என் மலர்
திருவண்ணாமலை
- பள்ளியின் சம்பந்தப்பட்டவர்களின் போட்டோக்களை காண்பித்து சிறுமியிடம் அடையாளம் காணும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.
- ஆசிரியர் காமராஜ் மீது போக்சோ உள்பட 5 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்தனர்.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த மருத்துவம் பாடி கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ். உலகம்பட்டு அரசு பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி பிரபாவதி கங்கை சூடாமணி கிராமத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி நடத்தி வருகிறார். இவர் அந்த பள்ளியின் தாளாளராக உள்ளார். காமராஜ் அடிக்கடி அவரது மனைவி நடத்தும் பள்ளிக்கு வந்து நிர்வாகத்தை கவனித்து வந்துள்ளார்.
அந்தப் பள்ளியில் யுகேஜி படிக்கும் 4 வயது சிறுமிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. சிறுமிக்கு அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் சேத்துப்பட்டு மற்றும் போளூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சிகிச்சை பெற்றனர்.
ஆனாலும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமியை சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினர் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருப்பதை தெரிவித்தனர்.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட சைல்டு லைன் பிரிவுக்கு தனியார் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது.
அவர்கள் திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனுக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதில் பள்ளிக்கு சென்ற சிறுமியை சாக்லேட் கொடுத்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து பள்ளியின் சம்பந்தப்பட்டவர்களின் போட்டோக்களை காண்பித்து சிறுமியிடம் அடையாளம் காணும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.
அப்போது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது பள்ளி தாளாளர் பிரபாவதியின் கணவர் காமராஜ் என்பது தெரிய வந்தது.
இந்த தகவல் வெளியானதும் நேற்று பள்ளி முன்பு பொதுமக்கள் திரண்டனர். இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. பள்ளி வளாகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே திருச்செந்தூர் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த காமராஜை திருவண்ணாமலை மாவட்ட போலீசார் கொடுத்த தகவலின் பெயரில் எட்டயபுரம் போலீசார் மடக்கி பிடித்தனர். அவரை போளூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் நேற்று பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள ஆசிரியர்கள் பெற்றோர் ஊழியர்கள் ஆகிய இடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.
ஆசிரியர் காமராஜ் மீது போக்சோ உள்பட 5 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அரசு பள்ளி ஆசிரியர் காமராஜ் மனைவியும் பள்ளி தாளாளருமான பிரபாவதியும் கைது செய்யப்பட்டார். ஆசிரியர் காமராஜை சஸ்பெண்டு செய்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தனியார் பள்ளி முன்பு 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. ஆசிரியர் காமராஜ், தாளாளர் பிரபாவதியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெங்களூருவில் இருந்து தண்டராம்பட்டுக்கு பால் ஏற்றி செல்வதற்காக லாரி தண்டம்பட்டு அருகே சென்று கொண்டிருந்தது.
- விபத்து குறித்து மேல் செங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கம்:
செங்கம் அருகே பால் லாரி-கார் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் காரில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வந்தாராவல்லி பகுதியை சேர்ந்தவர் சின்னப்பையன். இவரது மனைவி அவரஞ்சி. தம்பதிகளுக்கு பழனி என்ற மகன் உள்ளார்.
இவர்களது உறவினர்கள் தங்கவேலு, மகாலிங்கம் இவர்கள் அனைவரும் திருக்கோவிலூர் பகுதிக்கு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றனர். பின்னர் நிகழ்ச்சி முடிந்த பிறகு அனைவரும் வீட்டிற்கு திரும்பினர். கார் செங்கம் அடுத்த தண்டம்பட்டு அருகே வந்து கொண்டிருந்தது.
பெங்களூருவில் இருந்து தண்டராம்பட்டுக்கு பால் ஏற்றி செல்வதற்காக லாரி தண்டம்பட்டு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டது.
இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி சின்னப்பையன் மற்றும் அவரது மனைவி அவரஞ்சி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தனர். படுகாயம் அடைந்த அவரது மகன் பழனி மற்றும் உறவினர்கள் தங்கவேலு மகாலிங்கம் ஆகிய 3 பேர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனி பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மேல் செங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- யுகேஜி படித்து வந்த மாணவிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
- செல்போன் சிக்னலை வைத்து குற்றம்சாட்டப்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை:
கல்வி நிறுவனங்களில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக காவல்துறை தொடர் நடவடிக்கைகள் எடுத்து சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டாலும், குற்றங்கள் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், திருவண்ணாமலை அருகே சாக்லேட் வாங்கிக் கொடுத்து யுகேஜி மாணவியை பள்ளி தாளாளரின் கணவர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போளூர் அடுத்த கெங்கைசூடாமணி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வந்த மாணவிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாணவி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அந்த மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியிருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைத்னர்.
