என் மலர்
திருவண்ணாமலை
- காணொளி காட்சி மூலம் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்
- ஜோதி எம்.எல்.ஏ. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரில் பிரசித்தி பெற்ற பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில் அருகில் உள்ளது.
இந்த கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபம் வளாகத்தில் 6 வணிக கடைகள் கட்டுவதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
கோவில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி பூமி பூஜை செய்தனர். பூஜையில் ஜோதி எம்.எல்.ஏ. பங்கேற்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
நகர மன்ற தலைவர் மோகனவேல், ஒன்றிய குழு தலைவர்கள் பாபு, ராஜி, திலகவதி, ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசன், ஞானவேல், நகராட்சி ஆணையாளர் ரகுராமன், கவுன்சிலர்கள் கார்த்திகேயன், கங்காதரன், இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, ஆய்வாளர் முத்துசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பீரோவை உடைத்து துணிகரம்
- போலீசார் விசாரணை
வெம்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா ஆக்கூர் கிராமத்தைச் சேர்ந்த தாந்தோணி அம்மாள் வயது 50 பூ வியாபாரம் செய்து வருகிறார்.
இவருக்கு இரு மகள்கள் உள்ளனர் தனியாக இருக்கும் தாந்தோணி அம்மாள் கடந்த 22-ந்தேதி தனது வீட்டை பூட்டிக்கொண்டு பூ வியாபாரத்துக்கு சென்னை சென்றுள்ளார்.
மீண்டும் நேற்று காலை 7 மணி அளவில் வீட்டுக்கு வந்தார் வீட்டைத் திறந்து உள்ள சென்றபோது பீரோ உடைத்து திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பீரோவில் இருந்த ரூ.55 ஆயிரமும் வீட்டு உபயோக பொருட்களை மர்ம கும்பல் கொள் ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து தாந்தோணி அம்மாள் தூசி போலீஸ் நிலையத் தில்புகார் செய்தார் தூசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ரூ.14 லட்சம் கடனுக்கு ரூ.71 லட்சம் வட்டி கேட்டனர்
- 4 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்கு
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் கார்த்திகேயன் சாலை பகுதியை சேர்ந்தவர் அகிமா பீபி. இவருக்கு மமுதா, சுவேதா என 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் அகிமா பீபி நேற்று தனது மகள்களை அழைத்துக்கொண்டு ஆரணி உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அலுவலகம் முன்பு தான் கேனில் கொண்டு வந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அலுவலக ஊழியர்கள் அகிமா பீபியிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்து, அவர் மீது தண்ணீரை ஊற்றி அமர வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த உதவி கலெக்டர் தனலட்சுமி மற்றும் ஆரணி டி.எஸ்.பி ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் அகிமா பீபி அவரது மகள்களிடம் விசாரணை நடத்தினர்.
கடந்த 2017-ம் ஆண்டு சந்தவாசலை அடுத்த கேசவபுரம் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ 10 லட்சமும், அதனைத் தொடர்ந்து 2018 -ம் ஆண்டு மீண்டும் 3 லட்சமும், 2020-ம் ஆண்டு ரூ.1 லட்சமும் வாங்கி உள்ளனர்.
வாங்கிய கடனுக்கு பணம் கொடுத்தவர்கள் வீட்டை அடமானம் போட்டுக் கொள்வதாக கூறி பத்திரப்பதிவு அலுவலகத்தில் வீட்டை அவர்கள் பெயருக்கு எழுதிக் கொண்டுள்ளனர். இதற்கு உடந்தையாக ஆரணி, களத்து மேட்டு தெருவை சேர்ந்த உறவினர் மற்றும் சிலர் ரூ.14 லட்சத்திற்கு ரூ. 85 லட்சம் கேட்டு குடும்பத்தில் உள்ளவர்களை மிரட்டி வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடனை திருப்பிக் கொடுக்காததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொக்லைன் எந்திரத்துடன் வீட்டை இடிக்க வந்தபோது அவர்களுடன் தகராறு ஏற்பட்டு அகிமா பீபி குடும்பத்தாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக ஆரணி டவுன் போலீஸ் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் உதவி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.
