search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
    X

    அரவிந்தர் வேளாண்மை கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர் பேரணியை அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ தொடக்கி வைத்த போது எடுத்த படம்.

    மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

    • போதை பழக்கத்தை ஒழிக்க வலியுறுத்தி நடத்தினர்
    • அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த தென்பள்ளிபட்டு பகுதியில் அமைந்துள்ள அரவிந்தர் வேளாண்மை தொழில் நுட்பக் கல்லூரியில் சமூகத்தை சீரழிக்கும் வகையில் இருக்கக்கூடிய மதுப்பழக்கம், கஞ்சா, புகையிலை, பான்மசாலா மற்றும் போதை ஊசி போன்றவற்றால் குடும்பத்திற்கும் மற்றும் மாணவ சமுதாயத்திற்கும் ஏற்படும் விளைவுகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலும் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    வேளாண்மை கல்லூரி மாணவ-மாணவிகள் பேரணியாக சென்று கலசபாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பேரணியை போளூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கல்லூரியின் முதல்வர் கிருஷ்ணவேணி மற்றும் பேராசிரியர், உதவிப் பேராசிரியர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×