இச்சம்பவம் குறித்து விசாரித்தபோது, பள்ளி தாளாளரின கணவர் காமராஜ், சிறுமிக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்து பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இந்த தகவல் வெளியானதும் காமராஜ் தலைமறைவானார். அவரது செல்போன் எண் சிக்னலை வைத்து கண்காணித்தபோது, அவர் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராமசாணிக்குப்பம் பள்ளியில் நடந்தது
- பள்ளிவளர்ச்சி குறித்து ஆலோசனை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள ராமசாணிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று மாலை பெற்றோர், ஆசிரியர் கழக கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இக் கூட்டத்தில் மாணவர்களின் கல்வித்திறன், பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் பல ஆலோசனைகள் நடைபெற்றது. முடிவில் இதற்கு முன்பு பள்ளி வளர்ச்சிக்காகவும் மாணவர்கள் கல்வி வளர்ச்சிக்கும் ஆர்.வி.விஜயகுமார் (மின்சாரத் துறை ஓய்வு) என்பவர் பள்ளிக்காக பள்ளி நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்க ரூ்.50 ஆயிரம், 2 வகுப்பறைகள் டைல்ஸ் கற்கள் பதிக்க ரூபாய் 30 ஆயிரம், பள்ளி புரவலர் திட்டத்திற்கு ரூ.26ஆயிரம் பள்ளி நலனுக்காக அவர் மொத்தம் 1,06,000 ரூபாய் தந்திருக்கிறார்.
இவரை ஊராட்சி மன்றத் தலைவர் மகேஸ்வரி பார்த்தீபன், பள்ளி தலைமை ஆசிரியர்தா மரைச்செல்வி, ஓய்வு ராணுவ வீரர் க.பிரபாகரன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் வாசுகி, கல்வியாளர் ஜெயராமன், வார்டு உறுப்பினர்.பாலசுந்தரம், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பிடிஎ ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவரும் இணைந்து பாராட்டினர்.மேலும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டமும் நடைபெற்றது.
- போலீசார் விசாரணை
- மர்ம கும்பலை தேடி வருகின்றனர்
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த சளூக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். மேஸ்திரி. இவரது மனைவி காயத்ரி (வயது 27). இவர் நேற்று வீட்டை பூட்டிக் கொண்டு நிலத்திற்கு சென்று விட்டார். பின்னர் மாட்டிற்கு தண்ணீர் வைப்பதற்காக வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து காயத்ரி அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்த போது மர்ம கும்பல் பீரோவில் இருந்து 5 பவுன் தங்கச் சங்கிலி திருடி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து காயத்ரி வந்தவாசி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
- போலீசார் விசாரணை
- மது பாட்டில்கள் பறிமுதல்
வந்தவாசி :
வந்தவாசி கோட்டை காலனி பகுதியைச் சேர்ந்தவர் முகமது பாஷா (வயது 44).
இவர் கோட்டை காலனி பகுதியில் உள்ள அய்யனாரப்பன் கோவில் அருகே முட்புதரில் மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதை அடுத்து வந்தவாசி தெற்கு நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மது விற்பனை செய்த முகமது பாஷாவை கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் வந்தவாசி அடுத்த மேல்பாதி கிராம ஏரிக்கரை அருகே மது விற்பனை செய்வதாக வடவணக்கம்பாடி போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மது விற்ற ஜமாலுதீன் (54) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் விசாரணை
- கட்டுபாட்டை இழந்து மோதியது
சேத்துப்பட்டு:
காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 53). இவர் அரசு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவர் காஞ்சிபுரத்தில் இருந்து மேல் மலையனூருக்கு 30 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
பஸ்சை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் (42) என்பவர் ஓட்டி சென்றார். அப்போது சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் அருகே வந்து கொண்டிருந்தது. அந்தப் பகுதியில் சாலையோரம் பழுதாகி சரக்கு லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் திடீரென நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் திருநாவுக்கரசு படுகாயம் அடைந்தார்.
அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு காயமின்றி உயிர் தப்பினர்.