இதையடுத்து அகிமா பீபி கொடுத்த புகாரின் பேரில் கடன் கொடுத்து மிரட்டியவர்கள் மீது கொலை மிரட்டல், வீடு சேதபடுத்துதல், தாக்குதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணியில் ரூ.14 லட்சம் கடனுக்கு ரூ.71 லட்சம் வட்டியாக கேட்டதால் பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செங்கம்:
புதுப்பாளையம் உள்வட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதூர் செங்கம் கிராமத்தில் உள்ள புதூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் திருமண மண்டபம் கட்ட காணொளி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மேற்கண்ட கோவில் வளாகத்தில் நடைபெற்ற பூமி பூஜை விழா நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி, திருவண்ணாமலை அண்ணாதுரை எம்.பி., கலசப்பாக்கம் சரவணன் எம்.எல்.ஏ, புதுப்பாளையம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் சுந்தரபாண்டியன், நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை பரம்பரை கோவில் அறங்காவலர்கள் ஜெயக்குமார் மற்றும் வெங்கட்ராமன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் இணை ஆணையர், செங்கம் தாசில்தார், முனுசாமி புதுபாளையம் வருவாய் ஆய்வாளர் (பொ), சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர்கள், செங்கம் இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர், ஊர் முக்கியஸ்தர்கள் தலைவர் சங்கர், தொண்டரணி குமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பரவலாக மழை பெய்து வருகிறது
- தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என விவசாயிகள் மகிழ்ச்சி
கண்ணமங்கலம்:
தமிழகத்தில் கடந்த 6 மாதங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரிகள், குளங்கள் தண்ணீர் நிரம்பிய நிலையில் உள்ளது.
குறிப்பாக கண்ணமங்கலம் பகுதியில் உள்ள ஏரி, இதனருகே உள்ள குளம் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாகியும் தண்ணீர் வற்றாமல் நிரம்பிய நிலையில் உள்ளது. மேலும் அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வரும் மழை காரணமாக கண்ணமங்கலம் வழியாக செல்லும் நாகநதி ஆற்றில் தண்ணீர் வற்றாமல் உள்ளது.
இனி வரும் ஐப்பசி, கார்த்திகை மாதங்களும் மழை மாதம் என்பதால் தண்ணீர் பற்றாக்குறை இருக்க வாய்ப்பில்லை என மக்களிடையே கருத்து நிலவி வருகிறது.
- வௌி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்தனர்
- நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வழக்கமாக விடுமுறை நாட்களில் பல்வேறு பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இன்று அதிகாலையில் இருந்து உள்ளூர் மட்டுமின்றி வௌி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
- சாத்தனூர் அணையில் தண்ணீர் திறப்பு
- கடந்த 3 வாரங்களாக நீர்வரத்து அதிகரிப்பு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணைக்கு கடந்த 3 வாரங்களாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது.
கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு மற்றும் தென் பெண்ணையாறு நீர்பிடிப்பு பகுதியில் கனமழை காரணமாக நீர்வரத்து ஏற்பட்டது. இதனால், சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதனால் தென் பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சாத்தனூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்தது. 119 அடி உயரம் கொண்ட அணையில் நீர்மட்டம் 117 அடியாக தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது.
அணையில் இருந்து கடந்த 26-ம் தேதி விநாடிக்கு 2,800 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில், நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று முன்தினம் (27-ந் தேதி) மாலை விநாடிக்கு 4,250 கனஅடி வெளி யேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், அணைக்கு வரும் நீர்வரத்து சற்று குறைந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 3,464 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே வெளி யேற்றப்படுகிறது.
அணையில் 6,875 மில்லியன் கனஅடி தண்ணீர்இருப்பு உள்ளது. அணை பகுதியில் 12.2 மி.மீ., மழை பெய்துள்ளது. தென்பெண்ணையாற்றில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
ஆற்றில் குளிக்கவும், கால்நடைகளை பராமரிக்கவும் வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.
59.04 அடி உயரம் உள்ள குப்பநத்தம் அணையின் நீர்மட்டம் 57 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் 644.30 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. 92 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு விநாடிக்கு 156 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 100 கனஅடி தண்ணீர் செய்யாற்றில் வெளி யேற்றப்படுகிறது.
62.32 அடி உயரம் உள்ள செண்பகத்தோப்பு அணையில் நீர்மட்டம் 49.40 அடியாக உள்ளது.
