என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ganesha statue work"

    • விதவிதமான விநாயகர் சிலைகள் தயார்
    • மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தலின்படி செய்து வருகின்றனர்

    வந்தவாசி:

    வந்தவாசியில் விநாயகர் சதுர்த்தி யொட்டி விநாயகர் சிலை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி வருகின்ற 31-ந் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்கள் விதவிதமான விநாயகர் சிலைகள் மும்முரமாக செய்து வருகின்றனர். 5 முக விநாயகர், விஷ்ணு விநாயகர் உள்ளிட்ட 3 அடி முதல் 10 அடி உயரம் வரையில் விநாயகர் சிலைகள் தயாராகி வருகிறது.

    இந்த சிலைகள் ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரையில் விநாயகர் சிலைகள் விற்கப்படுகிறது.

    தற்போது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தலின்படி தண்ணீரில் எளிதாக கரைக்கும் வகையிலும் தண்ணீர் மாசு படாமல் இருக்க பேப்பர் கூழ் கொண்டு சிற்பக் கலைஞர்கள் விநாயகர் சிலைகளை செய்து வருகின்றனர்.

    ×