடுத்துரைக்கபட்டது.

    மேலும் மின்சார வாரிய சட்ட சீர்திருத்தம் 2022-ஐ மத்திய அரசு கைவிட கோரி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

    மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கும் சட்டம் நிறைவேற்றபட்டால் நாடு தழுவிய போராட்டத்தில் மின்சார வாரிய தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள் என மின்சார வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர். இதில் சிஐடியூ உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தை சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் பங்கேற்றனர்.

    திருவண்ணாமலை மின் கோட்டம் கிழக்கு பகுதிகளில் உள்ள கீழ்பென்னாத்தூர் வடக்கு மற்றும்தெற்கு, சோமாசிபாடி, மேக்களூர் துணை மின்வாரிய அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து தொழிற்சங்கத்தினர்கள் ஒன்றிணைந்து, கீழ்பென்னாத்தூர் துணை மின்நிலையம் எதிரில் பணிபுறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    அனைத்து மின்துறை பொறியாளர்கள் தொழிற்சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் பணி புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

    • ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும்
    • அதிகாரி தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மண்டல இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு சங்கங்கள்- கூட்டுறவு வங்கிகளில் வேலை வாய்ப்புக்கு முக்கிய கல்வித்தகுதியான கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி (முழுநேரம்) வகுப்புக்கான சேர்க்கை விண்ணப்பம் பெறுவதற்கு 29.07.2022 முதல் 18.08.2022 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நேரில் விண்ணப்பக் கட்டணம் ரூ.100 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 22-ந்தேதி அன்று மாலை 5.30 மணிக்குள் இணைப்புகளுடன் மீள சமர்ப்பிக்கலாம்.

    மாணவ, மாணவிகள் கேர்க்கைக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி மேல்நிலைப்பள்ளி (+2) (10 + 2 முறையில்) தேர்ச்சி பெற்றவர்களும் மற்றும் +2 தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளும் (10 + 2 + 3) விண்ணப்பிக்கலாம்.

    பயிற்சியில் சேருவதற்கு 1-ந்தேதியன்று அன்று குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்குரிய இடஒதுக்கீடு வழங்கப்படும்.

    1 வருட காலத்தில் 2 பருவ முறையில் நடைபெறவிருக்கும் இப்பயிற்சியின் முடிவில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யக்கூடிய கூட்டுறவு மேலாண்மை பட்டய சான்றிதழ், கணினி பயிற்சி சான்றிதழ் மற்றும் நகை மதிப்பீடு சான்றிதழ் ஆகிய மூன்று சான்றிதழ்கள் வழங்கப்படும்.

    பயிற்சிக் கட்டணம்

    இப்பயிற்சியில் சேர பயிற்சிக்கட்டணம் ரூ.18,850 பூர்த்தி பட்ட விண்ணப்பங்களை திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையம், 204, திண்டிவனம் சாலை, கீழ்நாச்சிப்பட்டு அஞ்சல், திருவண்ணாமலை, தொலைபேசி எண். 04175 - 254793 என்ற முகவரிக்கு கூரியர்- பதிவு தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும் என தெரி வித்துகொள்ளப்படுகிறது.

    • 15 பவுன் நகை, ரூ.3 லட்சம் பையுடன் கிடந்தது
    • டிரைவரின் நேர்மையை பொதுமக்கள் பாராட்டினர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தாலுகா அத்திப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் திருவண்ணாமலை மண்டல போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட தேனிமலை பணிமனையில் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வருகின்றார்.

    இவர் நேற்று முன்தினம் திருவண்ணாமலையில் இருந்து சென்னை செல்லும் நடத்துனர் இல்லா பஸ்சை திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு காலை 8.15 மணியளவில் ஓட்டி சென்றார். மதியம் சுமார் 12.15 மணிக்கு சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு அந்த பஸ் சென்றது. பயணிகள் அனைவரும் இறங்கியவுடன் டிரைவர் தனது சீட்டின் பின்புறம் பெண் பயணி ஒருவரின் கை பை இருப்பதை கண்டார்.

    யாரோ பயணி தவறி விட்டுவிட்டு சென்றுவிட்டார் என்று எண்ணியவாறு அதை எடுத்த அவர் அதில் முகவரி ஏதேனும் இருக்கிறதா என பார்த்து உள்ளார்.

    அதில் விலை உயர்ந்த செல்போனும், நகை டப்பாவும் இருந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்து சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள நேர காப்பாளருக்கு அவர் தகவல் தெரிவித்தார். சுமார் 12.45 மணிக்கு பதட்டத்துடன் அழுதவாறு பெண் ஒருவர் கோயம்பேடு பஸ் நிலையத்தில் திருவண்ணாமலை பஸ்கள் நிற்கும் இடத்தில் இருந்த ஒவ்வொரு பஸ்சாக பார்த்துக் கொண்டே வந்தார்.

