என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் அரசு கட்டிடங்கள்
    X

    கலசப்பாக்கம் அடுத்த பெரியகிளம்பாடி பஞ்சாயத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் காரியமேடையை சரவணன் எம்எல்ஏ பார்வையிட்ட போது எடுத்த படம்.

    ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் அரசு கட்டிடங்கள்

    • சரவணன் எம்.எல்.ஏ. ஆய்வு
    • விரைவில் திறக்க ஏற்பாடு

    திருவண்ணாமலை:

    கலசபாக்கம் அடுத்த பெரியகிளம்பாடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பஞ்சாயத்து அலுவலக வளாகம் மற்றும் காரியமேடையை சரவணன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது :-

    கீழ்ப்பனவத்தூர் தொகுதியில் எனது சொந்த கிராமம் வந்தாலும் துணை சபாநாயகர் பிச்சாண்டி எனது கிராமத்தை தன்னிறவு அடையும் வகையில் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பணிகளை தந்துள்ளார்.

    அதன் அடிப்ப டையில் புதிதாக ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் பஞ்சாயத்து அலுவலகமும், ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் காரிய மேடையும் தற்போது கட்டப்பட்டு வருகிறது.

    இப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு அமைச்சர் எ.வ வேலு முன்னிலையில் கூடிய விரைவில் திறக்கப்பட உள்ளது.

    மேலும் பஞ்சாயத்துக்கு தேவையான அடிப்படை வசதிகள் முக்கிய தேவைகள் மக்கள் வைக்கும் கோரிக்கைகள் அடிப்படையில் விரைவாக நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பேசினார்

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் காயத்திரி, துணைத்தலைவர் ராமன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×