என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது.
    • 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு தமிழர் உழவர் பேரியக்கம் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

    இந்த ஆலையைச் சேர்ந்த கரும்பு விவசாயிகளுக்குச் சேர வேண்டிய சுமார் ரூ 32. கோடியை கடந்த 7 மாதங்களாக சர்க்கரை ஆலை நிர்வாகம் வழங்கப்படாமல் விவசாயிகளை அலை கழிப்பதைக் கண்டித்தும், 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் சர்க்கரை ஆலை முன்பு முற்றுகைப் போராட்டம் தமிழ் உழவர் பேரியக்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு பேரியக்க மாநில நிர்வாகிகள் முன்னாள் எம்.எல்.ஏக்கள் கணேஷ்குமர், வேலுச்சாமி ஆகியோர் தலைமைத் தாங்கினார்.

    வன்னியர் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முக்கூர் ராமஜெயம், தி.க காத்தவராயன், மாவட்ட தலைவர் சீனுவாசன், பேரியக்க மாவட்ட செயலாளர் மாம்பட்டு ரமேஷ், சு.மண்ணப்பன், பா. மச்சேந்திரன், கி. ஜெய்சங்கர், வாக்கடை புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு ஆலை நிர்வாகத்தை கண்டித்து கண்டன முழுக்கமிட்டனர்.

    இந்தப் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 500க்கும் மேற்ட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.

    ஆலை முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த தமிழ் நாடு உழவர் பேரியகத்தைச் சேர்ந்த மாவட்ட அமைப்பு தன் தலைவர் சக்திவேல், வெள்ளக்குளம் ஏழுமலை 7 பேர் அடங்கிய குழுவினர் ஆலையின் நிர்வாக மேலாளர் காமாட்சி முன்னிலையில் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    அப்போது நிர்வாக மேலாளர் ஆலைத் தரப்பில் அனைத்துப் பணப்பலன்கள் கிடைக்க ஏற்பாடு செய்யபட்டு உள்ளது. அரசு தரப்பில் இருந்து இன்னும் 15 தினங்களுக்குள் கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பணப் பலன்கள் கிடைக்கும் என்று உறுதியளித்தன் பேரில், உழவர் பேரியக்கத்தினர்.

    முற்றுகைப் பேராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் இப்பகுதியில் சுமார் 5 மணி நேரம் பரபரப்பாகக் காணபட்டது.

    • உறுதிமொழி ஏற்கப்பட்டது
    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. பங்கேற்பு

    செய்யாறு:

    செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் செய்யாறு மாவட்ட கல்வி அலுவலர் நளினி தலைமை தாங்கினார்.திருவத்திபுரம் நகரமன்ற தலைவர் ஆ.மோகனவேல், நகராட்சி ஆணையாளர் ரகுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ கலந்துகொண்டு போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழியை வாசிக்க செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் செய்யாறு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி பயிலும் 2500 மாணவ மாணவிகள் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.

    நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர் வழக்கறிஞர் விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் ஞானவேல், திராவிட முருகன், முன்னாள் நகர செயலாளர் சம்பத், சின்னதுரை, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.

    • போளூரில் உள்ள கோவில்களில் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்

    போளூர்:

    இன்று ஆவணி ஆவட்டம் பூணூல் அணியும் விழா பூணூல் அணியும் வழக்கம் உள்ளவர்கள் இன்று கோயில்களில் சிறப்பு பூஜை செய்து வீட்டிலும் பூஜை செய்து பூணூல் அணிந்து கொண்டனர்.

    போளூரில் உள்ள பெருமாள் கோயில், கைலாசநாதர்கோயில், பெரியகரம் மண்ட குளத்தூர், பெரணம்பாக்கம், அலியாளமங்கலம் போன்ற ஊர்களில் உள்ள சிவன் கோவில்கள் ஏராளமான பக்தர்கள் பூணூல் அணிந்து கொண்டனர்.