- 2 வருடங்களுக்கு பிறகு சிலைகளை அமைத்து வழிபட அனுமதி
- முன்னேற்பாடு பணிகள் குறித்து போலீசாருக்கு அறிவுரை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும் பகுதிகளில் வேலூர் சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) சத்தியபிரியா ஆய்வு செய்தார். விநாயகர் சதுர்த்தி விழா திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி (புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது.
வழக்கமாக விநாயகர் சதுர்த்தியன்று முக்கிய பகுதிகளில் இந்து அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்வார்கள்.
கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக விநாயகர் சிலைகள் அமைத்து வழிபட தடை விதிக்கப்பட்டு இருந்தது. 2 வருடங்களுக்கு பிறகு இந்த ஆண்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை அமைத்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
எனவே இந்த ஆண்டு வழக்கத்தைவிட கூடுதல் உற்சாகத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி விநாயகர் சிலைகளை அமைக்க விரும்புவோர் முன்அனுமதி பெற வேண்டும் என்றும், அனுமதிக்கப்படும் இடங்களில் மட்டுமே சிலைகளை அமைக்க வேண்டும் என்றும், அனுமதிக்கப்படும் வழிதடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்தப்படும் என்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் 1,008 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைத்து வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 3 அடி முதல் 10 அடி வரை விநாயகர் சிலைகள் அமைத்து வழிபாடு நடத்தப்பட உள்ளதாக இந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் அருண்குமார் தெரிவித்தார். தொடர்ந்து வருகிற 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 2.30 மணியளவில் திருவண்ணாமலை காந்திசிலை அருகிலிருந்து இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விஜர்சன விழாவையொட்டி புறப்படும் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று தாமரை குளத்தில் நிறைவடையவுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றபோது இருதரப்பினர் கோஷ்டி மோதல் காரணத்தினால் கலவரம் ஏற்பட்டது.
இதுபோன்று எந்தவித அசம்பவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து வேலூர் சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) சத்தியபிரியா திருவண்ணாமலையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் போலீசாருக்கு அவர் அறிவுரை வழங்கினார்.
ஆய்வின் போது துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
- நாங்கள் இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்தே கிணற்று நீரையோ, ஆழ்துளைக் குழாய் நீரையோ உபயோகித்ததே இல்லை.
- மழை பெய்யத் தொடங்கியதும் வீட்டுக் கூரை மேல் உள்ள அழுக்கு அனைத்தும் சில நிமிடங்களில் போய்விடும்.
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த கீழ்சீசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோதையான்(76). இவரது மனைவி ராணியம்மாள்(72). இவர்களுக்கு 2 ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் அதே கிராமத்தில் உள்ள தங்களது விவசாய நிலத்தில் கோதையான்-ராணியம்மாள் தம்பதியினர் வீடு கட்டி குடும்பத்துடன் அங்கு வசிக்க சென்றனர். அப்போதிலிருந்தே இவர்கள் குடிக்கவும், சமையல் செய்யவும் மழைநீரையே பயன்படுத்தி வருகின்றனராம். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
நாங்கள் இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்தே கிணற்று நீரையோ, ஆழ்துளைக் குழாய் நீரையோ உபயோகித்ததே இல்லை. மழைநீரை மட்டுமே சேமித்து உபயோகிக்க தொடங்கினோம். மழை பெய்யும் போதெல்லாம் பேரல்கள், அண்டாக்கள், சிறுசிறு பாத்திரங்கள் என அனைத்திலும் மழைநீரை சேமித்து வைத்துக் கொள்வோம்.
மழை பெய்யத் தொடங்கியதும் வீட்டுக் கூரை மேல் உள்ள அழுக்கு அனைத்தும் சில நிமிடங்களில் போய்விடும். இதன் பின்னர் கூரையிலிருந்து வழியும் சுத்தமான நீரை பிடித்து சேமித்து வைத்துக் கொள்வோம். பின்னர் அந்த நீரை வடிகட்டி காய்ச்சி பயன்படுத்துவோம்.
மழைநீரை எவ்வளவு நாள் சேமித்து வைத்தாலும் அதில் புழு, பூச்சிகள் அண்டாது. மழைநீரை மட்டுமே உபயோகிப்பதால் உடல்நல பாதிப்பு எதுவும் இல்லாமல், மருத்துவர்களை அணுகாமல் வாழ்ந்து வருகிறோம்.
