என் மலர்
உள்ளூர் செய்திகள்

மிருகண்டா அணையில் வேடிக்கை பார்த்த மாணவி தவறி விழுந்து சாவு
- 2 பெண்கள் உயிருடன் மீட்பு
- போலீசார் விசாரணை
கலசப்பாக்கம்:
கலசபாக்கம் அருகே வீரளூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிசங்கர். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூ ருவில் வசித்து வருகிறார். இவருடைய மகன் தனுஷ் (வயது 16), மகள் ஆர்.சந்தியா (13). சந்தியா பெங்களூ ருவில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
வீரளூர் கிராமத்தில் நடந்த உறவினர் வீட்டு காதணி விழாவில் கலந்து கொள்வ தற்காக ரவிசங்கர் குடும்பத்து டன் வந்தார்.
மேல்சோ ழங்குப்பம் பகுதியில் உள்ள உள்ள மிருகண்டா அணையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் தற் போது அணையின் நீர் மட்டம் 18 அடியாக உயர்ந்துள்ளது.
இதனை வேடிக்கை பார்ப்பதற்காக வீரளூர் கிராமம் அருந்ததியர் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மகன் சூர்யா (18), கவியரசன் (21), தனுசு ஆர்.சந்தியா மற்றும் குமாரின் மகள்கள் விந்தியா (16), சந்தியா (17) ஆகிய 6 பேரும் நேற்று மாலை 3 மணிக்கு சென்றனர்.
அங்கு சூர்யா, கவியரசன், தனுசு ஆகிய 3 பேரும் அணையின் சிறிய மதகு பக்கமாக உள்புறத்தில் உள்ள தண்ணீ ரில் குதித்து நீச்சலடித்து விளையாடி உள்ளனர்.
இதனை ஆர்.சந்தியா விந் தியா, கே.சந்தியா ஆகிய 3 பேரும் அணையின் மேல் உள்ள கல்லில் அமர்ந்து வே டிக்கை பார்த்து க்கொண்டி ருந்தனர்.
அப்போது கல்லில் இருந்த பாசி எதிர்பா ராதவிதமாக வழுக்கி விட்டதால் 3 பெண் களும் அணையில் உள்ள தண் ணீரில் தவறி விழுந்தனர். உடனடியாக கவியரசன் விந்தியா, கே.சந்தியா இருவரை மீட்டு வெளியே கொண்டு வந்தார்.
ஆனால் ஆர்.சந்தியா அணையில் ஏற்பட்ட அலை யின் மூலம் உள்ளே இழுத்துச் செல்லப்பட்டார். இதனால் அவரை காப்பாற்ற முடியா மல் போய்விட்டது. இதுபற்றி தகவல் அறிந்த கடலாடி போலீசார் மற்றும் போளூர் தீயணைப்புத்துறை யினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அணையில் மூழ்கிய ஆர்.சந்தியாவை பிணமாக மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத் தியுள்ளது.