    அதேபோல் போளூர் உள்ள ந ற்குன்று ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில் இன்று மண்டல பூஜை நடைபெற்றது. பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆடி பவுர்ணமியையொட்டி வழிபாடு
    • சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாத பவுர்ணமி நாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    ஆடி மாத பவுர்ணமி இன்று காலை 10. 20 மணிக்கு தொடங்கி நாளை வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை உள்ளது. இதையொட்டி இன்று காலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர்.

    நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.

    பவுர்ணமியையொட்டி வேலூர், சென்னை, பெங்களூர், சேலம், விழுப்புரம், காஞ்சீபுரம் பகுதியில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    • பஸ் நிலையத்தில் பயணிகள் அமர நிழற்குடை
    • அடிப்படை வசதிகள் செய்துதர கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நகரமன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜாங்கம் முன்னிலை வைத்தார். நகராட்சி ஆணையாளர் முருகேசன் வரவேற்றார்.

    நகர சபை கூட்டம்

    கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு திருவண்ணாமலை நகருக்கு வருகை தரும் பயணிகள் மற்றும் பக்தர்களின் நலன் கருதி திருவண்ணாமலை நகரில் உள்ள 15 கழிப்பிடங்களை இலவச கழிப்பிடங்களாக மாற்றம் செய்திட நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அந்த 15 கட்டண கழிப்பிடங்களை வருகிற 1-ந் தேதி முதல் இலவச கழிப்பிடங்களாக மாற்றம் செய்வது.

    134 தீர்மானங்கள் நிறைவேற்றம்

    திருவண்ணாமலை நகராட்சி மத்திய பஸ் நிலையத்தில் சென்னை பஸ்கள் நிற்கும் இடத்தில் பயணிகள் அமர நிழற்குடை அமைத்தல் மற்றும் ஆவின் பாலகம் முன்பு கொண்டும் குழியுமாக இடத்தினை சமன்படுத்துவது, திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள அனைத்து தெரு விளக்குகளையும் பராமரிப்பதற்கு தேவையான அனைத்து மின்சாதன பொருட்கள் கொள்முதல் செய்வது,

    திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள முற்றிலும் பழுதடைந்த மினி பவர் பம்புகள் சரி செய்திட வாய்ப்பு இல்லாத காரணத்தினால் புதிய மோட்டார்கள் பொருத்துவது மட்டுமின்றி கால்வாய்கள் சீரமைத்தால் சாலை அமைத்தல் என்பன உள்ளிட்ட 134 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    முன்னதாக கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:-

    திருவண்ணாமலை திருமலை நகரில் தரமற்ற முறையில் கால்வாய் அமைத்ததால் அது சில நாட்களிலேயே இடிந்து விழுந்தது. எனவே சம்பந்தப்பட்ட ஒப்பந்ததார் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருவண்ணாமலை நகராட்சியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளுக்கு வெளி நபர்களுக்கு டெண்டர் வழங்குவதை விட நகராட்சி கவுன்சிலர்களில் தகுதியான நபர்களுக்கு டெண்டர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் திருவண்ணாமலை பேகோபுரம் பகுதியில் இருந்து பச்சையம்மன் கோவில் வழியாக ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

    அந்தப் பகுதியில் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது இதுகுறித்து ஆய்வு செய்து விரைந்து சாலை அமைத்து தர வேண்டும். திருவண்ணாமலை ஈசானிய லிங்கம் மற்றும் எமலிங்கம் அருகில் உள்ள எரிமேடை மோசமான நிலையில் உள்ளது அதனை உடனடியாக சீரமைத்து தர வேண்டும்.

    அங்கன் வாடி மையம்

    திருவண்ணாமலை 30 -வது வார்டில் ஒரு பகுதியில் புதிதாக சாலைகள் கால்வாய்கள் அமைத்து தரப்பட்டுள்ளது. மற்றொரு பகுதியில் போதிய அளவு சாலை, கால்வாய் வசதி இல்லாததால் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையினால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.