எங்களை பார்த்து அருகிலுள்ள வீட்டினர் மழைநீரை சேமித்து உபயோகப்படுத்த தொடங்கியுள்ளனர். இது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.
மழைநீரை உயிர்நீர் என்பர். இறைவனின் அற்புத படைப்புக்களில் ஒன்றான மழைநீரை சேமித்து பயன்படுத்தும் இந்த தம்பதி தங்கள் கிராமத்துக்கே பெருமை சேர்த்துள்ளனர் என்று அந்த கிராமத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
- வியாபாரி கைது
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி தெற்கு நிலைய போலீசார் கோட்டை மூலை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த வியாபாரியை மடக்கி சோதனை செய்தனர்.
அதில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருந்தது.
விசாரணையில் வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவரது வீட்டில் சோதனை நடத்தி ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான போதை பொருட்களை பறிமுதல்செய்தனர்.
இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.
- ஆட்சிமன்ற குழுக் கூட்டத்தில் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
- அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் ஆட்சிமன்றகுழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. சட்டமன்ற துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பேசுகையில்:-
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் - 2 நூலக கட்டிடங்கள் புதுப்பித்தல் பணி திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஒன்றியங்களிலும் 2021-2022-ம் ஆண்டிற்கு 287 நூலக கட்டிடங்களை புனரமைப்பு பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.
கூட்டத்தில் போளூர் எம்.எல்.ஏ. அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், போளூர் ரெயில்வே மேம்பால பணிக்கு வருவாய்த் துறையினர் நிலத்தை உடனடியாக ஆர்ஜிதம் செய்து ரெயில்வே துறையிடம் ஒப்படைக்காத காரணத்தால் இப்பணி தாமதமாக நடைபெற்ற வருகின்றது.
இதனால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதற்கு உடனடியாக கலெக்டர் தனிக் கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் இனாம்காரியந்தல், கண்ணமங்கலம் அருகில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடிகளில் சுங்கவரி கட்டணம் வசூல் செய்வதை நிறுத்தி அதனை எடுக்க அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
போளூர் தொகுதிக்கு உட்பட்ட ஆவணியாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பணிகள் செய்து முடிக்கப்பட்டு அதற்கான பில் தொகையை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு திட்டப்பணிகளுக்கு பயனாளிகளை தேர்வு செய்யும் போது சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கும் தகவல் தொிவிக்க வேண்டம். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி, அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சேவூர்.எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் பார்வதி சீனிவாசன், மாவட்ட வன அலுவலர் அருண்லால், ஊரக வளர்ச்சி செயற்பொறியார் ராமகிருஷ்ணன், ஒன்றியக்கு ழுத்தலைவர்கள், பேரூராட்சித்தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- அம்மன் கமண்டல நதியில் எழுந்தருளினார்
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் ஆறாம் வெள்ளி விழா நடைபெற்றது. இதைமுன்னிட்டு அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் கியூ வரிசையில் சென்று அம்மனை தரிசனம் செய்தனர்.
பொதுவாக ஆறாம் வெள்ளியன்று ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். ஆனால் அமாவாசை என்பதால் பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது என உள்ளூர் பக்தர் ஒருவர் தெரிவித்தார். மாலையில் நாதஸ்வர கச்சேரியும் நடைபெற்றது. இரவில் உற்சவ அம்மனுக்கு கமண்டல நதியில் தீர்த்தவாரி செய்து, ராஜராஜேஸ்வரி அலங்காரம் முத்து ரதத்தில் உற்சவம் நடைபெற்றது.
மேலும் ராகமாலிகா குழுவினர் இன்னிசை கச்சேரியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
அவருடன் போளூர் ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெருமாள், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், முன்னாள் எம் எல் ஏ ராஜேந்திரன், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ஆர்.வி.சேகர், ஒன்றிய கவுன்சிலர் மனோகரன், முன்னாள் கவுன்சிலர் தங்கமணி உள்பட பலர் வந்திருந்தனர்.
அம்மன் உற்சவம் மாடவீதி உலாவில் கரகாட்டம், நையாண்டி மேளம் உள்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை திருவண்ணாமல மண்டல இணை ஆணையர் க.பெ.அசோக்குமார் உத்தரவின் பேரில், உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, செயல் அலுவலர் சிவஞானம் மற்றும் கோயில் அலுவலர்கள் செய்து இருந்தனர்.