    இதை கவனித்த டிரைவர் சிவக்குமார் அந்த பெண் தனது பஸ்சில் வந்தவர் என்று அறிந்து அவரை அழைத்து விசாரித்தபோது பஸ்சில் பையை தவறவிட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து அவர் பஸ்சில் இருந்து எடுத்த பையை பயணியிடம் காண்பித்தார்.

    அதில் 15 பவுன் நகையும், ரூ.3 லட்சம் ரொக்கமும் செல்போனும் உள்ளது என அழுது கொண்டே கூறினார். அந்த பெண்ணை ஆசுவாசப்படுத்திய டிரைவர் சிவக்குமார் பஸ் நிலைய நேரக்காப்பாளர் முருகன் முன்னிலையில் அந்த பையை பெண் பயணியிடம் ஒப்படைத்தார்.

    அதை திறந்து பார்த்த அந்த பெண் பயணி அதில் பணம், நகை, செல்போன் அனைத்தும் பத்திரமாக உள்ளது என கூறி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். மேலும் திருவண்ணாமலையை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் சிவக்குமாரின் நேர்மை திருவண்ணாமலை மண்டல போக்குவரத்து கழகத்தினர் வாழ்த்தி, பாராட்டினர்.

    • அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் திரவுபதி அம்மன் கோவிலில் உலக மக்கள் நலம் பெற வேண்டியும், இயற்கை வளங்கள் பெறவும், மழைவளம் வேண்டியும் திருவிளக்கு பூஜை நடந்தது.

    காலையில் திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. மாலையில், உப்பு மற்றும் கலர் பவுடர்களால் ஸ்ரீகுபேர சக்கரம் வரையப்பட்டு, அதில் குத்து விளக்குவைத்தும், 450 பெண்கள் கலந்துகொண்ட திருவிளக்கு பூஜை நடந்தது.

    திருவண்ணாமலை ஜி.ஆர்.டி.தங்கமாளிகை மேலாளர் மூர்த்தி, சென்னை ஸ்டடி சென்டர் தமிழ்வேந்தன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றிவைத்து, விழாவை தொடங்கி வைத்தனர்.

    ஆரிய வைசிய சமாஜ சங்க துணை தலைவர் கே.என்.பாலசுப்பிரமணியன், சமூக ஆர்வலர் என்.ரமேஷ், ஏழுமலை, செல்வன், சண்முகம், காஞ்சிபுரம் சுந்தர், திருவண்ணாமலை சிவா, விழுப்புரம் அரவிந்தன், செய்யாறு ஜெயவேலு, செஞ்சி விஜயகுமார், கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் கவிதா ஏழுமலை, பாக்யராஜ், கே.பி.மணி, ஆதிபராசக்தி மன்ற செவ்வாடை தொண்டர்கள் பாலசுப்பிரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • போதை பழக்கத்தை ஒழிக்க வலியுறுத்தி நடத்தினர்
    • அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த தென்பள்ளிபட்டு பகுதியில் அமைந்துள்ள அரவிந்தர் வேளாண்மை தொழில் நுட்பக் கல்லூரியில் சமூகத்தை சீரழிக்கும் வகையில் இருக்கக்கூடிய மதுப்பழக்கம், கஞ்சா, புகையிலை, பான்மசாலா மற்றும் போதை ஊசி போன்றவற்றால் குடும்பத்திற்கும் மற்றும் மாணவ சமுதாயத்திற்கும் ஏற்படும் விளைவுகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலும் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    வேளாண்மை கல்லூரி மாணவ-மாணவிகள் பேரணியாக சென்று கலசபாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பேரணியை போளூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கல்லூரியின் முதல்வர் கிருஷ்ணவேணி மற்றும் பேராசிரியர், உதவிப் பேராசிரியர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்
    • விடுமுறை நாள் என்பதால் திரண்டனர்

    திருவண்ணாமலை:

    பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலாமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது.

    வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் பல்வேறு பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    நேற்று அதிகாலையில் இருந்து உள்ளூர் மட்டுமின்றி வௌி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    • குடிபோதையில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    வெம்பாக்கம் அடுத்த பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பன் (வயது 64), விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.

    கடந்த 24-ந் தேதி இரவு 7 மணி அளவில் குடிபோதையில் வீட்டில் தூக்கு மாட்டிக்கொண்டு அலறி துடித்தார். அலறல் சத்தம் கேட்டு அவரது மகன் குமார் எல்லப்பனை மீட்டு உடனடியாக காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    பின்னர்மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்த எல்லப்பன் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் இறந்தார்.

    இதுகுறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×