    எனவே இது குறித்து ஆய்வு செய்து சாலை கால்வாய் வசதி அமைத்து தர வேண்டும். 20-வது வார்டில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று பேசினர் கூட்டத்தில் நகராட்சி பொறியாளர்,

    உதவி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், அலுவலர்கள் மற்றும் கவுன்சிலர் என பலர் கலந்து கொண்டனர்.

    • 90 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு, தாலுகா தேவிகாபுரம் பிர்காவில் உள்ள பெரணம்பாக்கம், கிராமத்தில் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது.

    விழாவிற்கு சேத்துப்பட்டு ஒன்றிய குழு தலைவர் ராணி அர்ஜுனன் தலைமை தாங்கினார்.சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ், சமூக பாதுகாப்பு தாசில்தார் குமரவேல், வேளாண்மை உதவி இயக்குனர் நாராயணமூர்த்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் தேவிகாபுரம், பிர்கா வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், வரவேற்றார்.

    விழாவில் சிறப்பு அழைப்பாள ராகசெய்யாறு (சிப்காட்) தனித்துணை கலெக்டர் நாராயணன், கலந்து கொண்டார்.

    முகாமில் 90 பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகளை ஒன்றியகுழு தலைவர் ராணிஅர்ஜுணன், தனித்துணை கலெக்டர் நாராயணன், ஆகியோர் வழங்கி பேசினார்கள்.

    விழாவில் ஒன்றிய குழு துணை தலைவர் முருகையன், மாவட்ட அட்மா குழு உறுப்பினர் எழில்மாறன், வட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ்பாபு, மற்றும் வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் குமரேசன், நன்றி கூறினார்.

    • பெரிய அய்யம்பாளையம் கிராமத்தில் நடந்தது
    • கடன்கள் குறித்து விளக்கப்பட்டது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள பெரிய அய்யம்பாளையம் கிராமத்தில் நடுநிலைப்பள்ளியில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஒண்ணுபுரம் கிளை சார்பில் நிதிசார் கல்வி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமுக்கு ஒண்ணுபுரம் கிளை மேலாளர் பாரதி தலைமை தாங்கி, மத்திய கூட்டுறவு வங்கி மூலம் மகளிர் குழு கடன், நகை கடன், சிறுவணிக கடனுதவி உள்பட பல்வேறு சேவைகள் குறித்து விளக்கினார். முகாமை வங்கி உதவியாளர் நாராயணன் வரவேற்றார்.

    இதில் வங்கி வாடிக்கையாளர்கள் எல். சேகர், ஏழுமலை, மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மேல்நகர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

    • 10 பவுன் நகை, பணம் திருடி சென்றனர்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் அடுத்த மோட்டூர் கிராமம் ரோடு தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அருகில் உள்ள நட்சத்திர கோவில் அருகில் சைக்கிள் ஷாப் நடத்தி வருகிறார்.

    திருட்டு

    இவர் நேற்று குடும்பத்துடன் வீட்டை பூட்டிக்கொண்டு திருவண்ணாமலைக்கு துணி எடுப்பதற்காக சென்றுள்ளார்.

    மீண்டும் மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் மெயின் கேட் பூட்டப்பட்டு இருந்த நிலையில் வீட்டில் பக்கவாட்டில் உள்ள மாடி படியின் வழியாக உள்ளே வந்து மற்றொரு கேட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள்ளே சென்று பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.1.50 லட்சத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளதாக கலசப்பாக்கம் போலீசில் ரமேஷ் புகார் அளித்துள்ளார்.