- சத்துணவை ருசித்து பார்த்தார்
- மேற்கூரை சேதமடைந்ததை சரி சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் போளுர் சட்டமன்றத் தொகுதி, சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றியம் தேவிமங்கலம் ஊராட்சி பரிக்கல்பட்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைச் செயலாளரும், போளூர் எம்.எல்.ஏ. அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது பள்ளியின் மேல்கூரைகள் சேதமடைந்ததை சரி சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு மையத்துக்கு சென்று பார்வையிட்டு சாப்பாட்டை ருசித்து பார்த்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
- விதவிதமான விநாயகர் சிலைகள் தயார்
- மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தலின்படி செய்து வருகின்றனர்
வந்தவாசி:
வந்தவாசியில் விநாயகர் சதுர்த்தி யொட்டி விநாயகர் சிலை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி வருகின்ற 31-ந் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.
இதைத் தொடர்ந்து விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்கள் விதவிதமான விநாயகர் சிலைகள் மும்முரமாக செய்து வருகின்றனர். 5 முக விநாயகர், விஷ்ணு விநாயகர் உள்ளிட்ட 3 அடி முதல் 10 அடி உயரம் வரையில் விநாயகர் சிலைகள் தயாராகி வருகிறது.
இந்த சிலைகள் ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரையில் விநாயகர் சிலைகள் விற்கப்படுகிறது.
தற்போது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தலின்படி தண்ணீரில் எளிதாக கரைக்கும் வகையிலும் தண்ணீர் மாசு படாமல் இருக்க பேப்பர் கூழ் கொண்டு சிற்பக் கலைஞர்கள் விநாயகர் சிலைகளை செய்து வருகின்றனர்.
- சரவணன் எம்.எல்.ஏ. ஆய்வு
- விரைவில் திறக்க ஏற்பாடு
திருவண்ணாமலை:
கலசபாக்கம் அடுத்த பெரியகிளம்பாடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பஞ்சாயத்து அலுவலக வளாகம் மற்றும் காரியமேடையை சரவணன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் பேசியதாவது :-
கீழ்ப்பனவத்தூர் தொகுதியில் எனது சொந்த கிராமம் வந்தாலும் துணை சபாநாயகர் பிச்சாண்டி எனது கிராமத்தை தன்னிறவு அடையும் வகையில் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பணிகளை தந்துள்ளார்.
அதன் அடிப்ப டையில் புதிதாக ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் பஞ்சாயத்து அலுவலகமும், ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் காரிய மேடையும் தற்போது கட்டப்பட்டு வருகிறது.
இப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு அமைச்சர் எ.வ வேலு முன்னிலையில் கூடிய விரைவில் திறக்கப்பட உள்ளது.
மேலும் பஞ்சாயத்துக்கு தேவையான அடிப்படை வசதிகள் முக்கிய தேவைகள் மக்கள் வைக்கும் கோரிக்கைகள் அடிப்படையில் விரைவாக நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பேசினார்
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் காயத்திரி, துணைத்தலைவர் ராமன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- சட்டமன்றபொதுக் கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை பேட்டி
- மாநில விதைப்பண்ணையிலும் ஆய்வு செய்தார்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 2021-2023-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்கு குழு ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சட்டமன்றபொதுக் கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆய்வில் வேளாண் உழவர் நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, சுற்றுலா, பண்பாடு அறநிலையங்கள் துறை, வணிக வரி மற்றும் பதிவுத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நீர்வளத்துறை ஆகிய துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு அதற்கான பயன்பாடு குறித்து விரிவான அறிக்கையினை அவர் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கு சில வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கின்றன. இந்த நெறிமுறைகளை கடந்த ஆட்சி காலத்தில் பின்பற்றாமல் பள்ளிகளை தரம் உயர்த்தி உள்ளார்கள்.
இதனால் அரசுக்கு கோடிகணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதைபற்றி கூட்டத்தில் விவாதித்து உள்ளோம். அதேபோன்று தற்போது உள்ள பள்ளிகளை தரம் உயர்த்துவது கடந்த காலங்கள் போன்று இல்லாமல் தற்போது உள்ள அரசு வழிகாட்டுதல் முறைப்படி தரம் உயர்த்த வேண்டும் என்று அறிவுரை வழங்கி உள்ளோம்.
பெண் கன்றுகளுக்கு சரியான முறையில் தடுப்பூசி போடவில்லை என்று கண்டறியப்பட்டு இனிவரும் காலங்களில் முறையாக தடுப்பூசி போட வேண்டும் என்று கால்நடை துறைக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்கள் இந்த மாவட்டத்தில் இருக்கின்றன. அவை சரியான முறையில் நிதி ஒதுக்கியும் சரியாக பராமரிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் குறை தெரிவித்து உள்ளனர்.