    விசாரணை

    இதன் பேரில் கலசபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டம் பகலிலேயே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு நடந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • 31 ஆயிரம் டன் விளை பொருட்களை இருப்பு வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது
    • அதிகாரி தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 31 ஆயிரம் டன் விளை பொருட்களை இருப்பு வைக்க சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டு உள்ளதால் அதனை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெறலாம் என்று திருவண்ணாமலை விற்பனைக்குழு செயலாளர் மு.வே.சந்திரசேகர் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் இயங்கும் திருவண்ணாமலை விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் 18 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மற்றும் 2 துணை ஒழுங்குமுறை விற்பனைகூடங்கள் செயல்பட்டு வருகின்றது.

    ஆரணி, செய்யாறு, செங்கம், சேத்துப்பட்டு, திருவண்ணாமலை, தேசூர், வேட்டவலம், வந்தவாசி, போளூர், புதுப்பாளையம், கீழ்பென்னாத்தூர், பெரணமல்லூர், தெள்ளாறு, வாணாபுரம், தூசி, மங்களமாமண்டூர், தானிப்பாடி, கண்ணமங்கலம், ஆதமங்கலம்புதூர் மற்றும் நாயுடுமங்கலம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு நெல், மணிலா, எள், உளுந்து, பச்சைப்பயறு, கம்பு, தேங்காய், வெல்லம், ராகி, சோளம், மக்காச்சோளம் முதலிய 40 வேளாண் விளை பொருட்கள் தமிழக அரசால் அறிவிக்கை செய்யப்பட்டு உள்ளன. இந்த வேளாண் விளைபொருட்கள் மறைமுக ஏலம் மூலம் போட்டி விலையில் விற்பனை செய்து விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    உடனடி பணத் தேவைக்காக விவசாயிகளால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இருப்பு வைக்கப்படும் விளை பொருள் மதிப்பிற்கு ஏற்ப ரூ.3 லட்சம் வரை பொருளீட்டுக்கடன் வழங்கும் வசதியும் செய்யப்பட்டு உள்ளது.

    தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும் நல்ல விலை கிடைக்கப் பெறாத விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இருப்பு வைப்பதற்கு 31 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    இந்த கிடங்குகளில் முதல் 15 நாட்களுக்கு இலவசமாகவும், பின்னர் விவசாயிகளின் விருப்பத்தின் பேரில் 180 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு குவிண்டாலுக்கு 25 பைசா வாடகைக்கு இருப்பு வைத்து விலை உயரும் போது விற்பனை செய்யும் வசதிகள் உள்ளன.

    ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு உழவர் நலநிதித் திட்டம், உலர்களம் இருப்பு வைக்கப்படும் விளை பொருட்களுக்கு காப்பீடு போன்ற வசதிகள் வழங்கப்படுகிறது.

    விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் தங்கள் பொருட்களை விற்பனை செய்த பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • 2 பெண்கள் உயிருடன் மீட்பு
    • போலீசார் விசாரணை

    கலசப்பாக்கம்:

    கலசபாக்கம் அருகே வீரளூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிசங்கர். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூ ருவில் வசித்து வருகிறார். இவருடைய மகன் தனுஷ் (வயது 16), மகள் ஆர்.சந்தியா (13). சந்தியா பெங்களூ ருவில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    வீரளூர் கிராமத்தில் நடந்த உறவினர் வீட்டு காதணி விழாவில் கலந்து கொள்வ தற்காக ரவிசங்கர் குடும்பத்து டன் வந்தார்.

    மேல்சோ ழங்குப்பம் பகுதியில் உள்ள உள்ள மிருகண்டா அணையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் தற் போது அணையின் நீர் மட்டம் 18 அடியாக உயர்ந்துள்ளது.

    இதனை வேடிக்கை பார்ப்பதற்காக வீரளூர் கிராமம் அருந்ததியர் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மகன் சூர்யா (18), கவியரசன் (21), தனுசு ஆர்.சந்தியா மற்றும் குமாரின் மகள்கள் விந்தியா (16), சந்தியா (17) ஆகிய 6 பேரும் நேற்று மாலை 3 மணிக்கு சென்றனர்.