பத்திரப்பதிவு துறையில் அதிகாரிகள் தெரிவித்த பின்னர் வரி வசூல் செய்யும் நடைமுறை பிற்காலத்தில் இருக்க கூடாது என்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதேபோன்று சிறு விவசாயிகளுக்கு மானியத் தொகையில் டிராக்டர்கள் வழங்கப்படுகிறது.
இந்த டிராக்டர்கள் சம்பந்தப்பட்டவர் 4 ஆண்டுகள் பயன்படுத்த வேண்டும். மானியத்தை வாங்கி டிராக்டர் வாங்கி விட்டு 2 ஆண்டுகளில் டிராக்டர்களை விற்பனை செய்து உள்ளனர். அவர்கள் அந்த மானிய தொகையை அரசுக்கு திரும்ப செலுத்த வேண்டும். இது குறித்து வேளாண்மை செயலரிடம் கொண்டு செல்ல உள்ளோம்.
அதனை வசூல் செய்யவில்லை என்றால் கிரிமினல் நடைமுறை சட்டத்தின் படி வழக்காக கொண்டு செல்லப்படும். நீர்வளத்துறையில் செங்கம் எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ள திட்டங்களை பரிந்துரை செய்ய உள்ளோம்.
கழிக்குளம் அரசு பள்ளி சேதமடைந்து உள்ளதால் அதனை செப்பனிட பரிந்துரை செய்து உள்ளோம். திருவண்ணாமலையில் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்த போது தமிழகத்திலேயே இல்லாத அளவிற்கு 6, 7 ஆண்டுகளாக 100 சதவீதத்திற்கு மேல் பள்ளிகளில் மாணவிகளை சேர்த்து உள்ளனர்.
இது கல்வி கண்ணை திறந்த காமராஜருக்கு பெருமை தேடி தந்த மாவட்டமாக உள்ளது. பள்ளிக்கல்விதுறையில் திருவண்ணாமலை மாவட்டம் சிறப்பாக உள்ளது என்று இது ஒரு எடுத்துகாட்டாக உள்ளது.
மேலும் பள்ளியில் சேர பல மாணவிகள் விருப்பம் தெரிவித்து உள்ளதால் அந்த பள்ளியில் சிறப்பு நிதியின் மூலம் புதிய கட்டிடங்கள் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
கடந்த ஆட்சி காலத்தில் கடல் அளவில் ஊழல் நடைபெற்று உள்ளது. மருந்து, ஆவின் பால், ஸ்மார்ட் சிட்டியில் ஊழல் என எல்லாத்திலும் ஊழல் செய்து உள்ளனர். திட்டமிடாமல் பல திட்டங்களை அவர்கள் செயல்படுத்தி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அவர் திருவண்ணாமலை நகராட்சி மாதிரி பெண்கள் மேநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு முறை குறித்தும், உணவுப் பொருட்கள் இருப்புவிவரம், இருப்பு பதிவேட்டின் விவரம், வருகை பதிவேட்டின் படி மாணவர்களின் எண்ணிக்கை, மாணவிகளின் கல்வித் தரம் பற்றியும், மாணவியர்களிடம் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின் விளக்குகள், மின்விசிறிகள், மின்சார சாதனங்கள் பயன்பாட்டில் உள்ளதா என்றும் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து அத்தியந்தல் கிராமத்தில் உள்ள மாநில விதைப்பண்ணையிலும் ஆய்வு செய்தனர்.
- செய்யாறு தண்டரை அணைக்கட்டு நிரம்பி வழிகிறது
- விவசாயிகள் மகிழ்ச்சி
செய்யாறு:
செய்யாறு பகுதியில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
ெசய்யாற்றின் கிளை நதிகளான ஆரணி கமண்டல நாக நதி, கிளியாறு போன்ற ஆறுகள் மூலம் ஏற்பட்ட மழை நீர் செய்யாற்றில் கலந்து நீர்வரத்து செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தண்டரை அணைக்கட்டு வழிந்தோடுகிறது.
தண்டரை அணைக்கட்டில் இருந்து மாவட்டத்திலேயே மிகப்பெரிய ஏரியான மாமண்டூர் ஏரிக்கு கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் 16 ஏரிகள் நீர் நிரம்புவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