    அங்கு சூர்யா, கவியரசன், தனுசு ஆகிய 3 பேரும் அணையின் சிறிய மதகு பக்கமாக உள்புறத்தில் உள்ள தண்ணீ ரில் குதித்து நீச்சலடித்து விளையாடி உள்ளனர்.

    இதனை ஆர்.சந்தியா விந் தியா, கே.சந்தியா ஆகிய 3 பேரும் அணையின் மேல் உள்ள கல்லில் அமர்ந்து வே டிக்கை பார்த்து க்கொண்டி ருந்தனர்.

    அப்போது கல்லில் இருந்த பாசி எதிர்பா ராதவிதமாக வழுக்கி விட்டதால் 3 பெண் களும் அணையில் உள்ள தண் ணீரில் தவறி விழுந்தனர். உடனடியாக கவியரசன் விந்தியா, கே.சந்தியா இருவரை மீட்டு வெளியே கொண்டு வந்தார்.

    ஆனால் ஆர்.சந்தியா அணையில் ஏற்பட்ட அலை யின் மூலம் உள்ளே இழுத்துச் செல்லப்பட்டார். இதனால் அவரை காப்பாற்ற முடியா மல் போய்விட்டது. இதுபற்றி தகவல் அறிந்த கடலாடி போலீசார் மற்றும் போளூர் தீயணைப்புத்துறை யினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அணையில் மூழ்கிய ஆர்.சந்தியாவை பிணமாக மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத் தியுள்ளது.

    • வேறொருவருடன் திருமணம் நடந்தது
    • திருடன் என நினைத்து போலீசார் பிடித்து விசாரணை

    ஆரணி:

    ஆரணி அருகே உள்ள ஒரு கிராமத்தில் கடந்த 7-ந் தேதி அம்மனுக்கு கூழ்வார்க்கும் திருவிழா நடந்தது. அப்போது ஆரணி போலீசார் அந்த கிராமத்தில் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்த நிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் அங்குள்ள ஒரு வீட்டின் அருகே பைக் கொண்டு கேட்பாரற்று நின்று கொண்டிருந்தது. போலீசார் அருகே சென்ற போது வாலிபர் ஒருவர் சுவர் மீது ஏறி அந்த வீட்டிற்குள் குதிக்க முயன்றார். இதைப் பார்த்த போலீசார் அந்த வாலிபரை திருடன் என நினைத்து மடக்கிப் பிடித்தனர்.

    பின்னர் அவரை பைக்குடன் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    அவர் போளூர் பகுதியைச் சேர்ந்த 27 வயது வாலிபர் என தெரியவந்தது. அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை கிடைத்ததால் வாலிபர் அங்கு சென்று விட்டார். இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த இளம் பெண்ணிற்கு ஆரணி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த வேறு ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. இத்தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த வாலிபர் உடனடியாக வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்தார்.

    பின்னர் தான் காதலித்து வந்த பெண்ணிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உன்னை நேரில் சந்தித்து பேச வேண்டும் என கூறி உள்ளார். இதையடுத்து அந்தப் பெண்ணின் வீட்டிற்கு வந்து சுவர் ஏறி குதித்த போது திருடன் என நினைத்து போலீசார் பிடித்தது தெரியவந்தது.

    போலீசார் வாலிபரின் தந்தையை வரவழைத்து இதே போன்று தவறு செய்தால் உங்கள் மகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் அறிவுரை கூறி எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர்.

    • மூலவர்களுக்கு மகா தீபாராதணை நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

    செங்கம்:

    செங்கத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ஸ்ரீரிஷபேஷ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    ரிஷபேஷ்வரர், முருகன் வள்ளி, தெய்வானை சன்னதிகளில் உள்ள மூலவர்களுக்கு விசேஷ அபிஷேகங்கள் செய்து வண்ண மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதணை நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள நந்திபகவானுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்து வண்ண மலர்களால் அலங்கரித்து மகாதீபாராதனை நடைபெற்றது.

    ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    ×